"அரியது கேட்கின்" நாவல் அத்தியாயம் 3
"அரியது கேட்கின்"
3. வீடு திரும்பல்
கண்ணாடி எதையும் மறைத்துவைத்துக் கொள்வதில்லை. கண்ணாடி வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தன்வழியே கடந்து செல்ல அனுமதிக்கிறது. கண்ணாடியின் நிழல் மட்டுந்தான் நிஜமான ஒளியாகவும் இருக்கிறது.
நிழலும் சுடும், நிழலும் நிஜம்; கண்ணாடி ஒரு அறிவியல் முரண்.
சொல்லப்போனால் நிழல் தான் நிகழ்வின் சாட்சியமாக நிற்கிறது. பேரன்பின் சாட்சியமாய், அந்தரங்கங்களின் பார்வையாளனாய், தனிமையின் துணையாய், ஈருடல் பிணைந்திருக்கும் காமத்தில் உடல் மேல் உடலாய், எல்லா பருப்பொருளுக்கும் நிழலுண்டு.
பிணத்திற்கும் கூட நிழலுண்டே, அசைவற்ற நிழல். புதைக்கப்பட்ட நிழல் வளர்ந்து ஒரு மரமாகி நிழல்தருகிறது. பிடிசாம்பலாய் கரைக்கப்பட்ட நிழல் ஒரு நீர்த்தாவரமாகிறது. நினைவுகளாகி சில நிழல்கள் நிலைபெற்று நின்று விடுகிறது. அங்கு நினைவுகள் வளர்ந்து மரமாகிறது.
மருத்துவமனை வளாகத்தின் வேப்பமரக்காற்று அறைக்குள் நுழைந்து திரைச் சீலைகளை படபடக்கச் செய்தது. போர்வையை விலக்கி நான்கு விரல்களை நெற்றியில் பதித்து "பிள்ளைக்கு காய்ச்சல் அடிக்குதா?" என்று வினவும் அப்பாவின் அக்கறையான ஸ்பரிசம் போல துர்காவைத் தழுவியது.
போர்வையை மடித்து கால்களை கட்டிலில் பரப்பி அமர்ந்திருந்தாள் துர்கா. கண்ணாடி ஜன்னலின் மீது விழுந்த சூரிய ஒளி கட்டிலில் கிடந்த அவள் பாதத்தில் முத்தமிட்டது.
புழுதி படிந்திடாத, கற்களைக் கண்டிடாத, மண்ணை மிதித்திடாத, சாலையில் நடந்திடாத, இத்தனை வருடங்களாய் காலுறைக்குள் பொதிந்து கிடந்த, சிசுவின் மிருதுவான அவள் பாதங்களில் விழுந்த ஒளி ஊடுருவி, உருக்கிய உலோகமென இளஞ்சிகப்பாய் மின்னியது.
டிஸ்சார்ஜ் செய்து வீடு திரும்புவதற்கான முஸ்தீபுகளில் மும்மரமாக ஈடுபட்டிருந்தால் எழிலரசி.
மென்மெல்லிய கால்களை கோட்டோவியமாக்கியது போல, பிளாஸ்ட்டிக்கும் கம்பிகளும் இணைந்த நவீன ஓவியமாய், அறையின் மூலையில் சாத்தப்பட்டிருந்த ஹாலிப்பர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள் துர்கா.
ஓரு நவீன ஓவியத்தை அணுகுதல் போலத்தான் ஹாலிப்பர்களையும் அணுகிடல் வேண்டும். ரெக்சின், ரப்பர், பிளாஸ்ட்டிக், தோலாலான பெல்ட்டுகள், ரிவெட்டுகள், மற்றும் போல்ட்டுகளுக்குள் இருக்கும் உயிருள்ள கால்களை, கால் தாங்கும் உடலை, உடல் கொண்ட கனவை, கனவுகளின் பாரங்களை, இயற்கையின் ஒத்துழைப்பு இல்லாது செயற்கையின் துணைகொண்டு வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிற மனதை. ஓரு நவீன ஓவியத்தை அணுகுதல் போலத்தான் அணுகிட வேண்டும்.
ஹாலிப்பர்களை கழற்றுவதும் மாட்டுவதும் மட்டும் அவள் மறைத்து செய்ததில்லை, கழற்றிய பின் ஹாலிப்பர்களையும் யாரும் அறியாவண்ணம் மறைத்தே வைத்திருப்பாள்.
அதுதான் அவளை இயக்குகிறது, அதுதான் அவளை நடப்பிக்கிறது, சாத்தியமற்ற தூரங்களை அதுதான் கடக்கவைக்கிறது. ஆனால் தன்னுடலைவிட்டு வெளியேறிய பின் அதனை ஒரு கழிவாகவே அவள் எண்ணினாள்.
ஹாலிப்பரின் குறுகலான கால் அமைப்பும், தொடைப்பகுதியில் அழுத்தம் ஏற்படாதிருக்க ஒட்டப்பட்ட வியர்வையும் அழுக்கும் ஊறியஇரப்பர் சீட்டும் அழகுப் பொருளாய் ஷோக்கேஸை எந்நாளும் அலங்கரித்திடாது.
மாறாக, கழற்றி காட்சிக்கு வைக்கப்பட்ட ஹாலிப்பர்கள் தன் இயலாமையைக்காட்டி கருணையை யாசிப்பது போலவும், வரவேற்பறையில் உள்ளாடைகளை உலர்த்த விடுவதாகவும், பொதுவெளியில் துகிலுரிப்பதாகவும் அவளுக்குத் தோன்றிற்று.
கண்களும் கருத்தும் தவிர்ப்பதற்கியலாததாய் அதைசுற்றியே வட்டமிட்டது.
உளவியல் ரீதியான இடர்களாலும், அது தன்னுள் நிகழ்த்தும் சஞ்சலங்களாலும், தன்னிரக்கம் கொண்டு தள்ளாடும் தன்மனதை சமப்படுத்த தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் சுய சமாதானங்களும், தனக்குள்ளே நிகழ்த்தும் தர்கங்களும் எல்லோருக்கும் பொதுவானதோ, அல்லது எல்லோராலும் உணரக்கூடியதோ அல்ல. அது, மைதூனத்தைப்போல் தான் மட்டுமே உணரக்கூடியது.
"டாக்டர் சொன்னத கேட்டியா? மாவுக்கட்ட கழட்டி மட்டை வச்சி கட்டிருக்காங்க, இன்னும் ரெண்டு மூணு மாசம் ரெஸ்ட் எடுத்தாதான் சரி ஆவும். கால ஸ்ட்ரெயின் பண்ண கூடாது. சாதாரண கால் மாதிரி இருந்தாக்கூட பரவால்ல, போலியோ கால்ல அடி பட்டிருக்கறதால நல்ல சாப்பிட்டா தான் ரெத்தம் ஊறும். அடம் பிடிக்காம நல்ல சாப்பிடு, எது வேணும்ன்னாலும் தயங்காம அம்மாகிட்டயோ தம்பிகிட்டயோ கேளு. தங்கச்சிய இன்னும் ஒருவாரத்துக்கு வீட்டுல இருக்க சொல்லிருக்கேன், மருந்து லிஸ்ட் எல்லாம் அவ கிட்ட கொடுத்திட்டு போறேன், வேற என்ன உதவின்னாலும் எங்கிட்ட கேளு சரியா.?" என்றவாறு மாற்றுத்துணிகளை மடித்து கட்டிலில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் எழிலரசி.
"சித்திதான் பாவம், எனக்காக எவ்வளவு மெனக்கெடுறா. ஊட்டிவிடுறதும், உடுப்பு மாற்றி விடுறதும், குளிப்பிக்கிறதும், மத்தவங்க சங்கோஜப்படுற ஒன்னுக்குப் பிடிக்கிறதும்,பெட் ஃபேன் மாத்துறதும் எனக்காக அத்தனை அநாயாசமா செய்யுறா."
"ஆனா அம்மாவவிட சித்திக் கிட்ட தான் "இத செய் சித்தி" ன்னு சகஜமா சொல்லவும்முடியுது."
"எனக்கு பணிவிடை செய்யனும்ன்னு சித்திக்கின்னு என்ன தலைஎழுத்தா? ஒத்த பொண்ண பெங்களூரில கட்டிக்கொடுத்துட்டு சொந்தவீட்டுல சுபபோகமா இருக்கிறவதான்."
"ஒருநாளைக்கு ஓராயிரம் தடவ 'எழில், எழில்' ன்னு சித்திய தேடுற சித்தப்பா. அவரும் பாவம் சித்தி இல்லாம இந்த பன்னிரெண்டு நாளா சாப்பாட்டுக்கு கஷ்ட்டப்பட்டுருப்பாரு."
"ம்ம்.. அம்மாவாலதான் வரமுடியாது சரண்யாவாச்சும் வந்து ரெண்டு நாள் வந்து தங்கிட்டு போயிருக்கலாமில்ல ?"
"அவள சொல்லியும் குத்தமில்ல. நந்தினிய சமாளிக்கவே அவளுக்கு நேரம் சரியா இருக்கும். சேட்டக்காரக் குட்டி."
என்று தனக்குள்ளாகவே பேசிக்கொண்டு "சரி" என்பது போல் எழிலரசியிடம் தலையை அசைத்தாள் துர்கா.
கட்டிலின் மேலிருந்த தனது கைப்பையை எடுத்து அதன் அறைகளைத் திறந்தது துழாவினாள். என்றோ கடித்த ஆப்பிள் கறுத்துச் சுருங்கி அழுகிப்போய் இருந்தது. அதை விட்டெறிந்து, உள்ளங்கை அகல கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தாள்.
அவள் கன்னங்கள் உலர்ந்து சொரசொரப்பாய் இருந்தது, வலப்பக்க உதட்டிலிருந்த காயம் வற்றி பொருக்காய் உலர்ந்திருந்தது. கண்களை சுற்றி கருப்பு வளையம் விழுந்து மாடக் குழிக்குள் அசையும் சிறு அகல் ஒளியாய் கண்கள் மங்கலாய் மின்னியது. ரேகைபோல் வரிவரியாய் கழுத்தில் அழுக்குப் பதிந்திருந்தது.
மனசு போல இருந்தது உடம்பு.
சோகையாய் தன்முகத்தைப் பார்த்து புன்னகைத்து, பையிலிருந்து ஒரு சிகப்பு நிற ஸ்டிக்கர் பொட்டை இருபுருவங்களுக்கு மத்தியில் வைத்து அழுத்தி, கலைந்த்திருந்த தலைமுடியைத் திருகி கொண்டையிட்டுக் கொண்டாள் துர்கா.
இடக்கால் முட்டி மடங்காதவாறு நீட்டிப் பிடித்தபடி பாதி தொடையிலிருந்து பாதி முழங்கால் வரை நீண்டிருந்த ஒரு பட்டி. அதை சுற்றிப்ப்பிடித்தாற்போல் இரண்டு மூன்று சுற்றுகள் சுற்றப்பட்டிருந்த கபில நிற ஈரிழை சல்லடைத் துணி. சிறு கிளைபோல் நீண்டிருந்த முழங்காலைத் தொடர்ந்து கமல மொட்டாய் குவிந்திருந்த பாதம்.
வலது கையால் வலது காலைப் பிடித்து, கட்டிலுக்கு வெளியே வீசினாள். அது ஒரு தூவராடையைப் போல அசைந்துகொண்டிருந்தது.
இடது காலை கட்டிலின் விளிம்புவரை மெல்லமாக நகர்த்தினாள். "சுருக்" என்று வலித்ததும் நிறுத்திக்கொண்டாள். அப்போது வீசிய காற்று அவள் நைட்டிக்குள் புகுந்து இரு தொடைகளுக்கிடையே பலூன் போல உப்பி உடலை கூசச்செய்ததும் ஆசுவாசம் அடைந்தவளாய் கட்டிலில் சாய்ந்தாள் துர்கா.
ஹாலிப்பர் இல்லாது துர்காவால் நடக்க இயலுமா என்றால் இயலும். ஆனால் அதற்கு இரு ஊன்றுகோல்களின் துணைவேண்டும்.
மொத்த உடலின் பாரத்தை முன்னிரு கைகளில் செலுத்தி இரு ஊன்றுகோல்களை ஊன்றி நிற்கும்போது, கால்கள் பின்புறம் வளைந்து மூட்டுகள் பொருந்திக்கொள்ளும்.
ஒரே நேரத்தில் ஊன்றுகோலிரண்டையும் தூக்கி வைத்து, அதன்பின் இருகால்களையும் தாவி நடப்பது, இறகை சமப்படுத்தி தரையில் சிதறிய தானியங்களை உண்ணும் சிறு பறவைபோலிருக்கும்.
ஊன்றுகோலும் இல்லாது போனால் முகில் மேல் நகரும் நிலவாய் தரை மேல் தவழ்வாள்.
குனிந்து முன்னிரு கைகளைத் தரையில் ஊன்றி சதைப்பிடிப்பற்ற பிருட்டங்களை சற்று மேலே தூக்கி, தோல் போர்த்திய எலும்பான இரு கால்களையும் பின்னிக் கொண்டு, மடிந்து கிடக்கும் பாதங்களைத் தரையில் பதித்து வீட்டின் அறைகளுக்குள் தவழ்வாள். அது பார்ப்பதற்கு, கல்லாய் சமைந்துவிட்ட தொன்ம யாளி உயிர்கொண்டு உலவுவதைப் போல் இருக்கும்
இப்போது நீட்டிய கால்களை மடக்க முடியாமற்போனதால் நிலவொளியில் பறவை துஞ்சும் பெருமரமாய் அசைவற்று இருந்தாள் துர்கா..
மருத்துவரின் பரிந்துரை பேரில் தான் கொண்டுவந்திருந்த சக்கர நாற்காலியில், எழிலரசி உதவியோடு துர்காவை அமரவைத்தான் சந்தோஷ்.
இதுவரைக் கண்டிடாத, புதிதாய் கிடைத்த விளையாட்டு பொம்மையை ஆச்சரியமும் அச்சமும் கலந்து அணுகும் குழந்தையாய், அந்த சக்கர நாற்காலியை கையாண்டாள் துர்கா.
சாதாரண நாற்காலிகளைப்போலத்தான் சக்கர நாற்காலிகளும். உட்க்காருமிடத்திலும், முதுகுசாய்க்கும் இடத்திலும் மெத்தென்ற பஞ்சணைகள், முன்னிரு கால்களுக்குப் பதில் தடிமனான இரு சிறிய சக்கரங்கள் பின்னிரு கால்களிருக்குமிடத்தில் பெரிய இரு சக்கரங்கள். தள்ளிச் செல்வதற்கு ஏற்ப பின் புறத்தில் இரு கைப்பிடிகள். பாதங்கள் பதியுமிடத்தில் மடித்து நீட்டும் வகையில் கால் பலகை.
சக்கர நாற்காலியில் வலப்புறம் ஒருக்களித்து சாய்ந்தமர்ந்திருந்த துர்காவின் வலதுகால் மடிந்து தரையில் உரசிக்கொண்டிருந்தது. இடதுகால் தரைபடாது காற்றில் மிதந்துகொண்டிருந்தது.
டாக்சியில் ஏற்றுவதைக் காட்டிலும் இறக்குவது சுலபமாக இருந்தது. சக்கர நாற்காலியில் இறக்கிவைக்கப் பட்ட துர்காவை சூழ்ந்த சுற்றத்து நட்புகளின் வழமையான அன்புக்கூறலுக்கும் நலவிசாரிப்புகளுக்கும் பிறையாய் புன்னகையேந்திய தன் முகத்தை பதிலாயத் தந்தாள்.
காம்பௌண்ட் கதவின் இடப்புறம் ஒரு படுக்கையறை. வலப்புறம் மேல்மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள். காம்பௌண்ட் சுவரிலிருந்து வாசற்படிவரை நீண்ட சிமெண்ட் பாவிய முற்றம். முக்காலடி உயரம் கொண்ட மூன்று படிகளைத்தாண்டி . செவ்வகவடிவ வரவேற்பறை. வரவேற்பறையின் ஒரு மூலையில் சமையலறையும் அதன் பின்பகுதியில் கழிவறையும், மறுமூலையில் மற்றுமொரு படுக்கையறையும் இருந்தது.
படிகளில் சாய்வுப் பலகையை அமைத்து, சக்கரநாற்காலியைப் பின்புறம் சாய்த்து தேர்ந்த செவிலியனைப்போல வரவேற்பறை மத்தியில் துர்காவைக் கொண்டு நிறுத்தினான் சந்தோஷ்.
வழக்கமாக சக்திவேல் அமர்ந்திருக்கும் சோஃபா இடமாற்றப்பட்டு, இடப்புற சுவற்றில் புகைப்படமாக தொங்கிக்கொண்டிருந்தார். எதிர்புறச் சுவற்றில் முதுகு சாய்த்து, கைகளால் கால்களைக் கட்டிக் கொண்டு முந்தானையின் நுனியால் வாயைப் பொத்தி தரைபார்த்த விழிகளோடு மௌனித்திருந்தாள் வேம்பரசி.
சக்கர நாற்காலியின் கால் பலகை மீதேறி, துர்காவின் நைட்டியைப் பற்றி தொடை மீது ஏற முற்பட்ட நந்தினியை வாரி அணைத்து அறையின் மற்றொரு மூலையில் அமர்ந்து கொண்டாள் சரண்யா. வாசற் கதவின் மரச்சட்டத்தில் சாய்ந்து, காய்ந்து உலர்ந்த மாவிலைத் தோரணத்தைக் கிள்ளிய படி வீதியை வெறித்தபடி பார்த்துக் கொண்டுந்தான் சந்தோஷ்.
கண்முன் ஒரு விரலை நிறுத்தினால் மொத்த உலகத்தையும் சிறு விரல் மறைத்துக் கொள்வதைப் போல துயரத்தின் அண்மை.
நம்பிக்கையின் வெளிச்சத்தை மறைத்து இழப்பின் இருளையே வழியெங்கும் படரச் செய்கிறது. பெருந்துயரைப் புறந்தள்ள பிரியமானவர்களின் சமாதானமும்,
இழப்பை ஈடுசெய்ய பேரன்பின் ஆறுதலும் இல்லாது போனால் மானுடம் இங்கேது.?
தயாரித்துக் கொண்டுவந்த தேனீரை எல்லோருக்கும் பரிமாறி, ஒரு குவளைத் தேனீரை துர்காவிற்கும் கொடுத்து, வேம்பரசி அருகிலமர்ந்து கொண்டாள் எழிலரசி.
சிறுவயதில் சக்திவேலின் தொடைமீது ஒரு காலைப் போட்டு, தோளோடு இறுக்கி அணைத்து இடமார்பில் கன்னம் புதைத்திருப்பாள் துர்கா. அந்த தேகச்சூடு இந்த தேனீர்க் குவளைக்கு.
நடுங்கும் குவளையை இரு கைகளால் பிடித்து குவளையின் விளிம்பை உலர்ந்து வெடித்த உதட்டில் பதித்தாள். "சுர்ர்.." என்று சுட்டதும் "அப்பா" என்றாள்.
"பில்ல போட்டு தீட்டிட்டான். எக்ஸ்ரே, ஸ்கேன், ரூம் வாடகை, மருந்து மாத்திரை-ன்னு மொத்தம் அறுபத்தெட்டாயிரம் ரூவா. இந்த வீல்சேர் ஆறாயிரத்த சேர்த்தா எழுபத்திநாலாயிரம் ஆச்சி" என்றவாறு கைலியை உதறி மடித்துக் கட்டிக்கொண்டான் சந்தோஷ்.
"அடிபட்ட உடனே சின்ன ஆஸ்பத்திரியில கொண்டு சேர்த்திருக்கணும். இராமச்சந்திரால சேர்த்தா அப்படித்தான் பில்ல போடுவான். எவ்வளவோ போச்சி, அப்பாவும் போச்சி, காசும் போச்சி." என்று வெறுமையாய் தலையைத் திருப்பிக் கொண்டாள் சரண்யா.
"பிள்ளைய வீட்டுல வச்சிட்டு, அவ முன்னாடியே ஏம்பா இப்படி பேசுறீங்க ? அவரு மட்டும் இருந்திருந்தா எவ்வளவு செலவானாலும் பிள்ளையை தேத்தி கொண்டுவரணுமின்னு தான் நெனச்சிருப்பாரு"..
"காசு பணம் கெடக்கு, நமக்கு என்ன முக்கியம் ? என்ன செலவானாலும் நம்ம புள்ள உடம்பு சரியாகி உருப்படியா இருக்கனுமின்னு தான். அதுக்கு காசு பாத்தா முடியுமா ? " என்ற எழிலரசியின் ஏந்தலான வார்த்தைகள் வேம்பரசிக்கு ஆறுதலைத் தந்தது.
"சித்தி, அப்படி இல்ல சித்தி. காசுக்காக நா சொல்லல. அப்பா இறந்து பத்து நாள் கழிச்சு தான் கடைய தொறந்திருக்கு.
கடைய கவனிச்சிக்கறதுக்கும் யாருமில்ல.
"கடைய நா எடுத்து நடத்துறேன், லீசுக்கு எடுத்த பணத்த மாசத்தவணையா தறேன்" ன்னு கணேசன் சொல்றான்."
இதப்பத்தி நடராச பெரியப்பா கேட்டேன். அவரும் "அப்பா உயிரோட இருந்து, கடைய கவனிச்சுக்க முடியலைன்னாலும் இதத்தான் சொல்லிருப்பார். அதனால அப்படியே செய்யின்னு சொல்லிட்டார்."
இனிமே கடை வருமானமும் இருக்காதுல்ல, அக்காவுக்கு ஆஸ்பத்திரி செலவு வேற, சரண்யா கல்யாணத்துக்கு துர்காக்கா போட்ட லோன் வேற கட்டியாகணும் அதத்தான் நா சொல்லிட்டு இருந்தேன்" என்று குரலை உயர்த்தி வாதிட்டுக் கொண்டிருந்தான் சந்தோஷ்.
நடந்துகொண்டிருந்த உரையாடலுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததைப் போல தொங்கிக் கொண்டிருந்த சக்தி வேலின் நிழற்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் துர்கா.
மேற்குப்புற சுவற்றின் நடுமத்தியில் எரியும் அலங்கார மின்விளக்கு அதற்கு கீழே கிழக்கு முகம் பார்த்து ஏற்றப்பட்ட குத்து விளக்கு. இரண்டிற்கும் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த நிழற்படம்.
நிழற்படத்தில் ஒருபக்கம் சாய்ந்தாற்போல அமர்ந்து சிரித்த முகமாய் கொலுவேற்று இருந்தார் சக்திவேல்.
இறந்த காலத்தின் நிகழ்விற்குள் நினைவுகளைக் கொண்டு சேர்க்கும் ஒரு நிழற்படம் நிகழ்ந்த காலத்தின் சாட்சி.
சமீப காலத்திய பாஸ்போர்ட் சைஸ் நிழற்படம் அவரிடம் இல்லை. இது இரண்டரை வருடங்களுக்கு முன் சரண்யாவின் திருமண வரவேற்பன்று எடுத்தது.
மருமகன் சீராய் செய்த வெள்ளை நிற சட்டை, அலைச்சலில் கலைந்த தலைமுடி, கற்றை மீசையில் விரவி இருந்த வெண்ணிற மயிர்கள். கறுத்த நெற்றியில் புருவங்களுக்கு மத்தியில் தீற்றலாய் சந்தனக்குறி, மணமக்களுடன் குடும்ப சகிதமாய் எடுத்துக்கொண்ட குழுப்படத்தில், வருகின்ற உறவினர்களை புன்னகையால் முகமன் செய்து வரவேற்கும் ஒரு உறைந்த காட்சி.
சக்திவேலின் இடதுபக்கத் தோளைப் பற்றி நின்ற துர்காவின் விரல்களை போட்டோஷாப் மாயம் செய்து, அவரை மட்டும் கட்டமாக வெட்டியெடுத்து கண்ணாடி சட்டத்திற்குள் மாட்டி வைத்திருந்தார்கள்.
ஒரு கணம் பார்த்தால் ப்ரேம் சட்டத்திற்குள் இருந்து உதித்து வருவதைப் போலவும், குதித்து வந்துவிட மாட்டாரா என்றும் ஏங்கித்தவித்தாள் துர்கா.
பெருமழைபோல் பெய்துகொண்டிருந்த நினைவுகளில், அலுமினிய பாத்திரத்தில் நீர் நிரம்பும் ஓசையாய் சலசலத்துக் கொண்டிருந்த உரையாடலில் செவி சாய்த்து, "எங்க ஆபிஸ்ல மெடிக்ளைம் வசதி இருக்கு, மெடிக்கல் பில்ஸ அதுல க்ளைம் பண்ணிக்க முடியும். நதி' கிட்ட எதுனா கேட்டியா ? என்றாள் துர்கா.
"ஹ்ம்ம்.. நதியா அக்காகிட்ட கேட்டேன், அவங்க ஹெச்.ஆர். கிட்ட கேட்டு சொன்னாங்க. டாக்குமெண்ட்ஸ் சப்மிட் செஞ்சு
க்ளைம் பண்ணிக்க முடியும்."
"எண்ரோல்- ல இருக்கறதால இந்தமாச சம்பளம் முழுசா வாங்கிக்கலாம். உங்க கம்பெனி பாலிசி படி லாங் டேர்ம் லீவ், லாஸ் ஆப் பே. அடுத்த மாசத்துல இருந்து சம்பளம் வராது, ஆனா ரோல்ல இருக்கலாம்."
"ரீஜாயின் பண்றதா இருந்தா ஹெச்.ஆர். கிட்டயும், டிபார்ட்மென்ட் ல இருந்தும் அப்ரூவல் வாங்கிக்கிட்டு ஜாயின் பண்ணிக்கலாம்ன்னு சொன்னாங்க."
"டாக்டரே நீ எழுந்து நடக்க ரெண்டு மூணு மாசம் ஆகுமின்னு சொல்லிருக்காரு, எனக்கு என்னமோ நீ இருக்குற இருப்ப பார்த்தா சரியாக இன்னும் அஞ்சாறு மாசமாகுமின்னு தோணுது."
"நீ குணமாகி ரீஜாயின் பண்றதுக்கு ரிசைன் பண்ணா வர்ற பி.எஃப். பணம் எதுக்காவது பிரயோஜனப்படும்." என்று அசட்டையாகப் பேசி அவ்விடத்தைவிட்டு கலைந்து சென்றான் சந்தோஷ்.
சந்தோஷின் நம்பிக்கையற்ற வார்த்தைகளால் பேச ஏதுமற்றவளாய், தனது ஏழைமையை நினைத்து விரலிலிருந்த மோதிரத்தை உருட்டியபடி இருந்தாள் துர்கா.
வேம்பரசியிடம் ஆறுதலும், துர்காவிடம் அறிவுரைகளும் சொல்லி எழிலரசி விடைபெற்றுச் சென்ற அந்த மாலை மந்தமாய் நகர்ந்துகொண்டிருந்தது.
எளிதில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகிறோம், கனமழையின் பாதிப்பிலிருந்தும், பெரும்புயலின் இடர்களிலிருந்தும், பேரலையின் பெருஞ் சீற்றத்திலிருந்தும், உருக்குலைத்த நிலநடுக்கத்திலிருந்தும், பிரியமானவர்களை சாவுக்குத் தின்னக் கொடுத்துவிட்ட பெருந்துயரிலிருந்தும் அத்தனை இயல்பாக.
நகரும் இந்த காலத்தின் வேகத்திற்கு நாமும் நகரவேண்டுமே. கால்களை உடைத்துவிட்டு சக்கரங்களைத் தந்திருக்கிறது இந்த காலம். இது கூட பரவாயில்லைதான் அவளுக்கு.
நான்கு சுவர்களுக்குள் யார் தயவின்றியும் நகர முடிகின்றது. தொட்டி மீன்களுக்கு உணவளிக்கவும், ஜன்னல் திண்டிலிருக்கும் க்ரோட்டன்ஸ் செடிகளுக்கு நீர் ஊற்றவும் அவளால் முடிகிறது.
"படுக்கையறையின் வாசல்வழியாகக் கூட சிரமப்பட்டேனும் சென்றுவிடலாம். இந்த கழிவறையின் வாசல்தான் சக்கரங்களோடு முட்டி நிற்கிறது. ஒவ்வொருமுறையும் இயற்கை உபாதைகள் அழைக்கும் போதெல்லாம் அம்மாவைக் கூப்பிடுவது சங்கடமாகவும், சரண்யாவை அழைப்பது சங்கோஜமாகவும் இருக்கிறது."
"இரண்டொருமுறை இருவரும் தூக்கி சிரமப்பட்டு அமரவைத்து, நீட்டிய கால்களை மடக்கவும் முடியாமல் "போதும் போதும்" என்றாகிவிட்டது."
"தடித்த பனிவிழும் நாட்களும், உட்கொண்ட மாத்திரைகளின் புண்ணியமும் ஒருமணிநேரத்திற்கு ஒருமுறை இயற்கை அழைக்கின்றது." என்று மனத்திற்குள்ளாகவே புலம்பிக்கொண்டிருந்தாள் துர்கா.
ஆனால், அம்மா அறிந்திருந்தாள் அவளின் தேவைகளை.
படுக்கையறையின் கட்டிலை வாகாகத் திருப்பி, அறையின் குறுக்காக கனத்த போர்வையை திரைச்சீலையாக படரவிட்டு, அறையின் கதவை அரையளவு திறந்து வைத்துச் சென்றாள்.
"கட்டில் இருக்கிறது. கட்டிலுக்குக் கீழே பெட் ஃபேனும். பணிவிடை செய்ய அம்மாவும்.
மேலும் இந்த உலகத்திலிருந்து மறைந்து கொள்ளவும்,
உலகத்தை மறைத்துக் கொள்ளவும் தடித்த திரைச்சீலை தொங்குகிறது."
இப்போது மூச்சு விடுவதற்கு எளிதாகவும், ஆசுவாசமாகவும் இருப்பதாக உணர்ந்தாள் துர்கா.
திரைச்சீலையை அள்ளி எடுத்து நுகர்ந்தபோது சலவைத்தூளின் கார வாசம் வீசியது.
வழக்கமாக சக்திவேல் போர்த்தித்த தூங்கும் போர்வைதான் அது.
அவரது பெயர்ந்திருந்த வலதுகால் பெருவிரல் நகம் குத்திக் கிழித்து ஓரத்தில் ஒரு விரல் நுழையுமளவிற்கு துளைவிழுந்த பழுப்பு நிற அப்போர்வையை பார்க்கும்போது சிறுவயதில் அவளது அப்பா சொன்ன கதை ஒன்று ஞாபத்திற்கு வந்தது.
அப்போது அவளுக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும். அமர்ந்திருந்த அப்பாவின் பெயர்ந்த நகத்தைச் சுட்டி "ஏம்பா இந்த வெரலு ஒடஞ்சிருக்கு" என்றவளிடம்
"உங்க அம்மாவ பொண்ணு பாத்துட்டு வந்த பத்து நா கழிச்சிதான் சரின்னு தகவல் சொல்லி அனுப்பினாங்க. நம்ம வீடு அப்ப ஓல வீடுல்லா, வரப்போற மஹாராணிக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னிட்டு ஓலைய பிரிச்சி ஓடுக்கு மாத்துனேன். உத்தரத்துல பலகைய ஏத்தும்போது கவுறு அறுந்து கால்ல விழுந்து அப்போ பேந்தது இந்த நெகம்" என்று சிதைந்த நகத்தை சுட்டிக்காட்டினார் சக்திவேல்.
உதட்டில் முந்திய புன்னகையை சோழிப்பற்களுக்குள் மறைத்து செல்லக் கோபம் பூண்டவளாய் "நா மவராணி இவரு மவராசன். நா உப்ப தொட்டு கஞ்சி குடிச்சாக்க, இவரு ஊறுகாயத் தொட்டு கஞ்சி குடிச்சாரு. அதே நெலம தான் இன்னிக்கும்" என்று முன்கையால் சக்திவேலின் தோளை இடித்து சிரித்து நகர்ந்தாள் வேம்பரசி.
அப்பா அம்மாவின் இந்த ஊடலை ரசித்து, வாயைப் பொத்தி குலுங்கிச் சிரித்தாள் அந்த ராஜவம்சத்து இளவரசி.
"சேட்டைக்காரி என்ன பண்ணுறா ? சேட்டைக்காரி எங்க இருக்கா ? சேட்டைக்காரி இங்க இருக்கா " என்று நந்தினியோடு போர்வைக்குப் பின்னாலிருந்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தாள் துர்கா.
"என்ன சொன்னாலும் கேக்குதில்ல, எத்தனை வாட்டி சொல்றது? பீம்மா கிட்ட போவாதன்னு."
"பீம்மா கால்ல புண்ணு இருக்குல்ல, நீ பீம்மாவ டிஸ்ட்டப் பண்ணா டாட்டர் உனக்கும் ஊசி போடும். பீம்மா கிட்ட போவாத." என விளையாடிக்கொண்டிருந்த நந்தினியை இடுப்பில் தூக்கி இருத்திக்கொண்டாள் சரண்யா.
சரண்யாவின் இடுப்பிலிருந்தபடி தனது ஆட்காட்டி விரலால் தோளை குத்தி ஊசி போடுவதுபோல பாவனை செய்து உதட்டைக் குவித்து "ஊஸி..ஊஸி" என்றாள் நந்தினி.
"ஆம்மா, ஊஸ்ஸி.. அங்க போவக்கூடாது சரியா" என்று இடுப்பிலிருந்த நந்தினியை ஹாலில் இறக்கிவிட்டாள்.
துர்கா தனது முகத்திற்கு முன்னாள் இருந்த போர்வையின் துளைவழியாக வெளியே உள்ள உலகத்தைப் பார்த்தாள். சிறு துளையின் அளவு கொண்ட சின்னஞ்சிறு உலகத்தில் நந்தினி மட்டும் விளையாடிக்கொண்டிருந்தாள்.
"போம்மா.. உள்ள வந்தாலே எனக்கு தலவலிக்கி, இந்த மூத்திர வாடையில நீ தான் கெடக்கணும்" என்று எரிந்து விழுந்து மடியிலேயே உறங்கிவிட்ட குழந்தையை ஹாலில் ஒரு பாய்விரித்துப் படுக்க வைத்து முற்றத்தை அளந்தவாறு யாரிடமோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாள் சரண்யா.
"இது என்ன சொன்னாலும் கேக்காது, என்ன பேசுனாலும் விதண்டாவாதந்தா பண்ணுவா. நா எதுனா பேசி தூங்கிட்டு இருக்க பிள்ள காதுல விழுந்தா, அவ வருத்தப்படுவா." என்றெண்ணி பதிலேதும் தராமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து, படுக்கையறைக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த துர்காவின் நைட்டியைக் கீழிறக்கிவிட்டு மின்விளக்கை அணைத்து அவளருகில் படுத்துக்கொண்டாள்.
அனுதாபமும், அருவெறுப்பும் நூலளவில் வேறுபடுகிறது.
இயலாமையின் மீதான கருணை அனுதாபத்தையும்,
இயலாதவர்களின் மீதான வெறுப்பு, அருவெறுப்பையும் தருகிறது.
அசதியும் சோம்பலும் அயர்ந்து தூங்கிப்போன துர்கா, வரவேற்பறையில் யாரோ பேசிக்கொண்டிருந்த சப்தத்தைக் கேட்டு கண்விழித்தாள்.
"இப்ப உடம்பு தேவலையா." என்றார் சரண்யாவின் கணவர் மணி.
"ஆம, மாமா. இப்ப பரவால்ல. படுத்தே இருக்கறதால முதுகுவலி மட்டும்." என்றாள்.
"சென்னைக்கு ஒரு வேல விஷயமா வந்தேன். பிள்ளையையும் பாத்து ரொம்ப நாள் ஆச்சில்லா, தாத்தாவும் "பேத்திய தேடுது, கூப்டிட்டு வா" ன்னு ரெண்டு நாளா சொல்லிட்டு இருக்காரு. அதான் உன்னையும் பாத்து, கொழந்தையையும் அழைச்சிட்டு போலான்னு வந்தேன்." என்றார்.
"சரி மாமா" என்று வழக்கமான புன்னகையொன்றைத் தந்தாள்.
"நந்து, பீம்மாவுக்கு ஒரு "முத்தா" குடு" என்று கரங்களில் இருந்த நந்தினியை துர்கா பக்கம் சாய்த்தார்.
அது மேல்வாயில் இரு பற்கள் தெரிய சிரித்து, "முத்தா" என்று துர்காவின் கன்னத்தை ஈரமாக்கியது.
முற்றத்திலிருந்து "ஏங்க" என்று சரண்யாவின் குரல் வந்ததும் இருவரும் கையசைத்து விடைபெற்றுச் சென்றார்கள்.
அடிவயிறு கனத்து வலியெடுத்தது. "அம்மா" என்றழைத்தாள். அம்மா அவர்களை வழியனுப்ப சென்றிருக்கக் கூடும்.
கட்டிலில் சாய்ந்து கைகளை தரையில் துளாவி பெட் ஃபேனின் கைப்பிடியை பிடித்து மேலே தூக்கினாள்.
தகரத்தாலான ஆப்பு வடிவம் கொண்ட பெட் ஃபேன். மேற்புறத்தில் நீள்வட்ட வடிவதில் துளை. எடுத்துச் செல்வதற்கு ஏற்ப ஒருபக்கத்தில் கைப்பிடி.
நைட்டியை இடுப்புவரை மெல்லமாக உயர்த்தி, திறந்து கிடந்த தொடையை போர்வை போர்த்தி மறைத்தாள்.
வலதுபக்க பிருட்டத்தைத் தூக்கி, இருதொடைகளுக்கு மத்தியில் பெட் ஃபேனை வைத்து கண்களை இறுக மூடி சிறுநீர் கழித்தாள். அடிவயிறு லேசானது போல தோன்றியது.
சிறுநீர் கழித்து முடித்ததும் பெட் ஃபேனை கட்டிலுக்கீழே வைத்து, தொடையில் சிதறிய மூத்திரத் துளிகளை நைட்டியை உருட்டித் துடைத்துக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே வானத்தைப் பார்த்தாள். நீலநிறம் நீர்த்து வெண்மேகம் படர்ந்திருந்தது.
நிசப்தம் நிலைகொண்டிருந்த அறையில் கடிகார முட்கள் நகரும் ஓசை மட்டும் "டடக், டடக்" என்று ஒலித்துக் கொண்டிருந்தது.
( வீடு திரும்பல்* )
நிழலும் சுடும், நிழலும் நிஜம்; கண்ணாடி ஒரு அறிவியல் முரண்.
சொல்லப்போனால் நிழல் தான் நிகழ்வின் சாட்சியமாக நிற்கிறது. பேரன்பின் சாட்சியமாய், அந்தரங்கங்களின் பார்வையாளனாய், தனிமையின் துணையாய், ஈருடல் பிணைந்திருக்கும் காமத்தில் உடல் மேல் உடலாய், எல்லா பருப்பொருளுக்கும் நிழலுண்டு.
பிணத்திற்கும் கூட நிழலுண்டே, அசைவற்ற நிழல். புதைக்கப்பட்ட நிழல் வளர்ந்து ஒரு மரமாகி நிழல்தருகிறது. பிடிசாம்பலாய் கரைக்கப்பட்ட நிழல் ஒரு நீர்த்தாவரமாகிறது. நினைவுகளாகி சில நிழல்கள் நிலைபெற்று நின்று விடுகிறது. அங்கு நினைவுகள் வளர்ந்து மரமாகிறது.
மருத்துவமனை வளாகத்தின் வேப்பமரக்காற்று அறைக்குள் நுழைந்து திரைச் சீலைகளை படபடக்கச் செய்தது. போர்வையை விலக்கி நான்கு விரல்களை நெற்றியில் பதித்து "பிள்ளைக்கு காய்ச்சல் அடிக்குதா?" என்று வினவும் அப்பாவின் அக்கறையான ஸ்பரிசம் போல துர்காவைத் தழுவியது.
போர்வையை மடித்து கால்களை கட்டிலில் பரப்பி அமர்ந்திருந்தாள் துர்கா. கண்ணாடி ஜன்னலின் மீது விழுந்த சூரிய ஒளி கட்டிலில் கிடந்த அவள் பாதத்தில் முத்தமிட்டது.
புழுதி படிந்திடாத, கற்களைக் கண்டிடாத, மண்ணை மிதித்திடாத, சாலையில் நடந்திடாத, இத்தனை வருடங்களாய் காலுறைக்குள் பொதிந்து கிடந்த, சிசுவின் மிருதுவான அவள் பாதங்களில் விழுந்த ஒளி ஊடுருவி, உருக்கிய உலோகமென இளஞ்சிகப்பாய் மின்னியது.
டிஸ்சார்ஜ் செய்து வீடு திரும்புவதற்கான முஸ்தீபுகளில் மும்மரமாக ஈடுபட்டிருந்தால் எழிலரசி.
மென்மெல்லிய கால்களை கோட்டோவியமாக்கியது போல, பிளாஸ்ட்டிக்கும் கம்பிகளும் இணைந்த நவீன ஓவியமாய், அறையின் மூலையில் சாத்தப்பட்டிருந்த ஹாலிப்பர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள் துர்கா.
ஓரு நவீன ஓவியத்தை அணுகுதல் போலத்தான் ஹாலிப்பர்களையும் அணுகிடல் வேண்டும். ரெக்சின், ரப்பர், பிளாஸ்ட்டிக், தோலாலான பெல்ட்டுகள், ரிவெட்டுகள், மற்றும் போல்ட்டுகளுக்குள் இருக்கும் உயிருள்ள கால்களை, கால் தாங்கும் உடலை, உடல் கொண்ட கனவை, கனவுகளின் பாரங்களை, இயற்கையின் ஒத்துழைப்பு இல்லாது செயற்கையின் துணைகொண்டு வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிற மனதை. ஓரு நவீன ஓவியத்தை அணுகுதல் போலத்தான் அணுகிட வேண்டும்.
ஹாலிப்பர்களை கழற்றுவதும் மாட்டுவதும் மட்டும் அவள் மறைத்து செய்ததில்லை, கழற்றிய பின் ஹாலிப்பர்களையும் யாரும் அறியாவண்ணம் மறைத்தே வைத்திருப்பாள்.
அதுதான் அவளை இயக்குகிறது, அதுதான் அவளை நடப்பிக்கிறது, சாத்தியமற்ற தூரங்களை அதுதான் கடக்கவைக்கிறது. ஆனால் தன்னுடலைவிட்டு வெளியேறிய பின் அதனை ஒரு கழிவாகவே அவள் எண்ணினாள்.
ஹாலிப்பரின் குறுகலான கால் அமைப்பும், தொடைப்பகுதியில் அழுத்தம் ஏற்படாதிருக்க ஒட்டப்பட்ட வியர்வையும் அழுக்கும் ஊறியஇரப்பர் சீட்டும் அழகுப் பொருளாய் ஷோக்கேஸை எந்நாளும் அலங்கரித்திடாது.
மாறாக, கழற்றி காட்சிக்கு வைக்கப்பட்ட ஹாலிப்பர்கள் தன் இயலாமையைக்காட்டி கருணையை யாசிப்பது போலவும், வரவேற்பறையில் உள்ளாடைகளை உலர்த்த விடுவதாகவும், பொதுவெளியில் துகிலுரிப்பதாகவும் அவளுக்குத் தோன்றிற்று.
கண்களும் கருத்தும் தவிர்ப்பதற்கியலாததாய் அதைசுற்றியே வட்டமிட்டது.
உளவியல் ரீதியான இடர்களாலும், அது தன்னுள் நிகழ்த்தும் சஞ்சலங்களாலும், தன்னிரக்கம் கொண்டு தள்ளாடும் தன்மனதை சமப்படுத்த தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் சுய சமாதானங்களும், தனக்குள்ளே நிகழ்த்தும் தர்கங்களும் எல்லோருக்கும் பொதுவானதோ, அல்லது எல்லோராலும் உணரக்கூடியதோ அல்ல. அது, மைதூனத்தைப்போல் தான் மட்டுமே உணரக்கூடியது.
~~
"டாக்டர் சொன்னத கேட்டியா? மாவுக்கட்ட கழட்டி மட்டை வச்சி கட்டிருக்காங்க, இன்னும் ரெண்டு மூணு மாசம் ரெஸ்ட் எடுத்தாதான் சரி ஆவும். கால ஸ்ட்ரெயின் பண்ண கூடாது. சாதாரண கால் மாதிரி இருந்தாக்கூட பரவால்ல, போலியோ கால்ல அடி பட்டிருக்கறதால நல்ல சாப்பிட்டா தான் ரெத்தம் ஊறும். அடம் பிடிக்காம நல்ல சாப்பிடு, எது வேணும்ன்னாலும் தயங்காம அம்மாகிட்டயோ தம்பிகிட்டயோ கேளு. தங்கச்சிய இன்னும் ஒருவாரத்துக்கு வீட்டுல இருக்க சொல்லிருக்கேன், மருந்து லிஸ்ட் எல்லாம் அவ கிட்ட கொடுத்திட்டு போறேன், வேற என்ன உதவின்னாலும் எங்கிட்ட கேளு சரியா.?" என்றவாறு மாற்றுத்துணிகளை மடித்து கட்டிலில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் எழிலரசி.
"சித்திதான் பாவம், எனக்காக எவ்வளவு மெனக்கெடுறா. ஊட்டிவிடுறதும், உடுப்பு மாற்றி விடுறதும், குளிப்பிக்கிறதும், மத்தவங்க சங்கோஜப்படுற ஒன்னுக்குப் பிடிக்கிறதும்,பெட் ஃபேன் மாத்துறதும் எனக்காக அத்தனை அநாயாசமா செய்யுறா."
"ஆனா அம்மாவவிட சித்திக் கிட்ட தான் "இத செய் சித்தி" ன்னு சகஜமா சொல்லவும்முடியுது."
"எனக்கு பணிவிடை செய்யனும்ன்னு சித்திக்கின்னு என்ன தலைஎழுத்தா? ஒத்த பொண்ண பெங்களூரில கட்டிக்கொடுத்துட்டு சொந்தவீட்டுல சுபபோகமா இருக்கிறவதான்."
"ஒருநாளைக்கு ஓராயிரம் தடவ 'எழில், எழில்' ன்னு சித்திய தேடுற சித்தப்பா. அவரும் பாவம் சித்தி இல்லாம இந்த பன்னிரெண்டு நாளா சாப்பாட்டுக்கு கஷ்ட்டப்பட்டுருப்பாரு."
"ம்ம்.. அம்மாவாலதான் வரமுடியாது சரண்யாவாச்சும் வந்து ரெண்டு நாள் வந்து தங்கிட்டு போயிருக்கலாமில்ல ?"
"அவள சொல்லியும் குத்தமில்ல. நந்தினிய சமாளிக்கவே அவளுக்கு நேரம் சரியா இருக்கும். சேட்டக்காரக் குட்டி."
என்று தனக்குள்ளாகவே பேசிக்கொண்டு "சரி" என்பது போல் எழிலரசியிடம் தலையை அசைத்தாள் துர்கா.
கட்டிலின் மேலிருந்த தனது கைப்பையை எடுத்து அதன் அறைகளைத் திறந்தது துழாவினாள். என்றோ கடித்த ஆப்பிள் கறுத்துச் சுருங்கி அழுகிப்போய் இருந்தது. அதை விட்டெறிந்து, உள்ளங்கை அகல கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தாள்.
அவள் கன்னங்கள் உலர்ந்து சொரசொரப்பாய் இருந்தது, வலப்பக்க உதட்டிலிருந்த காயம் வற்றி பொருக்காய் உலர்ந்திருந்தது. கண்களை சுற்றி கருப்பு வளையம் விழுந்து மாடக் குழிக்குள் அசையும் சிறு அகல் ஒளியாய் கண்கள் மங்கலாய் மின்னியது. ரேகைபோல் வரிவரியாய் கழுத்தில் அழுக்குப் பதிந்திருந்தது.
மனசு போல இருந்தது உடம்பு.
சோகையாய் தன்முகத்தைப் பார்த்து புன்னகைத்து, பையிலிருந்து ஒரு சிகப்பு நிற ஸ்டிக்கர் பொட்டை இருபுருவங்களுக்கு மத்தியில் வைத்து அழுத்தி, கலைந்த்திருந்த தலைமுடியைத் திருகி கொண்டையிட்டுக் கொண்டாள் துர்கா.
இடக்கால் முட்டி மடங்காதவாறு நீட்டிப் பிடித்தபடி பாதி தொடையிலிருந்து பாதி முழங்கால் வரை நீண்டிருந்த ஒரு பட்டி. அதை சுற்றிப்ப்பிடித்தாற்போல் இரண்டு மூன்று சுற்றுகள் சுற்றப்பட்டிருந்த கபில நிற ஈரிழை சல்லடைத் துணி. சிறு கிளைபோல் நீண்டிருந்த முழங்காலைத் தொடர்ந்து கமல மொட்டாய் குவிந்திருந்த பாதம்.
வலது கையால் வலது காலைப் பிடித்து, கட்டிலுக்கு வெளியே வீசினாள். அது ஒரு தூவராடையைப் போல அசைந்துகொண்டிருந்தது.
இடது காலை கட்டிலின் விளிம்புவரை மெல்லமாக நகர்த்தினாள். "சுருக்" என்று வலித்ததும் நிறுத்திக்கொண்டாள். அப்போது வீசிய காற்று அவள் நைட்டிக்குள் புகுந்து இரு தொடைகளுக்கிடையே பலூன் போல உப்பி உடலை கூசச்செய்ததும் ஆசுவாசம் அடைந்தவளாய் கட்டிலில் சாய்ந்தாள் துர்கா.
ஹாலிப்பர் இல்லாது துர்காவால் நடக்க இயலுமா என்றால் இயலும். ஆனால் அதற்கு இரு ஊன்றுகோல்களின் துணைவேண்டும்.
மொத்த உடலின் பாரத்தை முன்னிரு கைகளில் செலுத்தி இரு ஊன்றுகோல்களை ஊன்றி நிற்கும்போது, கால்கள் பின்புறம் வளைந்து மூட்டுகள் பொருந்திக்கொள்ளும்.
ஒரே நேரத்தில் ஊன்றுகோலிரண்டையும் தூக்கி வைத்து, அதன்பின் இருகால்களையும் தாவி நடப்பது, இறகை சமப்படுத்தி தரையில் சிதறிய தானியங்களை உண்ணும் சிறு பறவைபோலிருக்கும்.
ஊன்றுகோலும் இல்லாது போனால் முகில் மேல் நகரும் நிலவாய் தரை மேல் தவழ்வாள்.
குனிந்து முன்னிரு கைகளைத் தரையில் ஊன்றி சதைப்பிடிப்பற்ற பிருட்டங்களை சற்று மேலே தூக்கி, தோல் போர்த்திய எலும்பான இரு கால்களையும் பின்னிக் கொண்டு, மடிந்து கிடக்கும் பாதங்களைத் தரையில் பதித்து வீட்டின் அறைகளுக்குள் தவழ்வாள். அது பார்ப்பதற்கு, கல்லாய் சமைந்துவிட்ட தொன்ம யாளி உயிர்கொண்டு உலவுவதைப் போல் இருக்கும்
இப்போது நீட்டிய கால்களை மடக்க முடியாமற்போனதால் நிலவொளியில் பறவை துஞ்சும் பெருமரமாய் அசைவற்று இருந்தாள் துர்கா..
~~
மருத்துவரின் பரிந்துரை பேரில் தான் கொண்டுவந்திருந்த சக்கர நாற்காலியில், எழிலரசி உதவியோடு துர்காவை அமரவைத்தான் சந்தோஷ்.
இதுவரைக் கண்டிடாத, புதிதாய் கிடைத்த விளையாட்டு பொம்மையை ஆச்சரியமும் அச்சமும் கலந்து அணுகும் குழந்தையாய், அந்த சக்கர நாற்காலியை கையாண்டாள் துர்கா.
சாதாரண நாற்காலிகளைப்போலத்தான் சக்கர நாற்காலிகளும். உட்க்காருமிடத்திலும், முதுகுசாய்க்கும் இடத்திலும் மெத்தென்ற பஞ்சணைகள், முன்னிரு கால்களுக்குப் பதில் தடிமனான இரு சிறிய சக்கரங்கள் பின்னிரு கால்களிருக்குமிடத்தில் பெரிய இரு சக்கரங்கள். தள்ளிச் செல்வதற்கு ஏற்ப பின் புறத்தில் இரு கைப்பிடிகள். பாதங்கள் பதியுமிடத்தில் மடித்து நீட்டும் வகையில் கால் பலகை.
சக்கர நாற்காலியில் வலப்புறம் ஒருக்களித்து சாய்ந்தமர்ந்திருந்த துர்காவின் வலதுகால் மடிந்து தரையில் உரசிக்கொண்டிருந்தது. இடதுகால் தரைபடாது காற்றில் மிதந்துகொண்டிருந்தது.
வலப்புற சக்கரத்தை மெதுவாக சுழற்ற சக்கர நாற்காலி இடப்புறம் திரும்பி சுவற்றில் மோதுவதற்குள் நிறுத்தினாள் துர்கா.
"ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்ட்டமாதான் இருக்கும். போகப்போகப் பழகிடும். பட் இது டெம்ப்ரவரி தான். ஹாலிப்பர்ஸ் சப்போர்ட் இல்லாம உங்களால நடக்க முடியாதில்லையா.? அதுக்காகத்தான் இந்த சின்ன ஏற்பாடு. மறுபடியும் எழுந்து நடக்க ஆரம்பிச்சதும் இது உங்களுக்குத் தேவைப்படாது."
"இப்போதைக்கு ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேண்டாம். ஆனா, வலியெல்லாம் தீர்ந்து கட்ட ரிமூவ் செஞ்சதுக்கு அப்புறம் ரெகுலரா எக்சைர்ஸைஸ் பண்ணனும்."
"வலி தீர மாத்திரையும் மருந்தும் எழுதித் தறேன். டெய்லி எடுத்துக்கோங்க. Get well soon. God bless". என்று துர்காவின் உச்சந்தலையில் கைவைத்து ஆசிர்வதித்தவராய் வழியனுப்பினார் மருத்துவர்.
"ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்ட்டமாதான் இருக்கும். போகப்போகப் பழகிடும். பட் இது டெம்ப்ரவரி தான். ஹாலிப்பர்ஸ் சப்போர்ட் இல்லாம உங்களால நடக்க முடியாதில்லையா.? அதுக்காகத்தான் இந்த சின்ன ஏற்பாடு. மறுபடியும் எழுந்து நடக்க ஆரம்பிச்சதும் இது உங்களுக்குத் தேவைப்படாது."
"இப்போதைக்கு ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேண்டாம். ஆனா, வலியெல்லாம் தீர்ந்து கட்ட ரிமூவ் செஞ்சதுக்கு அப்புறம் ரெகுலரா எக்சைர்ஸைஸ் பண்ணனும்."
"வலி தீர மாத்திரையும் மருந்தும் எழுதித் தறேன். டெய்லி எடுத்துக்கோங்க. Get well soon. God bless". என்று துர்காவின் உச்சந்தலையில் கைவைத்து ஆசிர்வதித்தவராய் வழியனுப்பினார் மருத்துவர்.
~~
டாக்சியில் ஏற்றுவதைக் காட்டிலும் இறக்குவது சுலபமாக இருந்தது. சக்கர நாற்காலியில் இறக்கிவைக்கப் பட்ட துர்காவை சூழ்ந்த சுற்றத்து நட்புகளின் வழமையான அன்புக்கூறலுக்கும் நலவிசாரிப்புகளுக்கும் பிறையாய் புன்னகையேந்திய தன் முகத்தை பதிலாயத் தந்தாள்.
காம்பௌண்ட் கதவின் இடப்புறம் ஒரு படுக்கையறை. வலப்புறம் மேல்மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள். காம்பௌண்ட் சுவரிலிருந்து வாசற்படிவரை நீண்ட சிமெண்ட் பாவிய முற்றம். முக்காலடி உயரம் கொண்ட மூன்று படிகளைத்தாண்டி . செவ்வகவடிவ வரவேற்பறை. வரவேற்பறையின் ஒரு மூலையில் சமையலறையும் அதன் பின்பகுதியில் கழிவறையும், மறுமூலையில் மற்றுமொரு படுக்கையறையும் இருந்தது.
படிகளில் சாய்வுப் பலகையை அமைத்து, சக்கரநாற்காலியைப் பின்புறம் சாய்த்து தேர்ந்த செவிலியனைப்போல வரவேற்பறை மத்தியில் துர்காவைக் கொண்டு நிறுத்தினான் சந்தோஷ்.
வழக்கமாக சக்திவேல் அமர்ந்திருக்கும் சோஃபா இடமாற்றப்பட்டு, இடப்புற சுவற்றில் புகைப்படமாக தொங்கிக்கொண்டிருந்தார். எதிர்புறச் சுவற்றில் முதுகு சாய்த்து, கைகளால் கால்களைக் கட்டிக் கொண்டு முந்தானையின் நுனியால் வாயைப் பொத்தி தரைபார்த்த விழிகளோடு மௌனித்திருந்தாள் வேம்பரசி.
சக்கர நாற்காலியின் கால் பலகை மீதேறி, துர்காவின் நைட்டியைப் பற்றி தொடை மீது ஏற முற்பட்ட நந்தினியை வாரி அணைத்து அறையின் மற்றொரு மூலையில் அமர்ந்து கொண்டாள் சரண்யா. வாசற் கதவின் மரச்சட்டத்தில் சாய்ந்து, காய்ந்து உலர்ந்த மாவிலைத் தோரணத்தைக் கிள்ளிய படி வீதியை வெறித்தபடி பார்த்துக் கொண்டுந்தான் சந்தோஷ்.
கண்முன் ஒரு விரலை நிறுத்தினால் மொத்த உலகத்தையும் சிறு விரல் மறைத்துக் கொள்வதைப் போல துயரத்தின் அண்மை.
நம்பிக்கையின் வெளிச்சத்தை மறைத்து இழப்பின் இருளையே வழியெங்கும் படரச் செய்கிறது. பெருந்துயரைப் புறந்தள்ள பிரியமானவர்களின் சமாதானமும்,
இழப்பை ஈடுசெய்ய பேரன்பின் ஆறுதலும் இல்லாது போனால் மானுடம் இங்கேது.?
தயாரித்துக் கொண்டுவந்த தேனீரை எல்லோருக்கும் பரிமாறி, ஒரு குவளைத் தேனீரை துர்காவிற்கும் கொடுத்து, வேம்பரசி அருகிலமர்ந்து கொண்டாள் எழிலரசி.
சிறுவயதில் சக்திவேலின் தொடைமீது ஒரு காலைப் போட்டு, தோளோடு இறுக்கி அணைத்து இடமார்பில் கன்னம் புதைத்திருப்பாள் துர்கா. அந்த தேகச்சூடு இந்த தேனீர்க் குவளைக்கு.
நடுங்கும் குவளையை இரு கைகளால் பிடித்து குவளையின் விளிம்பை உலர்ந்து வெடித்த உதட்டில் பதித்தாள். "சுர்ர்.." என்று சுட்டதும் "அப்பா" என்றாள்.
~~
"அடிபட்ட உடனே சின்ன ஆஸ்பத்திரியில கொண்டு சேர்த்திருக்கணும். இராமச்சந்திரால சேர்த்தா அப்படித்தான் பில்ல போடுவான். எவ்வளவோ போச்சி, அப்பாவும் போச்சி, காசும் போச்சி." என்று வெறுமையாய் தலையைத் திருப்பிக் கொண்டாள் சரண்யா.
"பிள்ளைய வீட்டுல வச்சிட்டு, அவ முன்னாடியே ஏம்பா இப்படி பேசுறீங்க ? அவரு மட்டும் இருந்திருந்தா எவ்வளவு செலவானாலும் பிள்ளையை தேத்தி கொண்டுவரணுமின்னு தான் நெனச்சிருப்பாரு"..
"காசு பணம் கெடக்கு, நமக்கு என்ன முக்கியம் ? என்ன செலவானாலும் நம்ம புள்ள உடம்பு சரியாகி உருப்படியா இருக்கனுமின்னு தான். அதுக்கு காசு பாத்தா முடியுமா ? " என்ற எழிலரசியின் ஏந்தலான வார்த்தைகள் வேம்பரசிக்கு ஆறுதலைத் தந்தது.
"சித்தி, அப்படி இல்ல சித்தி. காசுக்காக நா சொல்லல. அப்பா இறந்து பத்து நாள் கழிச்சு தான் கடைய தொறந்திருக்கு.
கடைய கவனிச்சிக்கறதுக்கும் யாருமில்ல.
"கடைய நா எடுத்து நடத்துறேன், லீசுக்கு எடுத்த பணத்த மாசத்தவணையா தறேன்" ன்னு கணேசன் சொல்றான்."
இதப்பத்தி நடராச பெரியப்பா கேட்டேன். அவரும் "அப்பா உயிரோட இருந்து, கடைய கவனிச்சுக்க முடியலைன்னாலும் இதத்தான் சொல்லிருப்பார். அதனால அப்படியே செய்யின்னு சொல்லிட்டார்."
இனிமே கடை வருமானமும் இருக்காதுல்ல, அக்காவுக்கு ஆஸ்பத்திரி செலவு வேற, சரண்யா கல்யாணத்துக்கு துர்காக்கா போட்ட லோன் வேற கட்டியாகணும் அதத்தான் நா சொல்லிட்டு இருந்தேன்" என்று குரலை உயர்த்தி வாதிட்டுக் கொண்டிருந்தான் சந்தோஷ்.
நடந்துகொண்டிருந்த உரையாடலுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததைப் போல தொங்கிக் கொண்டிருந்த சக்தி வேலின் நிழற்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் துர்கா.
மேற்குப்புற சுவற்றின் நடுமத்தியில் எரியும் அலங்கார மின்விளக்கு அதற்கு கீழே கிழக்கு முகம் பார்த்து ஏற்றப்பட்ட குத்து விளக்கு. இரண்டிற்கும் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த நிழற்படம்.
நிழற்படத்தில் ஒருபக்கம் சாய்ந்தாற்போல அமர்ந்து சிரித்த முகமாய் கொலுவேற்று இருந்தார் சக்திவேல்.
இறந்த காலத்தின் நிகழ்விற்குள் நினைவுகளைக் கொண்டு சேர்க்கும் ஒரு நிழற்படம் நிகழ்ந்த காலத்தின் சாட்சி.
சமீப காலத்திய பாஸ்போர்ட் சைஸ் நிழற்படம் அவரிடம் இல்லை. இது இரண்டரை வருடங்களுக்கு முன் சரண்யாவின் திருமண வரவேற்பன்று எடுத்தது.
மருமகன் சீராய் செய்த வெள்ளை நிற சட்டை, அலைச்சலில் கலைந்த தலைமுடி, கற்றை மீசையில் விரவி இருந்த வெண்ணிற மயிர்கள். கறுத்த நெற்றியில் புருவங்களுக்கு மத்தியில் தீற்றலாய் சந்தனக்குறி, மணமக்களுடன் குடும்ப சகிதமாய் எடுத்துக்கொண்ட குழுப்படத்தில், வருகின்ற உறவினர்களை புன்னகையால் முகமன் செய்து வரவேற்கும் ஒரு உறைந்த காட்சி.
சக்திவேலின் இடதுபக்கத் தோளைப் பற்றி நின்ற துர்காவின் விரல்களை போட்டோஷாப் மாயம் செய்து, அவரை மட்டும் கட்டமாக வெட்டியெடுத்து கண்ணாடி சட்டத்திற்குள் மாட்டி வைத்திருந்தார்கள்.
ஒரு கணம் பார்த்தால் ப்ரேம் சட்டத்திற்குள் இருந்து உதித்து வருவதைப் போலவும், குதித்து வந்துவிட மாட்டாரா என்றும் ஏங்கித்தவித்தாள் துர்கா.
பெருமழைபோல் பெய்துகொண்டிருந்த நினைவுகளில், அலுமினிய பாத்திரத்தில் நீர் நிரம்பும் ஓசையாய் சலசலத்துக் கொண்டிருந்த உரையாடலில் செவி சாய்த்து, "எங்க ஆபிஸ்ல மெடிக்ளைம் வசதி இருக்கு, மெடிக்கல் பில்ஸ அதுல க்ளைம் பண்ணிக்க முடியும். நதி' கிட்ட எதுனா கேட்டியா ? என்றாள் துர்கா.
"ஹ்ம்ம்.. நதியா அக்காகிட்ட கேட்டேன், அவங்க ஹெச்.ஆர். கிட்ட கேட்டு சொன்னாங்க. டாக்குமெண்ட்ஸ் சப்மிட் செஞ்சு
க்ளைம் பண்ணிக்க முடியும்."
"எண்ரோல்- ல இருக்கறதால இந்தமாச சம்பளம் முழுசா வாங்கிக்கலாம். உங்க கம்பெனி பாலிசி படி லாங் டேர்ம் லீவ், லாஸ் ஆப் பே. அடுத்த மாசத்துல இருந்து சம்பளம் வராது, ஆனா ரோல்ல இருக்கலாம்."
"ரீஜாயின் பண்றதா இருந்தா ஹெச்.ஆர். கிட்டயும், டிபார்ட்மென்ட் ல இருந்தும் அப்ரூவல் வாங்கிக்கிட்டு ஜாயின் பண்ணிக்கலாம்ன்னு சொன்னாங்க."
"டாக்டரே நீ எழுந்து நடக்க ரெண்டு மூணு மாசம் ஆகுமின்னு சொல்லிருக்காரு, எனக்கு என்னமோ நீ இருக்குற இருப்ப பார்த்தா சரியாக இன்னும் அஞ்சாறு மாசமாகுமின்னு தோணுது."
"நீ குணமாகி ரீஜாயின் பண்றதுக்கு ரிசைன் பண்ணா வர்ற பி.எஃப். பணம் எதுக்காவது பிரயோஜனப்படும்." என்று அசட்டையாகப் பேசி அவ்விடத்தைவிட்டு கலைந்து சென்றான் சந்தோஷ்.
சந்தோஷின் நம்பிக்கையற்ற வார்த்தைகளால் பேச ஏதுமற்றவளாய், தனது ஏழைமையை நினைத்து விரலிலிருந்த மோதிரத்தை உருட்டியபடி இருந்தாள் துர்கா.
வேம்பரசியிடம் ஆறுதலும், துர்காவிடம் அறிவுரைகளும் சொல்லி எழிலரசி விடைபெற்றுச் சென்ற அந்த மாலை மந்தமாய் நகர்ந்துகொண்டிருந்தது.
~~
எளிதில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகிறோம், கனமழையின் பாதிப்பிலிருந்தும், பெரும்புயலின் இடர்களிலிருந்தும், பேரலையின் பெருஞ் சீற்றத்திலிருந்தும், உருக்குலைத்த நிலநடுக்கத்திலிருந்தும், பிரியமானவர்களை சாவுக்குத் தின்னக் கொடுத்துவிட்ட பெருந்துயரிலிருந்தும் அத்தனை இயல்பாக.
நகரும் இந்த காலத்தின் வேகத்திற்கு நாமும் நகரவேண்டுமே. கால்களை உடைத்துவிட்டு சக்கரங்களைத் தந்திருக்கிறது இந்த காலம். இது கூட பரவாயில்லைதான் அவளுக்கு.
நான்கு சுவர்களுக்குள் யார் தயவின்றியும் நகர முடிகின்றது. தொட்டி மீன்களுக்கு உணவளிக்கவும், ஜன்னல் திண்டிலிருக்கும் க்ரோட்டன்ஸ் செடிகளுக்கு நீர் ஊற்றவும் அவளால் முடிகிறது.
"படுக்கையறையின் வாசல்வழியாகக் கூட சிரமப்பட்டேனும் சென்றுவிடலாம். இந்த கழிவறையின் வாசல்தான் சக்கரங்களோடு முட்டி நிற்கிறது. ஒவ்வொருமுறையும் இயற்கை உபாதைகள் அழைக்கும் போதெல்லாம் அம்மாவைக் கூப்பிடுவது சங்கடமாகவும், சரண்யாவை அழைப்பது சங்கோஜமாகவும் இருக்கிறது."
"இரண்டொருமுறை இருவரும் தூக்கி சிரமப்பட்டு அமரவைத்து, நீட்டிய கால்களை மடக்கவும் முடியாமல் "போதும் போதும்" என்றாகிவிட்டது."
"தடித்த பனிவிழும் நாட்களும், உட்கொண்ட மாத்திரைகளின் புண்ணியமும் ஒருமணிநேரத்திற்கு ஒருமுறை இயற்கை அழைக்கின்றது." என்று மனத்திற்குள்ளாகவே புலம்பிக்கொண்டிருந்தாள் துர்கா.
ஆனால், அம்மா அறிந்திருந்தாள் அவளின் தேவைகளை.
படுக்கையறையின் கட்டிலை வாகாகத் திருப்பி, அறையின் குறுக்காக கனத்த போர்வையை திரைச்சீலையாக படரவிட்டு, அறையின் கதவை அரையளவு திறந்து வைத்துச் சென்றாள்.
"கட்டில் இருக்கிறது. கட்டிலுக்குக் கீழே பெட் ஃபேனும். பணிவிடை செய்ய அம்மாவும்.
மேலும் இந்த உலகத்திலிருந்து மறைந்து கொள்ளவும்,
உலகத்தை மறைத்துக் கொள்ளவும் தடித்த திரைச்சீலை தொங்குகிறது."
இப்போது மூச்சு விடுவதற்கு எளிதாகவும், ஆசுவாசமாகவும் இருப்பதாக உணர்ந்தாள் துர்கா.
திரைச்சீலையை அள்ளி எடுத்து நுகர்ந்தபோது சலவைத்தூளின் கார வாசம் வீசியது.
வழக்கமாக சக்திவேல் போர்த்தித்த தூங்கும் போர்வைதான் அது.
அவரது பெயர்ந்திருந்த வலதுகால் பெருவிரல் நகம் குத்திக் கிழித்து ஓரத்தில் ஒரு விரல் நுழையுமளவிற்கு துளைவிழுந்த பழுப்பு நிற அப்போர்வையை பார்க்கும்போது சிறுவயதில் அவளது அப்பா சொன்ன கதை ஒன்று ஞாபத்திற்கு வந்தது.
அப்போது அவளுக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும். அமர்ந்திருந்த அப்பாவின் பெயர்ந்த நகத்தைச் சுட்டி "ஏம்பா இந்த வெரலு ஒடஞ்சிருக்கு" என்றவளிடம்
"உங்க அம்மாவ பொண்ணு பாத்துட்டு வந்த பத்து நா கழிச்சிதான் சரின்னு தகவல் சொல்லி அனுப்பினாங்க. நம்ம வீடு அப்ப ஓல வீடுல்லா, வரப்போற மஹாராணிக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னிட்டு ஓலைய பிரிச்சி ஓடுக்கு மாத்துனேன். உத்தரத்துல பலகைய ஏத்தும்போது கவுறு அறுந்து கால்ல விழுந்து அப்போ பேந்தது இந்த நெகம்" என்று சிதைந்த நகத்தை சுட்டிக்காட்டினார் சக்திவேல்.
உதட்டில் முந்திய புன்னகையை சோழிப்பற்களுக்குள் மறைத்து செல்லக் கோபம் பூண்டவளாய் "நா மவராணி இவரு மவராசன். நா உப்ப தொட்டு கஞ்சி குடிச்சாக்க, இவரு ஊறுகாயத் தொட்டு கஞ்சி குடிச்சாரு. அதே நெலம தான் இன்னிக்கும்" என்று முன்கையால் சக்திவேலின் தோளை இடித்து சிரித்து நகர்ந்தாள் வேம்பரசி.
அப்பா அம்மாவின் இந்த ஊடலை ரசித்து, வாயைப் பொத்தி குலுங்கிச் சிரித்தாள் அந்த ராஜவம்சத்து இளவரசி.
~~
"சேட்டைக்காரி என்ன பண்ணுறா ? சேட்டைக்காரி எங்க இருக்கா ? சேட்டைக்காரி இங்க இருக்கா " என்று நந்தினியோடு போர்வைக்குப் பின்னாலிருந்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தாள் துர்கா.
"என்ன சொன்னாலும் கேக்குதில்ல, எத்தனை வாட்டி சொல்றது? பீம்மா கிட்ட போவாதன்னு."
"பீம்மா கால்ல புண்ணு இருக்குல்ல, நீ பீம்மாவ டிஸ்ட்டப் பண்ணா டாட்டர் உனக்கும் ஊசி போடும். பீம்மா கிட்ட போவாத." என விளையாடிக்கொண்டிருந்த நந்தினியை இடுப்பில் தூக்கி இருத்திக்கொண்டாள் சரண்யா.
சரண்யாவின் இடுப்பிலிருந்தபடி தனது ஆட்காட்டி விரலால் தோளை குத்தி ஊசி போடுவதுபோல பாவனை செய்து உதட்டைக் குவித்து "ஊஸி..ஊஸி" என்றாள் நந்தினி.
"ஆம்மா, ஊஸ்ஸி.. அங்க போவக்கூடாது சரியா" என்று இடுப்பிலிருந்த நந்தினியை ஹாலில் இறக்கிவிட்டாள்.
துர்கா தனது முகத்திற்கு முன்னாள் இருந்த போர்வையின் துளைவழியாக வெளியே உள்ள உலகத்தைப் பார்த்தாள். சிறு துளையின் அளவு கொண்ட சின்னஞ்சிறு உலகத்தில் நந்தினி மட்டும் விளையாடிக்கொண்டிருந்தாள்.
இப்படி எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி அன்புக்கூறவும், அன்பை பெறுவதற்கும் ஒருவர் மட்டுமே இருக்கும் உலகம் எத்தனை இனிப்பாக இருக்கும் என்றெண்ணிக்கொண்டாள்.
மாலை கடந்து, கரும்புகையென இருள் சூழத்தொடங்கியது அவ்விரவு.
"பீம்மா" என்று மீண்டும் அறைக்குள் நுழைந்த நந்தினியை "போ.. அம்மா திட்டும் போ.." என துர்கா சொல்லியும், சிரித்தபடி ஓடிவந்தவளை
"சனியனே, எத்தன தடவ சொல்லியும் கேக்குதா பாரு" என்று நந்தினியின் அடித்தொடையை கிள்ளி கையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றாள் சரண்யா.
"சின்ன பிள்ளையை போட்டு எதுக்கு இப்படி அடிக்க ?" என்று அழுத குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டாள் வேம்பரசி.
"எத்தன தடவம்மா சொல்றதுக்கு ? சாய்ங்காலத்துல இருந்து ஏழெட்டு தடவ சொல்லியாச்சு, ஒரே பீயும், மூத்திரமுமா நாத்தமடிக்கி, அங்க போவாத அங்க போவாதன்னு. மறுபடியும் மறுபடியும் அங்கயே போவுது."
என்று அழுதுகொண்டிருந்த குழந்தையின் வாயில் இட்டிலியைத் திணித்தாள். அது மேலும் சத்தமாக அழுதது.
~~
"நல்ல பனி பெய்யுது. பிள்ளைய வச்சிட்டு ஏ வெளிய இருக்க? உள்ள வந்து இருக்கலாம்ல்லா?" என்றாள் வேம்பரசி."போம்மா.. உள்ள வந்தாலே எனக்கு தலவலிக்கி, இந்த மூத்திர வாடையில நீ தான் கெடக்கணும்" என்று எரிந்து விழுந்து மடியிலேயே உறங்கிவிட்ட குழந்தையை ஹாலில் ஒரு பாய்விரித்துப் படுக்க வைத்து முற்றத்தை அளந்தவாறு யாரிடமோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாள் சரண்யா.
"இது என்ன சொன்னாலும் கேக்காது, என்ன பேசுனாலும் விதண்டாவாதந்தா பண்ணுவா. நா எதுனா பேசி தூங்கிட்டு இருக்க பிள்ள காதுல விழுந்தா, அவ வருத்தப்படுவா." என்றெண்ணி பதிலேதும் தராமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து, படுக்கையறைக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த துர்காவின் நைட்டியைக் கீழிறக்கிவிட்டு மின்விளக்கை அணைத்து அவளருகில் படுத்துக்கொண்டாள்.
அனுதாபமும், அருவெறுப்பும் நூலளவில் வேறுபடுகிறது.
இயலாமையின் மீதான கருணை அனுதாபத்தையும்,
இயலாதவர்களின் மீதான வெறுப்பு, அருவெறுப்பையும் தருகிறது.
அசதியும் சோம்பலும் அயர்ந்து தூங்கிப்போன துர்கா, வரவேற்பறையில் யாரோ பேசிக்கொண்டிருந்த சப்தத்தைக் கேட்டு கண்விழித்தாள்.
"இப்ப உடம்பு தேவலையா." என்றார் சரண்யாவின் கணவர் மணி.
"ஆம, மாமா. இப்ப பரவால்ல. படுத்தே இருக்கறதால முதுகுவலி மட்டும்." என்றாள்.
"சென்னைக்கு ஒரு வேல விஷயமா வந்தேன். பிள்ளையையும் பாத்து ரொம்ப நாள் ஆச்சில்லா, தாத்தாவும் "பேத்திய தேடுது, கூப்டிட்டு வா" ன்னு ரெண்டு நாளா சொல்லிட்டு இருக்காரு. அதான் உன்னையும் பாத்து, கொழந்தையையும் அழைச்சிட்டு போலான்னு வந்தேன்." என்றார்.
"சரி மாமா" என்று வழக்கமான புன்னகையொன்றைத் தந்தாள்.
"நந்து, பீம்மாவுக்கு ஒரு "முத்தா" குடு" என்று கரங்களில் இருந்த நந்தினியை துர்கா பக்கம் சாய்த்தார்.
அது மேல்வாயில் இரு பற்கள் தெரிய சிரித்து, "முத்தா" என்று துர்காவின் கன்னத்தை ஈரமாக்கியது.
முற்றத்திலிருந்து "ஏங்க" என்று சரண்யாவின் குரல் வந்ததும் இருவரும் கையசைத்து விடைபெற்றுச் சென்றார்கள்.
~~
அடிவயிறு கனத்து வலியெடுத்தது. "அம்மா" என்றழைத்தாள். அம்மா அவர்களை வழியனுப்ப சென்றிருக்கக் கூடும்.
கட்டிலில் சாய்ந்து கைகளை தரையில் துளாவி பெட் ஃபேனின் கைப்பிடியை பிடித்து மேலே தூக்கினாள்.
தகரத்தாலான ஆப்பு வடிவம் கொண்ட பெட் ஃபேன். மேற்புறத்தில் நீள்வட்ட வடிவதில் துளை. எடுத்துச் செல்வதற்கு ஏற்ப ஒருபக்கத்தில் கைப்பிடி.
நைட்டியை இடுப்புவரை மெல்லமாக உயர்த்தி, திறந்து கிடந்த தொடையை போர்வை போர்த்தி மறைத்தாள்.
வலதுபக்க பிருட்டத்தைத் தூக்கி, இருதொடைகளுக்கு மத்தியில் பெட் ஃபேனை வைத்து கண்களை இறுக மூடி சிறுநீர் கழித்தாள். அடிவயிறு லேசானது போல தோன்றியது.
சிறுநீர் கழித்து முடித்ததும் பெட் ஃபேனை கட்டிலுக்கீழே வைத்து, தொடையில் சிதறிய மூத்திரத் துளிகளை நைட்டியை உருட்டித் துடைத்துக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே வானத்தைப் பார்த்தாள். நீலநிறம் நீர்த்து வெண்மேகம் படர்ந்திருந்தது.
நிசப்தம் நிலைகொண்டிருந்த அறையில் கடிகார முட்கள் நகரும் ஓசை மட்டும் "டடக், டடக்" என்று ஒலித்துக் கொண்டிருந்தது.
( வீடு திரும்பல்* )

Comments
Post a Comment