Posts

Showing posts from 2016

"அரியது கேட்கின்" நாவல் அத்தியாயம் 3

Image
" அரியது கேட்கின் "     3. வீடு திரும்பல்   கண்ணாடி எதையும் மறைத்துவைத்துக் கொள்வதில்லை. கண்ணாடி வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தன்வழியே கடந்து செல்ல அனுமதிக்கிறது. கண்ணாடியின் நிழல் மட்டுந்தான் நிஜமான ஒளியாகவும் இருக்கிறது.  நிழலும் சுடும், நிழலும் நிஜம்; கண்ணாடி ஒரு அறிவியல் முரண்.  சொல்லப்போனால் நிழல் தான் நிகழ்வின் சாட்சியமாக நிற்கிறது. பேரன்பின் சாட்சியமாய், அந்தரங்கங்களின் பார்வையாளனாய், தனிமையின் துணையாய், ஈருடல் பிணைந்திருக்கும் காமத்தில் உடல் மேல் உடலாய், எல்லா பருப்பொருளுக்கும் நிழலுண்டு.  பிணத்திற்கும் கூட நிழலுண்டே, அசைவற்ற நிழல். புதைக்கப்பட்ட நிழல் வளர்ந்து ஒரு மரமாகி நிழல்தருகிறது. பிடிசாம்பலாய் கரைக்கப்பட்ட நிழல்  ஒரு நீர்த்தாவரமாகிறது. நினைவுகளாகி சில நிழல் கள்  நிலைபெற்று நின்று விடுகிறது. அங்கு நினைவுகள் வளர்ந்து மரமாகிறது .  மருத்துவமனை வளாகத்தின் வேப்பமரக்காற்று அறைக்குள் நுழைந்து திரைச் சீலைகளை படபடக்கச் செய்தது. போர்வையை விலக்கி நான்கு விரல்களை நெற்றியில் பதித்து "பிள்ளைக்கு காய்ச்சல...

"அரியது கேட்கின்" நாவல் அத்தியாயம் 2

Image
"அரியது கேட்கின்" 2. வாசனை இருள் கவிழ்ந்திருந்தது. யார் இறந்தாலும் யார் பிறந்தாலும் இரவும் பகலும் வந்துகொண்டுதானிருக்கிறது. எத்தனை கோடி வாழ்வையும், எத்தனை கோடி சாவையும் கண்ணுற்றாலும்,  நித்தியத்துவமாய், வரலாற்றின் ஒரு நிரந்தர சாட்சியாய் காலம் மட்டுமே நிற்கிறது. காலத்திடமிருந்தே சகலமும் தோன்றுகிறது. காலமே சகலத்தையும் தோற்றுவிக்கிறது. கடைசியில் காலத்திடமே சகலமும் வந்து முடிகிறது. காலமே சகலமும், சகலமுமான கடவுளும். கடவுளை நம்புவோர்க்கு காலமே கடவுள். காலத்தை நம்புவோர்க்கு கடவுளே காலம். காலந்தான் கடவுளைக்கூட நிர்ணயிக்கிறது இல்லையா ? கடவுள் வாழ்ந்த காலம் தான் மனுதர்மத்தின் வழிகாட்டுதலாகிறது, அவர்களின் தீர்க தரிசனங்கள்  தர்மங்களாகிறது. அவர்தம் கொள்கைகள் பின்பற்றப்பட்டு சமயமாகிறது. வழிபாட்டு முறைகள் மதங்களாகிறது. காலத்தின் உரைக்கல்லாய் வாழ்ந்துமுடித்த ஒருமனிதன் கடவுளென்றே உறைகிறான். மாலைகள் சூட்டப்பட்ட ஒரு கடவுளைப்போல் உறைந்திருந்தார் சக்திவேல். சக்திவேலின் இரண்டாவதுமகள் சரண்யா கணவர் மணிகண்டன், குழந்தை நந்தினியோடு வந்திறங்கினாள். சற்று நேரத்தில் அவரது அண்ணன் நடராசன் குடு...

"அரியது கேட்கின்" நாவல் அத்தியாயம் 1

Image
"அரியது கேட்கின்" 1. முகம் “நல்ல சாவு பாத்தியாக்கா, ஓரு வலிவேதனை இல்ல, ஒரு நோய் நொடின்னு படுக்கல, மதியம் சாப்டுட்டு படுத்த மனுசன் தூக்கத்துலேயே செத்துட்டாராம்” முற்றத்தைப் பெருக்கிக்கொண்டு எதிர்வீட்டு வனஜாவுடன் பேசிக்கொண்டிருந்தாள் பவானி. தெருவில் வருவோரும் போவோரும் பவானி கூறும் கதையைக் கேட்டுக்கொண்டு துக்கத்தை முகத்தில் ஏந்திச் சென்றனர். “நல்ல மனுசன். யாரு முகத்தையும் ஏறெடுத்து பாக்கமாட்டாரு, குனிஞ்சாப்புலே போவாரு காலைல ஒரு  நாலு நாலரைக்கெல்லாம் எழுந்து கடைக்குப் போய், அடுப்ப தொடச்சி பத்தவச்சிட்டு வியாபாரத்தை ஆரம்பிச்சாருன்னா கால சாப்பாட்டுக்கு ஒம்பது மணிக்குத்தான் வருவாரு, அப்புறம் மதியம் ரெண்டு மணிக்கெல்லாம் மதிய சாப்பாடுக்கு வந்தா சாப்பிட்டு முடிச்சி மூணு மூணரைக்கு மறுபடியும் போவாரு",   "இன்னிக்கி அப்படி சாப்பிட்டு படுத்தவரு தான். எழும்பவே இல்ல, என்னத்த சொல்லுறதுக்கு.? மனுச வாழ்க்கைய." “இங்க அடக்கம் பண்றாங்களா, இல்ல காட்பாடிக்கே கொண்டுபோறாங்களான்னு தெரியல, அவங்களுக்கு சொந்தம்மின்னு சொல்லிக்கவும் இங்க யாரு இருக்கா?"  "சொந்த...