"அரியது கேட்கின்" நாவல் அத்தியாயம் 1
"அரியது கேட்கின்"
1. முகம்
“நல்ல சாவு பாத்தியாக்கா, ஓரு வலிவேதனை இல்ல, ஒரு நோய் நொடின்னு படுக்கல, மதியம் சாப்டுட்டு படுத்த மனுசன் தூக்கத்துலேயே செத்துட்டாராம்”
முற்றத்தைப் பெருக்கிக்கொண்டு எதிர்வீட்டு வனஜாவுடன் பேசிக்கொண்டிருந்தாள் பவானி.
தெருவில் வருவோரும் போவோரும் பவானி கூறும் கதையைக் கேட்டுக்கொண்டு துக்கத்தை முகத்தில் ஏந்திச் சென்றனர்.
“நல்ல மனுசன். யாரு முகத்தையும் ஏறெடுத்து பாக்கமாட்டாரு, குனிஞ்சாப்புலே போவாரு காலைல ஒரு நாலு நாலரைக்கெல்லாம் எழுந்து கடைக்குப் போய், அடுப்ப தொடச்சி பத்தவச்சிட்டு வியாபாரத்தை ஆரம்பிச்சாருன்னா கால சாப்பாட்டுக்கு ஒம்பது மணிக்குத்தான் வருவாரு, அப்புறம் மதியம் ரெண்டு மணிக்கெல்லாம் மதிய சாப்பாடுக்கு வந்தா சாப்பிட்டு முடிச்சி மூணு மூணரைக்கு மறுபடியும் போவாரு",
"இன்னிக்கி அப்படி சாப்பிட்டு படுத்தவரு தான். எழும்பவே இல்ல, என்னத்த சொல்லுறதுக்கு.? மனுச வாழ்க்கைய."
“இங்க அடக்கம் பண்றாங்களா, இல்ல காட்பாடிக்கே கொண்டுபோறாங்களான்னு தெரியல, அவங்களுக்கு சொந்தம்மின்னு சொல்லிக்கவும் இங்க யாரு இருக்கா?"
"சொந்தமா தறி போட்டு நெசவு பண்ணிட்டு இருந்தவங்க, மூத்தவ துர்கா டைடல் பார்க்ல ஒரு கம்பெனில பெரிய வேலைல இருக்கால்ல, அவள கவனிச்சிக்கிறதுக்கும், சின்னவன் வேலைக்காகவும் மூணுவருசத்துக்கு முன்னாடிதான் இங்க குடிவந்தவங்க, எங்க வீட்டுக்கார்தான் இந்த வீடு பிடிச்சுக் கொடுத்ததும். இங்க வந்தப்பறம் தான் ரெண்டாவது பொண்ணு சரண்யாவுக்கு கல்யாணம் பண்ணிவைச்சாரு",
"மூத்தபொண்ணு இருக்கும்போதே ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் நடத்தியிருந்தாலும், வீட்ல மொத விஷேசமின்னு நல்ல விமரிசையாதான் செஞ்சாரு”.
“எட்டுமணிக்கெல்லாம் அவருதான் மூத்தவள ஸ்கூட்டர்ல உக்காரவச்சி பஸ் ஸ்ட்டாப்ல இறக்கிவிடுவாரு, அவளுக்கு போவதுக்கும் வாரத்துக்கும் ஆபீஸ் பஸ் உண்டும்".
"மூத்தவ முப்பது முப்பத்தஞ்சு பக்கம் வாங்குவான்னு நெனைக்கேன்".
"சின்னவன் சந்தோஷ் இங்க குன்றத்தூர் பக்கத்துல ஒரு கம்பெனில வேலை பாக்கறான். அவனும் பத்து பன்னெண்டு சம்பளம் வாங்குவான் அந்த வருமானத்த வச்சுத்தான் விட்டுவாடகையும் குடும்பத்தையும் கழிக்கிறா".
"அந்த வேம்பரசி அக்காதான் பாவம்.
இனி என்ன செய்யப்போறாளோன்னு கவலையா இருக்கு".
“ஓ...” ன்னு அந்த அக்கா சத்தம் கேட்டுத்தான் தெருவுல இருக்குற எல்லாரும் போய் பாத்தோம்,
"பாத்தா, மனுசன் போதமில்லாம கெடந்தாரு. உடனே அந்த அக்காதான், டீக்கடையில வேல பாக்குற கணேசனுக்கு போன் பண்ணா,
" 'ஏய் தம்பி இங்க வா இவரு பேச்சு மூச்சு இல்லாம கெடக்காரு வா' ன்னா. அவனுகளும் கடைய மூடிட்டு அடிச்சி பிடிச்சி ஓடி வந்து, ஆட்டோல ஏத்தி ராமச்சந்திரா ஆஸ்பத்திரி கூட்டிப்போனானுக",
"அங்கப்போனா உயிர் போயி அரைமணி நேரம் மேல ஆச்சின்னுட்டாங்க. எதோ ஹார்ட் ஆட்டக்காம். இங்க வர வரத்தான் ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு தகவலா சொல்லிட்டு இருக்காங்க".
"ரெண்டாவது பொண்ண அவங்க அண்ணன் மகனுக்குத்தான கட்டிக் கொடுத்திருக்கு, அவங்க வேலூர்ல இருந்து வரணும்".
"வேம்பரசியக்காவோட தங்கச்சி எழிலரசி சைதாப்பேட்டையில இருக்கா, அவளும் இப்பதான் இங்கன வந்தா. மத்த காரியங்கள் எல்லாம் அவங்க ஆட்களெல்லாம் வந்தாதான் தெரியும்" என வனஜாவின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லியவாறு, முற்றத்தைப் பெருக்கி வாசலில் நீர் தெளித்துவிட்டிருந்தாள் பவானி.
~~
வருவோரும் போவோருமாய் வீதி நிறைந்திருந்தது. ஐயப்பன் தாங்கல் டெப்போவிற்கு எதிரே செல்லும் ஆயில்மில் ரோட்டில் மூன்றாவது தெருவில் இருக்கும் சக்திவேல் வீட்டிற்கு அம்புலன்ஸ் வந்து நின்றது. கடையில் வேலைபார்க்கும் கணேசனும் சண்முகமும் ஆம்புலன்ஸிலிருந்த உதவியாளரோடு இறந்த உடலைத் தூக்கிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தார்கள்.
காம்போவுண்டு சுவரிட்ட சிமெண்டு வீடு, தரைத்தளத்தில் சக்திவேலின் குடும்பம் இருந்தது. வீட்டு ஓனர் முதல் தளத்தில் குடியிருந்தார். கணேசன் விட்டு ஹாலில் இருந்த கட்டில் செயர் எல்லாவற்றையும் வீட்டிற்கு வெளியே அடுக்கி வைத்துவிட்டு, ஹாலின் சுவரோரத்தில் போர்வையை விரித்து வடக்கு தலை பார்க்க சக்திவேலின் உடலைக் கிடத்தினான் கணேசன்.
எழிலரசியும் அக்கம் பக்கத்தினரும் வேம்பரசியை விழாது தாங்கி பிடித்து வீட்டில் அமரவைத்தனர்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சந்தோஷுக்கு மட்டும் தகவல் தெரிவித்திருந்தான் கணேசன்.
மூன்று வருடங்களாக டெப்போவிற்கு அருகில் தேனீர் கடை வைத்திருப்பதால் வணிகசங்கத்தினரும், சில லோக்கல் பிரமுகர்களும் வந்திருந்தனர். சாவு வீட்டிற்கேயான அமைதியும் இரைச்சலும் கலந்தேயிருத்தது அந்நேரம் அவ்வீதி.
ஓர் மனிதனின் வாழ்க்கையை இறப்பில்தான் இன்னும் அழுத்தமாக நினைவுகூருகிறோம்.
வேம்பரசியின் அழுகை நீண்ட விம்மலாய் மாறி இருந்தது. கணேசன் செய்வதறியாது திகைத்தபடி நின்றிருந்தான். வாசலுக்கு வெளியில் நின்று கொண்டிருந்த சண்முகத்தை அழைத்து "லேய். நீ கடைக்குப் போய் இருக்குற பால பெரிய ட்ரம்முல ஊத்தி கொண்டுவா, பந்தல் காரங்க நம்பர் கடை டைரியில இருக்கும், அவங்களுக்கு தகவல் சொல்லு, அவங்களுக்கு வீடு தெரியாது அவங்க கூடவே நீயும் வந்துரு, லேட் ஆக்காத" என அவனை அனுப்பிவைத்தான்.
இப்போது ஊருக்குத் தகவல் சொல்லியாகவேண்டும், அழுதுகொண்டு இருப்பவளிடம் எப்படிக்கேட்பது?
அறையெங்கும் சக்திவேலின் மொபைலை தேடிக்கொண்டிருந்தான் கணேசன். தன்னுடைய மொபைலிலிருந்து அவர் மொபைலுக்கு ஒரு அழைப்பு விடுத்தான்.
அது டீவிக்கு அருகிலிருந்து "நாளை நமதே.. இந்த நாளும் நமதே" என சிணுங்கியது.
ரிங்டோன் கேட்டு வெடித்தழுதாள் வேம்பரசி.
இறந்தவர்கள் கொண்ட அனைத்தும் இறந்தவர்களையே நினைவுபடுத்துகிறது. ஆறுதலேது.?
சக்திவேலின் இரண்டாவது மகள் திருமணமாகி வேலூரில் இருந்தாள் அவளுக்கு கால் செய்து அப்பா தவறிய செய்தியை தெரிவித்தான். அவரது அண்ணன் நடராஜனுக்கும், பின் அவனுக்குத் தெரிந்த சில உறவினர்களுக்கும் கால் செய்து மற்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டான்.
அழுதுகொண்டிருந்த வேம்பரசி அழுகையை நிறுத்தி மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு, தலை முடியை திருகி கொண்டையாய் சுற்றிக்கொண்டு கணேசனை நோக்கி நடந்தாள். அறையில் இருந்த அனைவருக்கும் விநோதமாய் இருந்தது.
"கணேசா, துர்காவுக்கு போன் பண்ணி சொல்லிடாதப்பா., அவ தாங்கிக்கிட மாட்டா. அவ பிரெண்டு நம்பர் அவரு செல்லுல "நதியா" ன்னு இருக்கும். அதுக்கு கால் போட்டு என்கிட்ட குடு நா பேசுறேன்.” என்றாள்.
அழுகை அணைந்து அமைதி குடியிருந்தது அவள் அழுத விழிகளில். கணேசன் நதியாவிற்கு கால் செய்து ரிங் அடித்ததும் வேம்பரசியிடம் செல் போனைக் கொடுத்தான்.
மறுமுனையில் நதியா "அப்பா சொல்லுங்கப்பா, நல்லா இருக்கீங்களா? துர்க்காகிட்ட ஏதாச்சும் சொல்லனுமா?" என்றாள். பூட்டிக்கொண்டிருந்த மௌனத்தைத்திறந்து கதறி அழைத்துவங்கினாள் வேம்பரசி.
வேம்பரசி துயரத்தில் உருகிக்கொண்டிருந்தாள். நதியா பீதியில் உறைந்துபோயிருந்தாள். "என்னம்மா ஆச்சு, சொல்லுங்கம்மா.?" பதறினாள் நதியா.
சன்னமாய் பெய்யும் மழையில் கூரையிலிருந்து திவலைகளாய் வழியும் மழைத்துளி போல் விம்மினாள் வேம்பரசி. பின் தழுதழுத்த குரலில், "அம்மா, துர்கா பக்கத்துல இருக்காளா, அவ கிட்ட எதுவும் சொல்லிட வேண்டாம்மா, கொஞ்சம் வெளிய வந்து பேசும்மா" என்றாள்.
வேம்பரசியின் பதட்டத்தைப் புரிந்துகொண்டு விருட்டென எழுந்து அலுவலக வராந்தாவில் வந்து "சொல்லுங்கம்மா, என்னாச்சு?" என்று படபடத்தாள் நதியா.
"அவர் இறந்து போயிட்டாரும்மா, என்ன ஆச்சுன்னே தெரியல, ஹாஸ்ப்பிட்டல் கொண்டுபோனா ஹார்ட் அட்டாக் உயிர் போயிருச்சின்னு திருப்பி அனுப்பிட்டாங்க. எம்மா, சொகமில்லாத புள்ள இத சொன்னா அவ தாங்கிக்கிட மாட்டா, அவள ஏதாவது சொல்லி இங்க கூட்டியாந்திடு மா." என அழுகையில் கரைந்த சொற்களை நதியாவுக்குச் சொல்லி, அறைமூலையில் சென்று சுவருக்குள் முகம் புதைத்தாள் வேம்பரசி.
~~
பந்தல்காரர்களை அழைத்து வந்திருந்தான் சண்முகம். ஆட்டோவிலிருந்து பெஞ்சுகளை எடுத்து வாகாக தெருவின் ஓரத்தில் வைத்து பந்தல் கால்களை நடுவதற்கு குழி தோண்டிக்கொண்டிருந்தான். கணேசன். "டேய் பச்சைத் தென்னை ஓலையை வாசலுக்கு கிடைமாட்டுல இறுக்கி கெட்டு” என சண்முகத்தை ஏவல் செய்தான்.
அந்நேரம் சந்தோஷ் நண்பனுடன் பைக்கில் வந்திறங்கினான். சந்தோஷ் நடை தளர்ந்திருந்தது. அவன் உடல் சோர்வுற்றிருந்தது. "அப்பா.. அப்பா.." என முணங்கியபடி பெஞ்சில் சாய்ந்தான். கணேசன் சந்தோஷின் அருகில் நின்று அவன் கைகளைப் பற்றிக்கொண்டு முதுகைத் தடவியபடி ஆற்றுப்படுத்தினான். அவனுக்கான ஆறுதல் இவனிடத்திலில்லை.
"என்னாச்சுன்னா.." என தாழ்ந்தகுரலில் முனங்கினான்.
அவனிடம் பேச தைரியத்தை வரவழைத்து தொண்டையைச் செருமிக்கொண்டு "எப்பவும் போலத்தான் மதியம் ஒன்றரை மணிக்கு வீட்டுக்கு அண்ணன் கெளம்பினாரு, நானும், சம்முவமும் கடை சப்பாடுவாங்கி சாப்டுட்டு இருந்தோம்."
"ஒரு ரெண்டே முக்கால் போல அக்காதான் ஃபோன் பண்ணாங்க. தூங்குனவர தட்டுனா பேச்சு மூச்சு இல்ல.. உடனே இங்க வா. எனக்கு பயமா இருக்குன்னு அக்கா சொன்னாங்க."
"நானும் பதறியடிச்சிட்டு சம்முவத்த கடைய பாக்க சொல்லிட்டு விருட்டுன்னு வந்தேன். அக்கா கால்மாட்டுல இருந்து அழுதுட்டு இருந்தாங்க, சுத்தி பக்கத்துவீட்டு ஆட்களும் கூடி நின்னாங்க. அண்ணன தோளபிடிச்சு உலுப்புனேன். ஒத்த அசைவு இல்ல."
"உடனே நாகராஜனுக்கு ஃபோன் பண்ணி ஆட்டோவ வரத்தி இராமச்சந்திரா ஹாஸ்பிடல் கூட்டிப்போனோம். அங்க பாத்த டாக்டருங்க ஏற்கனவே உயிர் போயிருச்சுன்னு சொல்லிட்டாங்க."
"ஹார்ட் அட்டாக்குன்னு செக்கப் பண்ண டாக்டர் ஒருத்தர் சொன்னாரு. அதுக்கு அப்புறம் தான் உனக்கு தகவல் தெரிவிச்சதும்."
"காட்பாடில இருக்குற உங்க அக்காவுக்கும், உங்க அத்தைக்கும் தகவல் சொல்லியாச்சு."
"துர்கா அக்காவுக்கு சொல்லல. அம்மாதான் அவகிட்ட சொன்ன பயந்திருவான்னு சொல்லி, அம்மாவே அவங்க ஃப்ரண்டு நதியாகிட்ட பேசினாங்க." எனக்கூறி முடித்தான் கணேசன் .
"அம்மா.?" என சந்தோஷ் கேட்கத்துவங்கும் போதே. கணேசன் பேச்சை மறித்து " உள்ள இருக்காங்க. போயி சமாதானப்படுத்து" என்று அவன் முதுகை தட்டிக் கொடுத்து வீட்டிற்குள் அனுப்பினான்.
சாவுவீட்டிற்கான சந்தன மண ஊதுபத்தி புகைந்து கொண்டிருந்தது. வெள்ளை ஜமுக்காளத்தில் சக்திவேலின் உடலை படுக்கவைத்திருந்தார்கள். தலைமாட்டில் ஒற்றை தீபம் எரிந்துகொண்டிருந்தது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களால் வரவேற்பறை நிரம்பி இருந்தது. எழிலரசியின் மடியில் தலைவைத்து வேம்பரசி மூலையில் அழுதுகொண்டிருந்தாள். சந்தோஷ் வீட்டினுள் நுழைந்ததும் வீடே பெருங்குரலெடுத்தது. வீதியே அழுதது.
சந்தோஷ் வேம்பரசியின் காலருகே வந்தமர்ந்தான்.. "பாத்தியாடா.? அப்பவ பாத்தியாடா. காலையில வேலைக்கு போகும் போது சிரிச்சு வழியனுப்புன அப்பாப பாத்தியா டா.." விம்மலிலிருந்து ஓலத்தில் மாறி இருந்தது வேம்பரசியின் குரல்.
ஒவ்வொருவராக வந்து ஆறுதல் சொல்ல முற்படும்போதெல்லாம் விம்மலுக்கும் ஓலத்திற்குமாக சீர் அலைவரிசையில் அழுதுகொண்டிருந்தாள் வேம்பரசி.
சரண்யா தன் குழந்தை கணவரோடு காரில் வந்துகொண்டிருந்தாள். சக்திவேலின் அண்ணன் குடும்பத்தாரோடு வேன் ஒன்றை வாடகைக்குத் தருவித்து வந்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு முனைக்கும் செல்ஃபோன் மூலம் தகவலை பரிமாற்றிக் கொண்டிருந்தார்கள்.
பந்தல் திரையின் பின்னால் சண்முகம் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான். கணேசன் அவனைக் கவனித்து அவன் அருகில் வந்தமர்ந்து தோள்மீது கைபோட்டு மார்போடு அணைத்துக் கொண்டான்.
"அண்ணே, அண்ணே இறந்துட்டாருன்னே..இனி நமக்குன்னு யார்ணே இருக்கா" என்று கணேசன் மார்பில் முகம் புதைத்தான் சண்முகம். கணேசன் கண்கள் கடலாய் பொங்கி இருந்தது.
~~
மூன்று வருடங்களுக்கு முன்புதான் சக்திவேல் சென்னைக்கு குடும்பத்துடன் குடிப்பெயர்ந்திருந்தார். துர்கா அதற்கு இரண்டொரு வருடத்திற்கு முன் வேலை நிமித்தமாக சென்னைக்கு வந்திருந்தாள்.
சரண்யாவும் B.Sc முடித்து வீட்டிலிருந்தாள். சந்தோஷும் BE முடித்து சென்னையில் ஒரு கம்பெனியில் வேலைக்குத் தேர்வாகி இருந்தான்.
அந்நேரத்தில் தறியின் ஓட்டமும் மிக சொற்பமாகவே இருந்தது. பிள்ளைகள் மூவரின் கல்விக்காக அக்கம்பக்கத்தில் வாங்கிய கடன்சுமையும் நிறைய இருந்தது. கனத்த மனதோடு தான் இந்த முடிவுக்கு சம்மதித்தார் சக்திவேல்.
காட்பாடியில் இரயில்வே நிலையத்துக்கு அருகில் அவர் பிறந்த வளர்ந்த வாழ்ந்த வீடு. மொத்தம் மூன்று செண்ட் நிலத்தில் வரவேற்பறை படுக்கை அறை சமையலறை முன் வாசல் முற்றம் போக மிச்சமிருந்த ஒன்றரை செண்ட் நிலத்தில் தறிக்கூடம் அமைத்திருந்தார்.
“சரி, புள்ளைகளும் தோள் மேல வளந்து சம்பாதிக்க ஆரமிச்சாச்சு, பையனும் சென்னைக்கு வேலைக்கு கெளம்பிட்டான், துர்காவும் அங்க ஹாஸ்ட்டல்ல தங்கி சாப்பாட்டுக்கும் கஷ்ட்டப்படுவா, நீயும் வாங்குன கடனுக்கு வட்டிகட்ட முடியாம தான தினறிக்கிட்டு இருக்க ?"
"மெட்ராஸ் போ புள்ளைங்க கூட சந்தோஷமா இரு. ஏன்னா எல்லாம் கொஞ்ச நாள் தான். பொட்ட பிள்ளைங்கள கரையேத்தின பின்னாடி ஒத்தைக்கு ஒரு பைய்யன் தானே? ரெண்டு பிள்ளைங்களும் கைநிறைய சம்பாதிக்குது, நீயும் இருக்குற கடனை எல்லாம் அடைச்சிட்டு அதுக கூடவே இருந்து சட்டுபுட்டுன்னு அதுகளுக்கு ஒரு கல்யாணத்த முடிச்சிட்டீன்னா, அப்புறம் உன் பாடு இலகுவா போகும் டா" என சக்திவேலின் அண்ணனின் அறிவுரையும் ஏற்றுக் கொள்வதாய் தான் இருந்தது.
வேம்பரசி முடிவெடுக்க முடியாமல் மதில்மேல் பூனையாய் இருந்தாள். சுற்றத்தாரும் சொந்தத்தாரும் அருகில் இருக்க தூர தேசத்தில், வீட்டிற்குள் அடைபட்டு இருக்கக்கூடும் என்ற எண்ணமும், துர்காவையும் சந்தோஷையும் அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டுமென்ற அக்கறையும். சக்தி வேலின் முடிவின் பக்கம் சாய்ந்திருந்தது வேம்பரசியின் தராசு முள்.
துர்காதான் அவள் தோழியுடன் அலைந்து திரிந்து ஒரு பெரிய குடும்பம் தங்குவதற்கு ஏற்ப இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தாள்.
எட்டு வயதிலிருந்தே ஓடியாடி வேலை செய்த சக்திவேலின் கால்கள் சென்னையில் பத்துக்குப் பதினைந்து அறைக்குள் சிறையிருக்க மறுத்தது. ஓடிய கால்களல்லவா அது.
காட்பாடியில் குடியிருந்த வீட்டை லீசுக்கு விட்டு, தறிக்கூடத்தை கலைத்து தறிகளை சொற்ப விலைக்கு விற்றுந்தார். பழைய கால தறிக்கட்டைகள். சில கட்டைகள் உளுத்துப் போயிருந்தது. வந்தவிலைக்கு விற்றார் என்றாலும், மனமில்லாமல் தான் விற்றார்.
சில்லறை கடன்களை அடைத்துவிட்டு, பெரிய கடன்களை மட்டும் தவணை முறையில் தருவதாக ஒப்புதல் அளித்துவிட்டுத் தான் சென்னைக்கு வந்திருந்தார்.
செலவுகள் போக மீதமிருந்த பணத்தில் ஐய்யபன் தாங்கல் டெபோவிற்கு சமீபத்தில் ஒரு தேனீர் கடையை வாடகைக்கு எடுத்திருந்தார். அதற்கு பெரிய முதலீடோ முன் அனுபவமோ தேவைப் பட்டிருக்கவில்லை.
சிறுவயதிலிருந்தே தேனீர் தயாரிக்க சக்திவேலுக்கு தெரிந்திருந்தது. தறிக்கூடத்தில் எப்போதும் ஒரு அடுப்பு கனன்று கொண்டே இருக்கும். சீசன் நேரத்தில் மூன்று ஷிப்ட்டுகளில் த்றி இயங்கும் போது தேனீர் ஒருபொழுது உணவாகவே மாறிஇருந்தது. எனவே, தேனீர் அவருக்கு ஏற்றதாகவும் பிரியமானதாகவும் மாறிப்போயிருந்தது.
ஆரம்பத்தில் துர்காவும் சந்தோஷும் இதற்கு உடன்படவில்லை எனினும் "சரி ஒரு நேரப்போக்கு வேண்டாமா" என்று அனைவரையும் சம்மதிக்க வைத்திருந்தார்.
கடை ஆரம்பித்த புதிதில் தேனீரும் பிஸ்கட் வர்க்கி மட்டுமே இருந்தது. நகரத்தோடு மனிதர்களும் பெருகவே தொழிலும் பெருகியது இயல்பாக.
சில அறிமுகமான புதிய நண்பர்களிடம் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக சொல்லிவைத்ததன் பேரில் கணேசன் அப்போது வேலைக்கு சேர்ந்திருந்தான்.
நல்ல திண்ணமான உடல்வாகு. கருத்த தேகம் சுருளாய் அடர்ந்த கேசம். சதை பிடிப்பான கன்னம். ஐந்தரை அடிக்கு சற்றே கூடுதலான உயரம். நில நிற டீ சர்ட்டும் கைலியும் அணிந்திருந்தான் கணேசன்.
"எங்க இருந்துப்பா வார?" என்ற சக்திவேலின் கேள்விக்கு, "சொந்த ஊரு மதுர பக்கம் நாட்டாமங்கலம். இங்க ஆவடில அக்காவ கட்டிக்கொடுத்துருக்கு, அங்க தங்கி தான் வேல தேடிட்டு இருந்தேன். டிப்போல இருக்க டிரைவர் முருகன் தான் உங்க கடைக்கு ஆள் வேணுமின்னு சொல்லி அனுப்புனாரு." என்று தன்னை அறிமுகப்படுத்தி மேலும், தான் மதுரையில் இதற்கு முன்பே ஒரு ஹோட்டலில் வேலை செய்த முன்னனுபவம் உண்டென்பதையும் தெரிவித்துக்கொண்டான் கணேசன்.
கணேசன் வந்தபிறகு கடையை இன்னும் சற்று விரிவுபடுத்தி இருந்தார் சக்திவேல். காலைநேரத்திலும் மாலையிலும் பலகாரங்கள் போடப்பட்டது. கடைகளுக்குச் செல்லவும் மளிகை வாங்கவும் பரிமாறவும் ஒத்தாசைக்கு ஆள் தேவைப்பட்ட்ட போது கணேசன் தன் உறவினர் சண்முகத்தை அழைத்து வந்திருந்தான்.
சண்முகம் இருபத்தியொன்று வயதான வாலிப சிறுவன். ஒல்லியான தேகமும், ஒட்டிய கன்னத்தோடு நெடுநெடுவென இருந்தான். இருவரும் கடைக்கு அருகில் இருந்த சிறு வீட்டில் குடியமர்த்தி இருந்தார் சக்திவேல்.
ஒரு ஏவலாளியைப்போலில்லாமல் ஒரு சகோதரனாகவும் இருவரையும் கவனித்துக்கொண்டார். பண்டிகைக்கு வீட்டிலிருந்து சாப்பாடும், புதுத்துணியும் வாங்கித்தந்தார். அண்ணன் என்றழைத்தாலும் அப்பாவுமாக அவர் இருந்தார்.
இந்த அன்புதான் இருவரையும் அழவைத்திருக்கிறது.
அன்பை நிகர் செய்ய வேறெதைத் தந்துவிடப்போகிறோம். அன்பைத் தவிர.?
~~
நதியா அலுவலக கழிவறைக்குள் சென்று தாழிட்டு அழுதாள். ஒரு வலிமிகுந்த வேதனைக்காலத்தில் வாய்விட்டு ஆழமுடியாத சூழல் வலியை விடக் கொடுமையானது.
சுவற்றில் சாய்ந்து கண்களை முடி மனதை ஒருமுகப் படுத்தினாள். "இப்போது துர்காவை அழைத்து செல்ல வேண்டும்,அவளுக்கு எந்த விசயத்தையும் சொல்லிடவும் கூடாது. முதலில் மேலாளரிடம் சென்று நடந்ததைக் கூறி அவரிடம் அனுமதி வாங்கிட வேண்டும். அதற்குள் கால் டேக்சி ஒன்றை புக் செய்யவேண்டும். பின் தோதாக ஏதாவது காரணத்தை அவளிடம் சொல்லி அவளையும் அழைத்து செல்ல வேண்டும். முக்கியமாக துர்காவின் கண்களை பார்த்து பேசுவதை தவிர்க்க வேண்டும்." என தனக்குள்ளாகவே பேசி அதையே செயல் படுத்தவும் திடடமிட்டிருந்தாள் நதியா.
மேலாளர் அறையிலிருந்து துர்காவின் இருக்கைக்கு அருகே வந்துநின்றாள் நதியா. துர்காவோ கணித்திரைக்குள் விழி புதைத்திருந்தாள். "துர்கா" என்று அவள் அழைத்ததும் ஹாஸ்யம் பூத்த கண்களை அகலத்திறந்து "ஹே.. நதி என்ன இந்தப்பக்கம் ஓடுது. மொட்ட பாஸ் சீட்டுல இல்ல?." என சிரித்துக் கொண்டே கேட்டாள் துர்கா.
மத்தியில் வகிடெடுத்த தலை, அடர்த்தியான பாதிமுதுகு வரை அலையாடும் கூந்தல். நீல நிற சுடிதாருக்கு மேட்ச்சாக நீல நிறத்தில் மின்னும் வைரமாய் ஒரு பொட்டு. திருத்திய இருபுருவங்களுக்கு நடுவே கூரான மெல்லிய நாசி. தங்கத் தோடு அணிந்த காது, காதோரத்திலிருந்து கன்னம் வரைபரவிய மென் முடி, சற்று அகலமான கீழ்த்தாடை. சதைப்பிடிப்பான கன்னம். ஈரப்பதமான கீழுதடு. துர்கா ஒரு கோதுமை நிற அழகி.
கைப்பைக்குள் துழாவி ஆப்பிள் ஒன்றை நதியாவிடம் நீட்டினாள், அவள் வேண்டாமெனக் கையசைத்ததும் ஒரு கடி கடித்தாள் ஆப்பிளை.
"ஏ உம்முன்னு இருக்க, உடம்பு ஏதாச்சும் சரி இல்லையா.?" என அவள் சொல்லவந்த காரணத்தை இவளே சொன்னாள்.
"ஆமாடி, எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா? அடிவயிறு வலிக்குது நிக்க முடியல. மேனேஜர் கிட்ட உடம்பு சரி இல்லன்னு சொல்லி பெர்மிஷன் வாங்கிட்டேன். கால் டேக்சியும் புக்பண்ணிட்டேன். நீயும் என்கூட வீடுவரை வாயேன். என்ன டிராப் பண்ணிட்டு அதே டேக்சியில நீ உன்னோட வீட்டுக்கு போயிடு." என கெஞ்சாத குறையாக துர்காவிடம் மன்றாடினாள் நதியா.
"ஹோய்., குழந்தை பிறந்து ஆறு மாசந்தான் ஆச்சு, மெட்டர்னிட்டி லீவு முடிஞ்சு ரீ-ஜாயின் பண்ணி ஒரு மாசம் தான் ஆகுது அதுக்குள்ள என்ன நெக்ஸ்ட் டாஸ்க்கா" என நதியாவை கேலி செய்து கொண்டிருந்தாள் துர்கா.
நதியா பொறுமை இழந்துகொண்டிருந்தாள். "தலைவலிக்குது பேசாம என்கூட வரியா இல்லையா." என கடுகடுத்தாள் நதியா.
"ஹே.. வயிறு தான வலிக்குதுன்ன, இப்ப தலை வலிக்குதுங்குற" என சொல்லி சிரித்து நதியாவை நோக்கினாள். நதியாவின் கண்களில் வெறுமை குடிகொண்டிருந்தது. நிசப்த நதியாய் ஓடிக்கொண்டிருந்தாள் நதியா.
"ஹே.. மணி நாலு ஆச்சு இன்னும் ஒன் ஹவர் தான் அதுவரை பொறுத்துக்கோ" ஆபிஸ் பஸ்லே சேஃப்பா போயிடலாண்டி " என்றாள் துர்கா.
"நீ வாரேன்னா வா.. இல்ல போ.. நா தனியா போயிக்கிறேன். என்னால இருக்க முடியலன்னு தான் நா உன்ன கூப்பிடுறேன். கால் டேக்சி டிரைவர்கிடட எனக்கு அடிவயிறு வலிக்குதுன்னு சொல்லிட்டுருக்க முடியுமா." என துர்காவிடம் கரிந்து கொட்டினாள் நதியா.
துர்கா பதிலேதும் சொல்லவில்லை பாதி கடித்த ஆப்பிளை பைக்குள் போட்டுக்கொண்டு, "இரு மேனேஜர் கிட்ட சொல்லிட்டு வரேன்" என செல்ல எத்தனித்தாள்.
"வேணாம் நானே அவர்கிடட சொல்லிடடேன், உனக்கும் சேர்த்து தான் பர்மிசன் வாங்கியிருக்கேன், ஆபிஸ் கேட்டுக்கிட்டே வா. கால் டேக்சிகாரன் போன் பன்றான்" என போனை எடுத்து
"இதோ வந்திட்டு இருக்கேன் டூ செகண்ட்ஸ்". என்று போன் பேசிக்கொண்டே நடந்து சென்றாள் நதியா.
~~
நதியா அலுவலக வாசலுக்கு வெளியே வந்துநின்றாள். கால் டேக்சி திரும்பி அவள் அண்மையில் வந்து நின்றது. காருக்குள் அமர்ந்து துர்காவுக்குக் காத்திருந்தார்கள் நதியாவும் காரும்.
துர்கா லிப்டில் இருந்து இறங்கி வாசலருகே நின்று நதியாவைத்த தேடினாள். நதியா காருக்குள் இருந்து கை அசைத்தாள். துர்கா காரின் அருகில் வந்தாள், நதியா காரைவிட்டுக் கீழிறங்கி அவள் தோள்களில் இருந்த கைப்பையை வாங்கிக்கொண்டாள்.
துர்கா தனது ஊன்றுகோல் இரண்டையும் காரின் பின்பக்க சிட்டுகளுக்கு கீழே வைத்தாள். பின்திரும்பி காரின் இருக்கையில் அமர்ந்து மட்டை போல் நீட்டிக்கொண்டிருந்த கால்களின் ஹேலிப்பர் லாக்குகளை விடுவித்து கைகளால் கால்களை மடக்கி சீட்டில் முதுகை சாய்த்து ஒவ்வொரு கால்களையும் கைகளால் தூக்கி காருக்குள் நுழைத்தாள்.
சற்று நேரத்திற்கு கழுத்தை சாய்த்து பெருமூச்சு விட்டு தன்னிரு கைகளை சீட்டில் ஊன்றி மெது மெதுவாய் நகர்ந்து காரின் கடையோரத்தில் சென்று கார் கண்ணாடிகளை இறக்கிவிட்டாள்.
இத்தனையும் பார்ப்பதற்கு ஒரு கம்பளிப் புழு இலைமேல் நகர்வதாக இருந்தது. நதியா அதுவரை காரின் கதவைப் பிடித்த்துக்கொண்டிருந்தாள்.
காருக்குள் நதியா அமர்ந்ததும் வண்டி கிளம்பியது. நதியா துர்காவின் பார்வையைத் தவிர்க்கும் பொருட்டு கண்ணாடிக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
எத்தனை அமைதியாக இருக்கிறது இந்த வெளி உலகம். மலர்களை மாலையக்கும் பூக்காரி, வடிகட்டிவழியாக தேயிலைச் சாற்றை ஒவ்வொரு தேனீர்குவளைக்கும் பரிமாறும் கடைக்காரர், பலூன் வியாபாரிகள், தள்ளுவண்டியில் பழம் விற்போர். தலையைக் கவிழ்ந்தபடி சாலையைக் கடக்கும் பாதசாரிகள். எத்தனை அமைதியா இயங்குகிறது இந்த உலகம்.
நதியாவின் நெஞ்சுக்குள் சுழலும் உலகத்தில் தான் எத்தனை எத்தனை சஞ்சலங்கள்.
காரை தன் வீடு இருக்கும் வேளச்சேரிக்கு செலுத்தாமல் ஐய்யப்பன் தாங்கலுக்கு செல்ல துர்கா வரும் முன்னரே டிரைவரிடம் சொல்லியிருந்தாள். செல்லும் வழியிலே இதுபற்றி துர்கா கேட்கக்கூடும். கணவர் ஏழுமணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவார். அரைமணி நேர தாமதமானாலும் மாமியார் கேள்வி கேட்டுத் துளைத்தெடுப்பார். ரக்ஷிதா குட்டி இந்நேரம் தூங்கி விழித்திருப்பாள். கணவருக்கோ மாமியாருக்கோ செய்தி சொல்லிட இதுவரை தோன்றவில்லை. பதட்டத்தில் மறந்திருந்தாள். இவளை பத்திரமாக வீட்டில் ஒப்படைத்து விட்டுத்தான் மற்றதைப் பற்றி யோசிக்க வேண்டும். ஆனாலும், துர்காவிடம் அவள் தந்தையின் இறப்பைப் பற்றி சொன்னால் எப்படி தாங்கிக்கொள்வாள்.?
காட்பாடியில் ஒரே தெருவில் தான் துர்காவின் வீடும் நதியாவின் வீடும் அமைந்திருந்தது. சிறுவயதில் இந்த சக்திவேல் தான் துர்காவை சைக்கிள் கேரியரில் அமர்த்தி பள்ளிக்கு செல்லும் போது நதியாவையும் உடன் அழைத்து வருவார். அவர் வாங்கிவரும் தின்பண்டங்களில் நதியாவுக்கும் ஒரு பங்கு போகும். தனது வாழ்வின் ஒவ்வொரு முக்கிய முடிவுகளிலும் அவரின் ஆலோசனைக் கேட்காமல் இருந்ததில்லை. ஆறுமாதத்திற்கு முன்பு கூட குழந்தை பெற்றிருந்த மறுநாளே சக்திவேலும் வேம்பரசியும் வந்திருந்தார்கள். அந்த நாளை நினைவுகூர்ந்தாள்.
சக்திவேல் அப்போது வெள்ளைநிற வேட்டியும் வெள்ளைநிற சட்டையும் அணிந்து, நெற்றியில் திருநீற்றுப்பட்டை அடித்திருந்தார். அறுபது வயதானாலும் கொஞ்சமும் கம்பீரம் குறையாத மிடுக்கான தோற்றம். கட்டுமஸ்தான திடமான உடல். கட்டையான மீசை, முன்னிரு பற்களில் காவிக்கறை. கண்களில் சாந்தமும் முகத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கும் புன்னகையும். சொரசொரப்பான தடித்த உள்ளங்கையில் புதிதாய் பிறந்த சிசுவை அத்தனை லாவகமாய் வாரி அணைத்து ஆதூரமாய் அதன் நெற்றியில் முத்தமிட்டார். அப்போது வேம்பரசி நதியாவின் அருகில் நின்றுகொண்டிருந்தாள்
வட்டப் பொட்டிட்ட மஞ்சளில் குளித்த வட்ட முகம். உச்சந்தலை நடுவகிட்டில் தீற்றலாய் குங்குமம். உதடுகளைக் காவல் காப்பது போல் வெளியே நிற்கும் சற்றே நீண்ட சோழிப்பல். மடிந்து கிடக்கும் இடுப்புச் சதைகளுக்குள் சேலையின் முந்தானையை இழுத்துச் செருகி அருகிலமர்ந்து கரங்களைப் பற்றினாள்.
ஸ்பரிசத்தின் வழியாக கடத்தப்படும் வெதுமைதான் அன்பு. இப்படி கைகளை பற்றிக்கொண்டு பேசும்போதுதான் எத்தனை நம்பிக்கைப் பிறக்கிறது. அவள் கரங்களின் வெதுவெதுப்பான குறுதிச் சுடு இன்னும் இவள் கைகளில் இருக்கின்றது.
அன்று குழந்தையை பார்த்துவிட்டு விடைபெறும்போது, ஆயிரம் ரூபாய் தாளை குழந்தையின் கையில் திணித்தபோது "இதெல்லாம் எதுக்கு, வேணாம்பா" என நதியா கேட்டு க்கொண்டாள் அப்போதும், "என் பிள்ளைக்கு நாம் செய்வேன். அது என் கடமையும் என் உரிமையும். தடுக்கக்கூடாது கேட்டியா. யாரும் கொடுக்கறதுக்கு பேரு உரிமை இல்ல நாமளா எடுத்துக்கனும்." நீயும் என் மகதான். இவளும் என் பிள்ளைதான்" என்று தனக்கான உரிமையை தானே எடுத்துக்கொண்டவர்.
இறந்தவரையும் இழந்தவளையும் எப்படி இனி எதிகொள்ளப் போகிறாள். ஆயிரம் கேள்விகள் மனதில் எழ வெளியே உள்ள அந்த அமைதியான உலகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் நதியா.
துர்கா துயரம் நிரம்பிய நதியாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். "ஸாரி, நதி. ரொம்ப முடியலையா. கிண்டல் பண்ணதுக்கு கோவிச்சுக்காத, தல இன்னும் வலிக்குதுன்னா லேசா மடியில சாஞ்சுக்கோ" என்று ஹேலிப்பர் கம்பிகள் துருத்திக் கொண்டிருக்கும் தொடைமீது ஹாண்ட் பேக்கை பரப்பி தட்டையாக சமன் செய்து நதியாவின் தோள்பட்டையை தன் மடிமீது சாய்த்தாள்.
துர்காவின் கரங்களைத் தட்டிவிட்டு நேராக சாய்ந்தமர்ந்தாள் நதியா.
"முடியலைன்னா சொல்லு நதி. நேர ஹாஸ்பிடல் போயிட்டு வீட்டுக்குப் போகலாம்" என்றவளிடம் "ம்.. நேர இராமச்சந்திரா ஹாஸ்பிடல் போயிட்டு அப்படியே உன்னையும் வீட்டுல ட்ராப் பண்ணிடுறேன். என் ஹஸ்பெண்ட நேர அங்கயே வரச் சொல்லிடுறேன்." என திடீரென்று உதித்த யோசனையை துர்காவுக்குத் தெரிவித்தாள்.
துர்காவும் அதை ஆமோதித்தாள். துர்காவின் வலதுதோள்மீது சாய்ந்து அவளுக்கான ஆறுதலை அவள்மீதே தேடிக்கொண்டாள். நதியாவை ஆற்றுப்படுத்துவதுபோல் துர்கா தன் வலதுகையால் அவளின் வலத்தோளை தட்டிக் கொடுத்தாள்.
துர்காவின் கைபேசி அவளின் கைப்பைக்குள் இருந்து சிணுங்கியது. நதியாவின் தலையை இலாவகமாக நகர்த்தி, கைப்பேசியை வெளியே எடுத்தாள். "ஒரு நிமிஷம், சரண்யா புருஷன் மணி கூப்பிடுறாரு" என்று அழைப்பை அட்டெண் செய்தாள்.
"சொல்லுங்க மாமா. சௌக்கியமா ? நந்து என்ன பண்றா ? ம்ம்.. நா நல்லாருக்கேன். ஃப்ரெண்டுக்கு உடம்பு சரி இல்ல அதான் அவள கூட்டிக்கிட்டு ஹாஸ்பிடல் போயிட்டு இருக்கேன். என்ன நீங்க சென்னை வரீங்களா.?" அதன் பின் அவளேதும் பேசவில்லை.
செல்லும் வழியையும் நதியாவின் விழியையும் பார்த்து மலங்க மலங்க விழித்தாள். அகண்ட கண்களிலிலிருந்து கன்னம் வழிந்தோடியது கண்ணாடி நிற திரவம். கைகளிலிருந்து கைப்பேசியை தவறவிட்டு தலை தலையாய் அடித்துக்கொண்டாள். கோடைமழையின் பேரிடியாய் முழங்கினாள். விரல்களை மடக்கி நெஞ்சில் அறைந்து கொண்டாள். நதியாவின் கட்டிற்குள் மட்டுப்படாதா ஆயிரம் யானையின் பலம் பெற்றிருந்தாள் துர்கா.
துர்காவின் தொண்டை அடைபட்டு வார்த்தைகளுக்கும் அழுகைக்கும் இடையில் வழுக்கிக் கொண்டிருந்தாள். விக்கலைப் போல் அடிவயிற்றிலிருந்து காற்று உருண்டை வெளியேறி, நதியாவின் மடியில் வாந்தியாய் கொட்டினாள். செரிக்காத ஆப்பிள் துண்டுகள் கூழாய் அவள் சேலையெங்கும் வடிந்திருந்தது.
அவளின் பேரழுகையைக் கேட்டு, இடப்பக்க இண்டிகேட்டர் போட்டு காரை சாலை ஓரமாக நிப்பாட்டினார் டிரைவர். தன்னிடமிருந்த வாட்டர் பாட்டிலை நதியாவிடம் தந்து துர்காவை அமைதிப்படுத்த சொன்னார். நல்லவேளையாக கொட்டிய வாந்தி காரில் விழவில்லை.
துர்காவை மெல்லமாக இருக்க்கையில் சாய்த்து, தூளிபோல் சேலையை மடித்து, மெதுவாக வெளியேவந்தாள். தொட்டிலில் உறங்கும் குழந்தைபோல, சேலையில் உருளும் வாந்தியை வெளியே கொட்டி, சேலையையும் முக்த்தையும் கழுவினாள். சில நிமிட ஓய்வுக்குப் பிறகு வண்டி வேகமெடுத்தது.
துர்காவை தன் தொடைமீது கிடத்தி, அவள் முதுகின் மேல் முகம் வைத்து வெறித்தபடி இருந்தாள் நதியா.
முயல்குட்டி மூச்சு விடுவதுபோல் நடுங்கிக் கொண்டிருந்தாள் துர்கா. அவள் அழுத கண்ணீர் கண்ணின் குழிக்கும் மூக்கின் மேட்டுக்குமிடையெ சிற்றணையாய் தேங்கி கன்னத்துப் பள்ளத்தில் பாய்ந்தோடியது.
நதியாவின் தொடை கனப்பு அடுப்பைப் போல் சூடாக இருந்தது. வார்த்தைகளில் விவரிக்கமுடியாத சோகத்தை விம்மலில் வெளிப்படுத்தினார்கள் இருவரும். அடிவயிற்றில் ஒரு பெரும்பள்ளம் விழுந்ததுபோல் பசித்தது துர்காவுக்கு
~~
வண்டி கத்திப்பாரா மேம்பாலம் கடந்து, ஐய்யபன் தாங்கல் சென்றுகொண்டிருந்தது. வாழ்தலின் பிரக்ஞையற்று வெறும் காற்று மட்டும் போய்வரும் பொம்மையாக இருந்தாள் துர்கா.
"அப்பா இனி வரப்போவதில்லை, மருத்துவமனைகளுக்குத் தூக்கிச் சுமந்த அப்பா, சைக்கிளில் அமரவைத்து பள்ளிக்குக் கொண்டுவிட்ட அப்பா, நண்பனாய், சேவகனாய், பாதுகாவலனாய், அப்பாவாய் இருந்த அப்பா. இனி வரவே போவதில்லை" அழுகையும் விம்மலும் அடங்கி அசைவற்றிருந்தாள்.
நதியா அயர்ந்து போனவளின் கன்னங்களை மெதுவாகத் தட்டி, " துர்கா, வீடு வந்திருச்சி மெதுவா எந்திரிச்சு உக்காரு" என்றபடி அவளின் தோளைப் பற்றி இருக்கையில் மெதுவாக சாய்த்தாள்.
துர்காவின் தலைமுடி கலைந்து, கண்கள் சிவந்து, கன்னங்கள் வீங்கி இருந்தது. நதியா வலப்பக்கக் கதவுவழியாக வெளியேறி, இடதுபக்க கதவைத்திறந்து துர்கா வெளிவர உதவினாள்.
துர்கா ஹாலிப்பர் அணிந்த கால்கள் ஒவ்வொன்றையும் கைகளால் நகர்த்தி காரைவிட்டு வெளியே வந்தாள். ஹாலிப்பர் மூட்டுகளில் இருந்த லாக்குகளை பொருத்தி எழுந்து நின்றாள்.
சீட்டுக்கு அடியில் இருந்த ஊன்றுகோல்களை நதியா எடுத்துத் தரும் வரை காரின் பக்கவாட்டைப் பிடித்துக்கொண்டு அதன்மீது முகத்தைச் சாய்த்திருந்தாள் துர்கா.
நதியாவிடமிருந்து ஊன்றுகோல்களை வாங்கும் போது அவள் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது. நதியா காருக்கான வாடகையைத் தந்துகொண்டிருக்கும் போதே துர்கா வேகமாக நடக்க ஆரம்பித்திருந்தாள்.
கையிலிருந்த இரு ஊன்றுகோல்களையும் எவ்வளவு தூரம் தூக்கிவைக்க முடியுமோ அவ்வளவு தூரம் தூக்கிவைத்து, கைகளில் பாரத்தை ஏற்றி முழு உடலை அதே தூரம் தூக்கி வைத்தாள். சுண்டப்பட்ட ஊசல் குண்டைப்போல அல்லது வேகமாய் வீசப்பட்ட ஊஞ்சலைப் போல நடந்தாள். அவள் வாழ்வில் அவள் நடந்த வேகமான நடை அது.
நதியா வண்டிக்குப் பணம் கொடுத்துவிட்டு, துர்காவின் கைப்பையை எடுத்து வருவதற்குள் துர்கா காம்பௌண்டிற்குள் நுழைந்திருந்தாள். காம்பௌண்ட் சுவரிலிருந்து பத்தடி தூரத்தில் வாசற்படி, முக்காலடி உயரம் கொண்ட மூன்று படிகள். துர்கா வருவதைப் பார்த்து வழியில் நின்றிருந்தவர்கள் சற்று ஒதுங்கி நின்றனர். முதல் படியில் இரு ஊன்றுகோல்களை ஊன்றி, ஒரே தாவில் மூன்றாவது படியில் இருகால்களையும் பதித்து நின்றாள்.
வீட்டின் ஒருபக்க மூலையில் சக்திவேலின் உடல் கிடத்தப்பட்டிருந்தது, மறுபக்கச் சுவற்றில் வேம்பரசி அழுதுகொண்டிருந்தாள். துர்கா, அம்மாவைப் பார்த்து "அப்பா" என ஓலமிட்டாள். ஆயிரம் எதிரொலிகள் "அப்பா" என்று முழங்கியது. துர்காவை நின்ற நிலையைப் பார்த்து வீடே ஒப்பாரியிட்டது.
அந்த மலர்களின் மணம், அவ்வறையின் புழுக்கம், அந்தப் பேரிரைச்சல் துர்காவின் கால்களுக்குக் கீழிருந்த பூமி நடுங்கியது, நிலையற்றுப் பின்புறம் விழுந்தாள் துர்கா.
படிக்கட்டின் பக்கவாட்டில் நீட்டிக்கொண்டிருந்த பெஞ்சின் விளிம்பில் துர்காவின் இடதுகால் ஹாலிப்பர் மூட்டு ''பட்" என மோதியது, நொடிக்குள் வலப்புறம் சுருண்டு "பொத்" என விழுந்தாள். தெருவில் நின்றிருந்த நதியா வாசலுக்கு வருவதற்குள், வீட்டிலிருந்தவர்கள் வாசலுக்கு வருவதற்குள் விழுந்திருந்தாள்.
"துர்கா" என அலறிக்கொண்டே ஓடிவந்து அவள் அருகிலமர்ந்து அவளின் தலையை தன் மடிமீது ஏந்திக்கொண்டாள் நதியா. துர்கா வலியில் புருவம் நெருக்கி "உம்ம்ம்" என்றபடி மூர்சையானாள். துர்காவின் உதட்டிலிருந்து இரத்தம் கசிந்தது. அவள் முகத்தில் மண் ஒட்டி இருந்தது.
(முகம்-அத்தியாயம்-1)*

Comments
Post a Comment