"அரியது கேட்கின்" நாவல் அத்தியாயம் 4"
"அரியது கேட்கின்"
4. புட்டா
படமரத்தில் பாதி நெய்த புடவையைச் சுற்றி வைத்திருந்த துணியை எடுத்து உதறினார். ஒரு வார தூசியும் ஜரிகைப் பிசிறுகளும் சாரளத்தின் வழியாக தறிக்கூடத்திற்குள் விழுந்த காலைச் சூரிய ஒளியில் பொன்னிற துணுக்குகளாய் மின்னி மறைந்தது.
"பூட்டியே வைத்திருந்தாலும் புழங்காத அறைக்குள் இத்தனைதூசி எப்படித்தான் வருகிறதோ?" என்று அலுத்துக் கொண்டு தறிக்கூடத்தை பெருக்கிக் கொண்டிருந்தார் சக்திவேல்.
தறிக்கூடத்தின் பின் பகுதியில் பழமையான இரு குழித்தறிகள் எதிரெதிரே அமைந்திருந்தன. புதிதாய் நிர்மாணிக்கப்பட்டிருந்த மேடைத்தறி, தறிக்கூடத்தின் முன்பகுதியை முக்கால் பங்கு வியாபித்திருந்தது. எதிர் பலகைக்கு எதிரே இருந்த சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கெங்கையம்மனின் படத்தில் சந்தனமாலை சாத்தப்பட்டிருந்தது. சந்தன மாலையின் மூன்று ஆரங்களும் முடியுமிடத்தில் சிகப்பு நிற பட்டுக் குஞ்சம் ஒட்டடை படிந்து சடைபிடித்த குடுமியைப்போல் சிறுத்திருந்தது. மேடைதறியின் சட்டங்கள் பளபளத்துக் கிடந்தன. உட்க்காரும் இடம் மட்டும் சற்றே மெலிந்து சிறு பள்ளமாய் தேய்ந்திருந்தது. குழித்தறியின் தூண்கள் ஈரமற்று சின்னச் சின்ன விரிசல்கள் விட்டிருந்தது. ஜரிகைத் துண்டுகளும், பல வண்ண நூல்களும் சுற்றப்பட்டிருந்த கறுத்த தூண்கள் ஆப்பிரிக்க பழங்குடிப் பெண்களின் வளையல்கள் அடுக்கிய கரங்களைப்போல் இருந்தது.
மிதி பலகையை நகர்த்தி, தறிக்குழியை சுத்தம் செய்தபோது சிதிலமடைந்த புகைப்படம் ஒன்று அவர் கண்ணில் பட்டது. நீர் படர்ந்து கருப்பு வெள்ளை பூக்கள் பூத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
இது அவளுக்கு மிக விருப்பமான புகைப்படம். மணி பர்ஸின் இதய வடிவ துளைக்குப் பின்னால் செருகி வைத்திருப்பாள். எப்போதோ பள்ளி சீருடையில் எடுத்த புகைப்படம். அதில், ரிப்பன் வைத்து முடிந்த ஜடையை வலப்பக்க மார்புக்கு முன்னால் தொங்கவிட்டிருந்தாள். கழுத்திலிருந்து தோள்பட்டை, மார்பு வரை பரவிய வெள்ளை நிற தேமல்களை லாவகமாக தாவணியை இழுத்துவிட்டு மறைத்திருந்தாள். ஆனாலும், உச்சி நெற்றி, கீழுதடு, தாடையின் ஓரங்களில் இருந்த வெண் தேமல்கள் திருஷ்டியாய் வெளியே தெரிந்துகொண்டிருந்தது. உதடைக் குவித்து ஒடுங்கின சிரிப்போடு பால்யத்தின் சாயல் இன்னும் போகாத பதின்மப் பெண்ணாய் அப்புகைப்படத்திலிருந்தாள் சித்ராவதி.
உள்ளங்கைகளில் ஏந்தி உற்றுப் பார்த்தார். நீர் அழித்த தடங்கள் தலையின் மேல் பிறையாக சூட்டப்பட்டு ஆதிப் பெண் தெய்வமென வீற்றிருந்தாள். கைலியால் அழுத்தத் துடைத்து புருவங்களை சுருக்கி கூர்ந்து பார்த்தபோது உருவம் அசைவதாய் தோன்றியது.
மலர் மலர்வதைப் போல இதழை மெல்லத் திறந்தாள். வல இட புருவங்களை அசைத்து நாட்டியப் பெண்போல சிருங்காரப் புன்னகை செய்தாள். ஒரு மின்னற்பொழுதில் அவள் முகம் உறைந்து கருவிழிகள் மேல்நோக்கிச் செருகிக்கொண்டது. நழுவும் பாதரசம் போல அவள் முகத்தசைகளுக்கு உட்புறம் நகர்ந்த குமிழ் ஒன்று கீழ்த்தாடை கன்னமேடு கண்குழி கடந்து நடுநெற்றியில் மையமிட்டு சிறு எரிமலைபோல வெடித்துச் சிதறியது. அச் சிற்றகழியின் தழல் கூம்பிலிருந்து வழிந்த செந்நிற கற்குழம்பு அவள் சதைகளைப் பொசுக்கியது. நிணம் பற்றி எரியும் வாடை அவள் மோன கோலத்தைக் கலைத்தது. அஞ்சனம் கரைந்து கருநிறக் கோடுகளாய் கன்னம் வழிந்தது, ஜடை பின்னலை கலைத்து, உதட்டை சுழித்து, நாசியை உறிஞ்சி அழத்துவங்கினாள். வேகமாக கைகளை முகத்தில் அறைந்து கொண்டாள். விம்மி விம்மி ஆட்காட்டி விரலை நீட்டி ஏதோ சொல்லவந்த போது கைகளிலிருந்த புகைப்படத்தை தவறவிட்டிருந்தார் சக்திவேல். அப்போது அவர் நெற்றி வியர்த்திருந்தது..
கெங்கையம்மனின் முன்னாலிருந்த திருநீற்றுக் கொப்பரையில் புகைப்படத்தை வைத்தார். திருநீற்றிற்குள் பகுதியளவு புதைந்த புகைப்படம் கெங்கையம்மனின் வெட்டுண்ட சிரசைப் போலிருந்தது.
"பொம்ம மாதிரி தொங்கினு இருந்தா. புதுப்பொண்ணாட்டம் பட்டு தாவணி கட்டி, மஞ்ச பூசி, பூ வெச்சி தொங்கினிருந்த போது பாக்கனுமே.. அப்பா.. ஒடம்புல மசுரெல்லாம் நட்டுகிச்சி. கழுத்துல கயிறு உராசுன தடம் பட்ட பட்டையா பதிஞ்சு, கையிலயும் மூஞ்சிலயும் வெள்ள வுழுந்தத பாத்துருக்கோம்?. கழுவி கெடத்திருக்கும் போது, நெஞ்சு தொடையெல்லாம் வெள்ள பாஞ்சு, உரிச்ச கோழி மாதிரி கெடந்தா எப்பா...! என்ன குத்தமோ, ஏது கொறையோ? அப்பா அம்மா யார்ட்டையும் சொல்லிக்கல. உள்ளுக்குள்ள எதோ வீம்பு."
"நீ வயித்த தள்ளிக்கிட்டு அங்க போய் இதெல்லாம் பாத்துட்டு நின்னியாக்கும்.?"
"சின்னப்பொண்ணு வம்சதாரா வாசப்படியில நின்னுட்டு அழுதுட்டே இருந்தா. என்ன ஏதுன்னா சொல்லுதா? அம்மா அம்மான்னு ஒரே அழுகை. அவரு அப்பதான் ஜவுளி எடுத்துட்டு சொசைட்டிக்கு போனாரு. அதான் நா போனேன்."
"அவ விதி அவ்வளவு தான். செரி, நீ அந்தி கருக்கல்ல வெளிய போகாத. அவன் எங்க இருக்கான்."
"உள்ள நெஞ்சிட்டு இருக்காரு".
"சரி, பாத்துட்டு வாறன்".
நடராஜன் தறிக்கூடத்திற்குள் நுழைந்த பின், பெருக்கல் வடிவ மூங்கில் கழியில் பாவு நூலை படர விட்டுக்கொண்டிருந்தாள் வேம்பரசி.
வீட்டின் பின்புறம் தறிக்கூடம் அமைந்திருந்தது. வீட்டின் இடப்புறம் இருந்த மூன்றடி நடைபாதை தறிக்கூடத்தின் பொதுவழியாக இருந்தது. முக்கோண வடிவில் சிமெண்ட் கூரை வேயப்பட்டிருந்த கூடத்தின் சுவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கேற்ப பெரிய சாளரங்கள் பதிக்கப்பட்டிருந்தது. வீட்டின் பின்வாசலுக்கும் தறிக்கூடத்திற்கும் இடைப்பட்ட வெளியில் லோடு கேரியர் பொருத்தப்பட்ட சைக்கிள் சாத்தப்பட்டிருந்தது, சுவற்றோரம் கணப்பு அடுப்பில் வெந்நீர் காய்ந்துகொண்டிருந்தது.
தோளில் கிடந்த துண்டை உதறி, நாற்காலியில் அமர்ந்துகொண்டார் நடராஜன். மிதி பலகையை மிதித்து நாடாவை வீசி, ஆடுபலகையை ஒரே சீராக வீசிக்கொண்டிருந்தார் சக்திவேல். "தடக்.. தடக்" என்ற அந்த ஒலி, புறப்படும் இரயில் இஞ்சினின் சப்தத்தை ஒத்திருந்தது.
"கிருஷ்ணய்யாவ பாத்தியா? நாகவல்லி எதாச்சும் சொன்னாளா?"
"எங்கெங்க? ஒருவாரமாச்சு முகங்கொடுத்து பேசல.. அவளும் தல தூக்காம அழுதிட்டே இருக்கா.. அஞ்சு நா கழிச்சி நேத்து தான் சபரீயும் ஆட்டோ ஓட்ட போனான்., ஓனருக்கு வாடக கொடுக்கனுமில்லா. வீட்டுல சமச்சிதோ என்னவோ. காலையில தூக்குவாளி நெறைய கஞ்சி கொடுத்து வம்சதாரா கையில கொடுத்து அனுப்பினேன். ரெண்டு நா பொறுத்து வான்னு சொல்லி வச்சிருக்கேன்.."
"என்ன காரியமின்னு யாருக்காச்சும் தெரியுமா?"
"என்ன எளவுன்னு யாருகண்டா.? வர இங்க நெஞ்சிட்டு இருந்தவ மதியம் நாண்டுட்டு சாவான்னு யாருக்குத் தெரியும்.."
"செரி விடு, பெரிய டாக்டரு இன்னிக்கு வந்திருக்கறதா ஏழுமல சொன்னான். பிள்ளய கூட்டிட்டு ஒரு எட்டு பாத்திட்டு வந்திடுவோம்."
"இப்பவா.? இன்னும் ஒரு முழம் நெஞ்சா சேலை முடிஞ்சிரும். பார்டர் வேணும்னா வந்து முடிச்சிக்கலாம். ஆர்டர் அவசரம். ஒரு வாரம் வீணா போயிருச்சி. ஒரு மணி நேரம் கழிச்சி கெளம்பலாமா"
"ஒன்னோட அவசரத்துக்கு டாக்டர் இருப்பாரா? வெயிலு ஏறும் முன்ன கெளம்பி போய்டுவம். அர நாள் விடுப்பு சொல்லிட்டு வந்திருக்கேன். சீக்கரம் கிளம்பறதுக்கான வழியப்பாரு."
"ம்ம்...."
"எங்க அம்மா எங்க இருக்கா? ஏ..ந்தாயி எங்க இருக்கா ?"
கூடத்தில் போர்வை விரிப்பில் கிடத்தப் பட்டிருந்த துர்கா கையில் இருந்த க்ளாவர் வடிவ கிலுகிலுப்பையை நெஞ்சில் அறைந்து நடராஜனை பார்த்து "க்க்ருங்ங்.. க்க்ருங்ங்" என்று சிரித்துக் கையசைத்தாள்.
"நெற மாசமா இருந்துட்டு நீ எதுக்கு அலையுற? நானும் அவனும் போயிட்டு வறோம்" என்று வேம்பரசியிடம் கூறிவிட்டு டர்க்கி டவ்வலால் துர்காவை பொதிந்து அமர்வதற்கு ஏதுவாக கோணிப்பை சுற்றப்பட்ட சைக்கிள் கேரியரில் அமர்ந்துகொண்டார் நடராஜன்.
சைக்கிள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. காலை சூரியவெப்பம் ஒரு கன்னத்தில் இளஞ்சூடு தந்தது. அது கெங்கையம்மன் கோவில் திருவிழாக்காலமானதால் வெளியூரிலிருந்தும், வேலூரிலிருந்தும் செல்லும் பேருந்துகள் நிரம்பி வழிந்து சென்றது. சில பக்தர்கள் பாதயாத்திரையாக மஞ்சள் வர்ண ஆடையுடுத்தி சாலையில் இருபக்கங்களிலும் சென்றார்கள்.
பாலத்தின் கீழே நீல நிற பட்டுப்புடவை நெய்வதை போல வளவளப்பாய் சலனமற்று பயணித்தது பாலாறு. சூரிய ஒளியின் தகதகக்கும் ஒளிப்புள்ளிகள் பட்டுப்புடவையின் வெள்ளி "புட்டா"க்களாய் மினுமினுத்தது. உச்சந்தலையில் குடுமியை இறுக சுற்றி, இடுப்பளவு ஆற்றில் குளித்த பெண்களின் ஈரத்தோளும் மார்பும் ஆற்றின் வனப்பை மிகைப்படுத்தியது. கிழக்கே இருந்து வீசிய கீழ் கெண்டைக்காற்று தலைப்பாகையை நழுவச் செய்தது. வெறும் காற்றை மட்டும் ஊதி விசிலடிப்பது போலவோ, மூச்சிவிடுவதைப்போலவோ தனக்குமட்டுமே கேட்குமாறு எதோ பாடலைப் பாடி சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தார் சக்திவேல். முகத்தின் மேல் விழும் வெயிலை தவிர்ப்பதற்காக எதிர்புறம் தலையைத் திருப்பிக்கொண்டார் நடராஜன். பாலாற்றுப் பாலத்தின் திண்டுச் சுவர்கள் கோடு இழுத்ததை போல் கடந்து சென்றது.
மூன்று வருடங்களுக்கு முன் இதுபோலொரு சிரசுத் திருவிழாவில் தான் கிருஷ்ணய்யா குடும்பத்தினரை நடராஜனுக்கு அறிமுகப்படுத்தினான் கோபால். கோபால் நடராஜனின் தூரத்து உறவுமுறை. குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சமீபத்தில் பூக்கடை நடத்தி வருகிறான்.
சித்தூரை அடுத்த சிறுகிராமத்தில் நெசவுத்தொழில் செய்துவந்த கிருஷ்ணைய்யாவை வறுமையும் பஞ்சமும் துரத்தியடிக்கவே, கோபாலிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார். நெசவுக்கார குடும்பம் என்பதால் கோபால் நடராஜனிடம் சிபாரிசுக்கு அழைத்து வந்திருக்கிறான். கசகசவென நெருக்கியடித்த அந்த திருவிழாக் கூட்டத்தில் அடுக்கிவைக்கப்பட்ட தட்டாஞ்சில்லுகள் போல் கிருஷ்ணய்யா, மனைவி மக்களோடு ஒட்டி நின்றார்.
சாம்பல் நிற சட்டையும், முழங்காலுக்கு இரண்டங்குல உயரத்தில் முடிந்துவிட்ட வேட்டியும், தோளில் கிடந்த ஈரிழை துண்டும், பார்த்தாலே பஞ்சம் பிழைக்கவந்தவர் போலிருந்தார் கிருஷ்ணைய்யா.
வறுமை சுருட்டியது போக எஞ்சியதை பொதியாகக் கட்டி, குடத்தை இடுப்பில் சுமப்பதைப் போல நின்றுகொண்டிருந்தாள் நாகவள்ளி.
நாகவள்ளியின் தோளைப்பற்றி அவள் முதுகிற்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தாள் சித்திராவதி. அவளின் கருத்த சருமத்தில் உலக வரைபடமென பரவிய வெண்ணிற தேமல்கள் முதல்முறை பார்ப்பவர்களை கலவரப் படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது. உலர்ந்த ஒடிசிலான உடம்பில் நாலுமுழ தாவணி இரண்டு சுற்று சுற்றும் அளவு மெலிந்திருந்தது.
சித்திராவதியின் கைகளை பிடித்துக்கொண்டு நின்றது வம்சதாரா. அவளணிந்திருந்த கறுப்புநிற பெட்டிகோட் சாயமிழந்து சாம்பல் வண்ணம் பெற்றிருந்தது. அடர் நிறமும், கருநிற கூந்தலும் அகலவிரித்த கண்களில் குறுகுறுப்புமாய் இருந்தாள்.
இந்த நால்வருக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தம் இல்லாததைப்போல் இரண்டடி தள்ளி நின்றான் சபரீஷ். அவனைப்பார்த்தாலும் இந்த நால்வருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததுபோல் தான் தோன்றும். குடும்பத்தை தின்ற வறுமை அவனைத் தீண்டவில்லைபோலும், அல்லது மற்ற நால்வரின் உணவையும் இவனொருவனே தின்று திமுதிமுவென வளர்ந்துவிட்டானா என்றும் இவர்களை பார்ப்பவளுக்கு சந்தேகமும் தோன்றலாம். இத்தனைக்கும் அவன் சோம்பேறி அல்ல, இன்ன வேலை என்று பாராமல் எல்லாவற்றையும் செய்வான், சைக்கிள் மெக்கானிக், வயல்வேலை, சித்தாள் வேலை தகப்பனோடு சேர்ந்து தறியடிக்கவும் கூட செய்வான். இருந்தாலும் அவ்வருடத்தின் வறட்சி மொத்த குடும்பத்தையும் அலைக்கழித்திருக்கிறது, வாழ்விடமிழந்து வாழ்க்கையைத்தேடி பயணப்பட வைத்திருக்கிறது.
சுமந்துவந்த மூட்டை முடிச்சுகள் இடப்பெயர்வின் துயரச்சுமை. சபரீஷ் தன பங்கிற்கு கையில் ஒரு டிரங்கு பெட்டியை வைத்திருந்தான். அவனுக்குப் பின் அடுத்தடுத்து காத்திருக்கும் "குமரி" களின் சுமை டிரங்குப் பெட்டியைவிட அதிக சுமையாய் இருந்தது.
சக்திவேலுக்கு திருமணமான சில மாதங்களுக்கு அண்ணன் தம்பி இருவரும் காட்பாடியில் பூர்விக வீட்டில் தான் இருந்துவந்தனர். இரண்டு பெண்கள் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தும்போது ஏற்படக்கூடிய மனஸ்தாபங்களை சொல்லவா வேண்டும். அதற்கு தோதாக குடியாத்தம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளர் பணியும் கிடைத்தது. அதை நினைத்து "எல்லாம் மூத்தவ ஆனந்தி பொறந்த நேரம்" என்று நடராஜனின் மனைவி வள்ளியம்மை பெருமை பட்டுக் கொள்வாள். ஆனந்தியைப் போல முரளியும் யோகக்காரன் தான். அவன் பிறந்த பிற்பாடுதான் சொந்தமாக ஒரு வீடு வாங்கமுடிந்திருக்கிறது
ஒரே வீட்டிற்குள் இருக்கும்போதுதான் முக்கலும் முறைப்பும். இப்போது அந்த இரு புகுந்தவீட்டு சகோதரிகளுக்குள் அத்தனை அன்பு. திருவிழா காண சக்திவேலும், வேம்பரசியும் நடராஜனின் இல்லத்திற்கு வந்திருந்தார்கள். அப்போது அங்கிருந்த சக்திவேலை அழைத்து அவரிடம் கிருஷ்ணைய்யாவை அறிமுகம் செய்துவைத்தார் நடராஜன். "திருவிழா முடிஞ்ச மறுநாள் வீட்டுக்கு வந்துருங்க" என்று காட்பாடி வீட்டு விலாசத்தையும், கோபாலின் முகத்துக்காக பதினைந்து ரூபாயையும் கிருஷ்ணைய்யாவின் கையில் திணித்தார் சக்திவேல்.
குடியாத்தம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஊரில் ஒவ்வொருவர் வீட்டிலும் திருவிழா காண வெளியூரிலிருந்து உறவினர்கள் வந்திருந்தார்கள். விழா கமிட்டியினர் காலி மனைகளில் பக்தர்கள் தங்குவதற்காக தற்காலிக குடிசைகளை அமைத்திருந்தார்கள். தெருக்களின் இரு ஓரங்களிலும் புதிது புதிதாக கடைகள் முளைத்திருந்தது. பூஜைப் பொருட்களும், விளையாட்டு சாமான்களும், பலவித இனிப்புப் பண்டங்களும் குப்பலாய் குவித்து விற்பனை கனஜோராக நடந்துகொண்டிருந்தது. விளையாட்டு சிறுவர்களும், தாவணிப் பெண்டுகளும், வீதிகளை வேடிக்கை பார்த்தபடி கடந்து சென்றார்கள். இளைஞிகளை சுற்றி கட்டிளங் காளையர்கள் வட்டமிட்டு வந்தார்கள். அலங்கார விளக்கொளியில் காதணிகளும் கைவளைகளும் பல வண்ணங்களில் மின்னியது. கண்கவர் வானவேடிக்கைகள் ஆயிரமாயிரம் நட்சத்திரங்களை தலைக்குமேல் பறக்கச் செய்தது. சன்னதக்காரர்கள் நெடிய வல்லையங்களை கைய்யில் பிடித்து அருள்வந்து ஆடி, பக்தர்களுக்குக் கட்டியம் கூறிக்கொண்டிருந்தனர். நாகவள்ளியும், சித்திராவதியும் ஒரு திண்ணையில் ஒண்டியிருந்தார்கள், தொன்னையில் வாங்கிவந்த கோவில் பிராசதத்தை சூடு பொருக்க ஊதித் தின்றுகொண்டிருந்தாள் வம்சதாரா.
பிறந்த வீட்டிலிருந்து அழுது கொண்டு வந்த அம்மன் மறுநாள் சிரித்த அலங்கார முகத்துடன் மறுவீடு செல்கிறாள். தெய்வமானாலுமென்ன ? பெண் தானே அவள். பெண்மையின் அத்தனை அம்சங்களையும் தாங்கிய "தெய்வப் பெண்". வஜ்ரக் குடைகளின் நிழலில், செண்டை சீர் வாத்திய மேளங்களும், நாயனங்களும் முழங்க, வியர்வை ஈரம் பளபளக்கும் ஆயிரமாயிரம் தோள்கள் சுமக்க "கெங்கையம்மன்" அன்பின் திருவுருவாய், சாந்த சொரூபியாய், உற்சாக பவனி வருகிறாள். தனது மக்களுக்கு அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறாள்.
"பூட்டியே வைத்திருந்தாலும் புழங்காத அறைக்குள் இத்தனைதூசி எப்படித்தான் வருகிறதோ?" என்று அலுத்துக் கொண்டு தறிக்கூடத்தை பெருக்கிக் கொண்டிருந்தார் சக்திவேல்.
தறிக்கூடத்தின் பின் பகுதியில் பழமையான இரு குழித்தறிகள் எதிரெதிரே அமைந்திருந்தன. புதிதாய் நிர்மாணிக்கப்பட்டிருந்த மேடைத்தறி, தறிக்கூடத்தின் முன்பகுதியை முக்கால் பங்கு வியாபித்திருந்தது. எதிர் பலகைக்கு எதிரே இருந்த சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கெங்கையம்மனின் படத்தில் சந்தனமாலை சாத்தப்பட்டிருந்தது. சந்தன மாலையின் மூன்று ஆரங்களும் முடியுமிடத்தில் சிகப்பு நிற பட்டுக் குஞ்சம் ஒட்டடை படிந்து சடைபிடித்த குடுமியைப்போல் சிறுத்திருந்தது. மேடைதறியின் சட்டங்கள் பளபளத்துக் கிடந்தன. உட்க்காரும் இடம் மட்டும் சற்றே மெலிந்து சிறு பள்ளமாய் தேய்ந்திருந்தது. குழித்தறியின் தூண்கள் ஈரமற்று சின்னச் சின்ன விரிசல்கள் விட்டிருந்தது. ஜரிகைத் துண்டுகளும், பல வண்ண நூல்களும் சுற்றப்பட்டிருந்த கறுத்த தூண்கள் ஆப்பிரிக்க பழங்குடிப் பெண்களின் வளையல்கள் அடுக்கிய கரங்களைப்போல் இருந்தது.
மிதி பலகையை நகர்த்தி, தறிக்குழியை சுத்தம் செய்தபோது சிதிலமடைந்த புகைப்படம் ஒன்று அவர் கண்ணில் பட்டது. நீர் படர்ந்து கருப்பு வெள்ளை பூக்கள் பூத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
இது அவளுக்கு மிக விருப்பமான புகைப்படம். மணி பர்ஸின் இதய வடிவ துளைக்குப் பின்னால் செருகி வைத்திருப்பாள். எப்போதோ பள்ளி சீருடையில் எடுத்த புகைப்படம். அதில், ரிப்பன் வைத்து முடிந்த ஜடையை வலப்பக்க மார்புக்கு முன்னால் தொங்கவிட்டிருந்தாள். கழுத்திலிருந்து தோள்பட்டை, மார்பு வரை பரவிய வெள்ளை நிற தேமல்களை லாவகமாக தாவணியை இழுத்துவிட்டு மறைத்திருந்தாள். ஆனாலும், உச்சி நெற்றி, கீழுதடு, தாடையின் ஓரங்களில் இருந்த வெண் தேமல்கள் திருஷ்டியாய் வெளியே தெரிந்துகொண்டிருந்தது. உதடைக் குவித்து ஒடுங்கின சிரிப்போடு பால்யத்தின் சாயல் இன்னும் போகாத பதின்மப் பெண்ணாய் அப்புகைப்படத்திலிருந்தாள் சித்ராவதி.
உள்ளங்கைகளில் ஏந்தி உற்றுப் பார்த்தார். நீர் அழித்த தடங்கள் தலையின் மேல் பிறையாக சூட்டப்பட்டு ஆதிப் பெண் தெய்வமென வீற்றிருந்தாள். கைலியால் அழுத்தத் துடைத்து புருவங்களை சுருக்கி கூர்ந்து பார்த்தபோது உருவம் அசைவதாய் தோன்றியது.
மலர் மலர்வதைப் போல இதழை மெல்லத் திறந்தாள். வல இட புருவங்களை அசைத்து நாட்டியப் பெண்போல சிருங்காரப் புன்னகை செய்தாள். ஒரு மின்னற்பொழுதில் அவள் முகம் உறைந்து கருவிழிகள் மேல்நோக்கிச் செருகிக்கொண்டது. நழுவும் பாதரசம் போல அவள் முகத்தசைகளுக்கு உட்புறம் நகர்ந்த குமிழ் ஒன்று கீழ்த்தாடை கன்னமேடு கண்குழி கடந்து நடுநெற்றியில் மையமிட்டு சிறு எரிமலைபோல வெடித்துச் சிதறியது. அச் சிற்றகழியின் தழல் கூம்பிலிருந்து வழிந்த செந்நிற கற்குழம்பு அவள் சதைகளைப் பொசுக்கியது. நிணம் பற்றி எரியும் வாடை அவள் மோன கோலத்தைக் கலைத்தது. அஞ்சனம் கரைந்து கருநிறக் கோடுகளாய் கன்னம் வழிந்தது, ஜடை பின்னலை கலைத்து, உதட்டை சுழித்து, நாசியை உறிஞ்சி அழத்துவங்கினாள். வேகமாக கைகளை முகத்தில் அறைந்து கொண்டாள். விம்மி விம்மி ஆட்காட்டி விரலை நீட்டி ஏதோ சொல்லவந்த போது கைகளிலிருந்த புகைப்படத்தை தவறவிட்டிருந்தார் சக்திவேல். அப்போது அவர் நெற்றி வியர்த்திருந்தது..
கெங்கையம்மனின் முன்னாலிருந்த திருநீற்றுக் கொப்பரையில் புகைப்படத்தை வைத்தார். திருநீற்றிற்குள் பகுதியளவு புதைந்த புகைப்படம் கெங்கையம்மனின் வெட்டுண்ட சிரசைப் போலிருந்தது.
~~
"நீ வயித்த தள்ளிக்கிட்டு அங்க போய் இதெல்லாம் பாத்துட்டு நின்னியாக்கும்.?"
"சின்னப்பொண்ணு வம்சதாரா வாசப்படியில நின்னுட்டு அழுதுட்டே இருந்தா. என்ன ஏதுன்னா சொல்லுதா? அம்மா அம்மான்னு ஒரே அழுகை. அவரு அப்பதான் ஜவுளி எடுத்துட்டு சொசைட்டிக்கு போனாரு. அதான் நா போனேன்."
"அவ விதி அவ்வளவு தான். செரி, நீ அந்தி கருக்கல்ல வெளிய போகாத. அவன் எங்க இருக்கான்."
"உள்ள நெஞ்சிட்டு இருக்காரு".
"சரி, பாத்துட்டு வாறன்".
நடராஜன் தறிக்கூடத்திற்குள் நுழைந்த பின், பெருக்கல் வடிவ மூங்கில் கழியில் பாவு நூலை படர விட்டுக்கொண்டிருந்தாள் வேம்பரசி.
~~
தோளில் கிடந்த துண்டை உதறி, நாற்காலியில் அமர்ந்துகொண்டார் நடராஜன். மிதி பலகையை மிதித்து நாடாவை வீசி, ஆடுபலகையை ஒரே சீராக வீசிக்கொண்டிருந்தார் சக்திவேல். "தடக்.. தடக்" என்ற அந்த ஒலி, புறப்படும் இரயில் இஞ்சினின் சப்தத்தை ஒத்திருந்தது.
"கிருஷ்ணய்யாவ பாத்தியா? நாகவல்லி எதாச்சும் சொன்னாளா?"
"எங்கெங்க? ஒருவாரமாச்சு முகங்கொடுத்து பேசல.. அவளும் தல தூக்காம அழுதிட்டே இருக்கா.. அஞ்சு நா கழிச்சி நேத்து தான் சபரீயும் ஆட்டோ ஓட்ட போனான்., ஓனருக்கு வாடக கொடுக்கனுமில்லா. வீட்டுல சமச்சிதோ என்னவோ. காலையில தூக்குவாளி நெறைய கஞ்சி கொடுத்து வம்சதாரா கையில கொடுத்து அனுப்பினேன். ரெண்டு நா பொறுத்து வான்னு சொல்லி வச்சிருக்கேன்.."
"என்ன காரியமின்னு யாருக்காச்சும் தெரியுமா?"
"என்ன எளவுன்னு யாருகண்டா.? வர இங்க நெஞ்சிட்டு இருந்தவ மதியம் நாண்டுட்டு சாவான்னு யாருக்குத் தெரியும்.."
"செரி விடு, பெரிய டாக்டரு இன்னிக்கு வந்திருக்கறதா ஏழுமல சொன்னான். பிள்ளய கூட்டிட்டு ஒரு எட்டு பாத்திட்டு வந்திடுவோம்."
"இப்பவா.? இன்னும் ஒரு முழம் நெஞ்சா சேலை முடிஞ்சிரும். பார்டர் வேணும்னா வந்து முடிச்சிக்கலாம். ஆர்டர் அவசரம். ஒரு வாரம் வீணா போயிருச்சி. ஒரு மணி நேரம் கழிச்சி கெளம்பலாமா"
"ஒன்னோட அவசரத்துக்கு டாக்டர் இருப்பாரா? வெயிலு ஏறும் முன்ன கெளம்பி போய்டுவம். அர நாள் விடுப்பு சொல்லிட்டு வந்திருக்கேன். சீக்கரம் கிளம்பறதுக்கான வழியப்பாரு."
"ம்ம்...."
"எங்க அம்மா எங்க இருக்கா? ஏ..ந்தாயி எங்க இருக்கா ?"
கூடத்தில் போர்வை விரிப்பில் கிடத்தப் பட்டிருந்த துர்கா கையில் இருந்த க்ளாவர் வடிவ கிலுகிலுப்பையை நெஞ்சில் அறைந்து நடராஜனை பார்த்து "க்க்ருங்ங்.. க்க்ருங்ங்" என்று சிரித்துக் கையசைத்தாள்.
~~
சைக்கிள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. காலை சூரியவெப்பம் ஒரு கன்னத்தில் இளஞ்சூடு தந்தது. அது கெங்கையம்மன் கோவில் திருவிழாக்காலமானதால் வெளியூரிலிருந்தும், வேலூரிலிருந்தும் செல்லும் பேருந்துகள் நிரம்பி வழிந்து சென்றது. சில பக்தர்கள் பாதயாத்திரையாக மஞ்சள் வர்ண ஆடையுடுத்தி சாலையில் இருபக்கங்களிலும் சென்றார்கள்.
பாலத்தின் கீழே நீல நிற பட்டுப்புடவை நெய்வதை போல வளவளப்பாய் சலனமற்று பயணித்தது பாலாறு. சூரிய ஒளியின் தகதகக்கும் ஒளிப்புள்ளிகள் பட்டுப்புடவையின் வெள்ளி "புட்டா"க்களாய் மினுமினுத்தது. உச்சந்தலையில் குடுமியை இறுக சுற்றி, இடுப்பளவு ஆற்றில் குளித்த பெண்களின் ஈரத்தோளும் மார்பும் ஆற்றின் வனப்பை மிகைப்படுத்தியது. கிழக்கே இருந்து வீசிய கீழ் கெண்டைக்காற்று தலைப்பாகையை நழுவச் செய்தது. வெறும் காற்றை மட்டும் ஊதி விசிலடிப்பது போலவோ, மூச்சிவிடுவதைப்போலவோ தனக்குமட்டுமே கேட்குமாறு எதோ பாடலைப் பாடி சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தார் சக்திவேல். முகத்தின் மேல் விழும் வெயிலை தவிர்ப்பதற்காக எதிர்புறம் தலையைத் திருப்பிக்கொண்டார் நடராஜன். பாலாற்றுப் பாலத்தின் திண்டுச் சுவர்கள் கோடு இழுத்ததை போல் கடந்து சென்றது.
~~
சித்தூரை அடுத்த சிறுகிராமத்தில் நெசவுத்தொழில் செய்துவந்த கிருஷ்ணைய்யாவை வறுமையும் பஞ்சமும் துரத்தியடிக்கவே, கோபாலிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார். நெசவுக்கார குடும்பம் என்பதால் கோபால் நடராஜனிடம் சிபாரிசுக்கு அழைத்து வந்திருக்கிறான். கசகசவென நெருக்கியடித்த அந்த திருவிழாக் கூட்டத்தில் அடுக்கிவைக்கப்பட்ட தட்டாஞ்சில்லுகள் போல் கிருஷ்ணய்யா, மனைவி மக்களோடு ஒட்டி நின்றார்.
சாம்பல் நிற சட்டையும், முழங்காலுக்கு இரண்டங்குல உயரத்தில் முடிந்துவிட்ட வேட்டியும், தோளில் கிடந்த ஈரிழை துண்டும், பார்த்தாலே பஞ்சம் பிழைக்கவந்தவர் போலிருந்தார் கிருஷ்ணைய்யா.
வறுமை சுருட்டியது போக எஞ்சியதை பொதியாகக் கட்டி, குடத்தை இடுப்பில் சுமப்பதைப் போல நின்றுகொண்டிருந்தாள் நாகவள்ளி.
நாகவள்ளியின் தோளைப்பற்றி அவள் முதுகிற்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தாள் சித்திராவதி. அவளின் கருத்த சருமத்தில் உலக வரைபடமென பரவிய வெண்ணிற தேமல்கள் முதல்முறை பார்ப்பவர்களை கலவரப் படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது. உலர்ந்த ஒடிசிலான உடம்பில் நாலுமுழ தாவணி இரண்டு சுற்று சுற்றும் அளவு மெலிந்திருந்தது.
சித்திராவதியின் கைகளை பிடித்துக்கொண்டு நின்றது வம்சதாரா. அவளணிந்திருந்த கறுப்புநிற பெட்டிகோட் சாயமிழந்து சாம்பல் வண்ணம் பெற்றிருந்தது. அடர் நிறமும், கருநிற கூந்தலும் அகலவிரித்த கண்களில் குறுகுறுப்புமாய் இருந்தாள்.
இந்த நால்வருக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தம் இல்லாததைப்போல் இரண்டடி தள்ளி நின்றான் சபரீஷ். அவனைப்பார்த்தாலும் இந்த நால்வருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததுபோல் தான் தோன்றும். குடும்பத்தை தின்ற வறுமை அவனைத் தீண்டவில்லைபோலும், அல்லது மற்ற நால்வரின் உணவையும் இவனொருவனே தின்று திமுதிமுவென வளர்ந்துவிட்டானா என்றும் இவர்களை பார்ப்பவளுக்கு சந்தேகமும் தோன்றலாம். இத்தனைக்கும் அவன் சோம்பேறி அல்ல, இன்ன வேலை என்று பாராமல் எல்லாவற்றையும் செய்வான், சைக்கிள் மெக்கானிக், வயல்வேலை, சித்தாள் வேலை தகப்பனோடு சேர்ந்து தறியடிக்கவும் கூட செய்வான். இருந்தாலும் அவ்வருடத்தின் வறட்சி மொத்த குடும்பத்தையும் அலைக்கழித்திருக்கிறது, வாழ்விடமிழந்து வாழ்க்கையைத்தேடி பயணப்பட வைத்திருக்கிறது.
சுமந்துவந்த மூட்டை முடிச்சுகள் இடப்பெயர்வின் துயரச்சுமை. சபரீஷ் தன பங்கிற்கு கையில் ஒரு டிரங்கு பெட்டியை வைத்திருந்தான். அவனுக்குப் பின் அடுத்தடுத்து காத்திருக்கும் "குமரி" களின் சுமை டிரங்குப் பெட்டியைவிட அதிக சுமையாய் இருந்தது.
சக்திவேலுக்கு திருமணமான சில மாதங்களுக்கு அண்ணன் தம்பி இருவரும் காட்பாடியில் பூர்விக வீட்டில் தான் இருந்துவந்தனர். இரண்டு பெண்கள் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தும்போது ஏற்படக்கூடிய மனஸ்தாபங்களை சொல்லவா வேண்டும். அதற்கு தோதாக குடியாத்தம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளர் பணியும் கிடைத்தது. அதை நினைத்து "எல்லாம் மூத்தவ ஆனந்தி பொறந்த நேரம்" என்று நடராஜனின் மனைவி வள்ளியம்மை பெருமை பட்டுக் கொள்வாள். ஆனந்தியைப் போல முரளியும் யோகக்காரன் தான். அவன் பிறந்த பிற்பாடுதான் சொந்தமாக ஒரு வீடு வாங்கமுடிந்திருக்கிறது
ஒரே வீட்டிற்குள் இருக்கும்போதுதான் முக்கலும் முறைப்பும். இப்போது அந்த இரு புகுந்தவீட்டு சகோதரிகளுக்குள் அத்தனை அன்பு. திருவிழா காண சக்திவேலும், வேம்பரசியும் நடராஜனின் இல்லத்திற்கு வந்திருந்தார்கள். அப்போது அங்கிருந்த சக்திவேலை அழைத்து அவரிடம் கிருஷ்ணைய்யாவை அறிமுகம் செய்துவைத்தார் நடராஜன். "திருவிழா முடிஞ்ச மறுநாள் வீட்டுக்கு வந்துருங்க" என்று காட்பாடி வீட்டு விலாசத்தையும், கோபாலின் முகத்துக்காக பதினைந்து ரூபாயையும் கிருஷ்ணைய்யாவின் கையில் திணித்தார் சக்திவேல்.
~~
குடியாத்தம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஊரில் ஒவ்வொருவர் வீட்டிலும் திருவிழா காண வெளியூரிலிருந்து உறவினர்கள் வந்திருந்தார்கள். விழா கமிட்டியினர் காலி மனைகளில் பக்தர்கள் தங்குவதற்காக தற்காலிக குடிசைகளை அமைத்திருந்தார்கள். தெருக்களின் இரு ஓரங்களிலும் புதிது புதிதாக கடைகள் முளைத்திருந்தது. பூஜைப் பொருட்களும், விளையாட்டு சாமான்களும், பலவித இனிப்புப் பண்டங்களும் குப்பலாய் குவித்து விற்பனை கனஜோராக நடந்துகொண்டிருந்தது. விளையாட்டு சிறுவர்களும், தாவணிப் பெண்டுகளும், வீதிகளை வேடிக்கை பார்த்தபடி கடந்து சென்றார்கள். இளைஞிகளை சுற்றி கட்டிளங் காளையர்கள் வட்டமிட்டு வந்தார்கள். அலங்கார விளக்கொளியில் காதணிகளும் கைவளைகளும் பல வண்ணங்களில் மின்னியது. கண்கவர் வானவேடிக்கைகள் ஆயிரமாயிரம் நட்சத்திரங்களை தலைக்குமேல் பறக்கச் செய்தது. சன்னதக்காரர்கள் நெடிய வல்லையங்களை கைய்யில் பிடித்து அருள்வந்து ஆடி, பக்தர்களுக்குக் கட்டியம் கூறிக்கொண்டிருந்தனர். நாகவள்ளியும், சித்திராவதியும் ஒரு திண்ணையில் ஒண்டியிருந்தார்கள், தொன்னையில் வாங்கிவந்த கோவில் பிராசதத்தை சூடு பொருக்க ஊதித் தின்றுகொண்டிருந்தாள் வம்சதாரா.
பிறந்த வீட்டிலிருந்து அழுது கொண்டு வந்த அம்மன் மறுநாள் சிரித்த அலங்கார முகத்துடன் மறுவீடு செல்கிறாள். தெய்வமானாலுமென்ன ? பெண் தானே அவள். பெண்மையின் அத்தனை அம்சங்களையும் தாங்கிய "தெய்வப் பெண்". வஜ்ரக் குடைகளின் நிழலில், செண்டை சீர் வாத்திய மேளங்களும், நாயனங்களும் முழங்க, வியர்வை ஈரம் பளபளக்கும் ஆயிரமாயிரம் தோள்கள் சுமக்க "கெங்கையம்மன்" அன்பின் திருவுருவாய், சாந்த சொரூபியாய், உற்சாக பவனி வருகிறாள். தனது மக்களுக்கு அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறாள்.
~~
நீண்ட பாவாடை தரையில் உரசியபடி நடந்துவந்தாள் வம்சதாரா. ஈரமும் அழுக்கும் பாவாடையின் கீழ்பகுதியில் திட்டுத் திட்டாக படிந்திருந்தது.
"தரைய பெருக்கிட்டுதான் நடப்பியோ? பாவாடைய இடுப்புக்கு மேல ஏந்தி கட்டு" என்று வேம்பரசி சொன்னவுடன், சட்டையின் நுனியை வாயில் கவ்வி நாடாவின் முடிச்சுகளை இறுகப் பற்றி அசைத்து அசைத்து வயிறுவரை ஏற்றிக்கொண்டாள்.
"அட பொண்ணே, கட்டுன்னா இப்படித்தான் கட்டுறதா ? வளந்துட்டு வர்ர பொம்பளையாக்கும். ஒதுக்கம் பதுக்கமா நடந்துக்கணும்" என்று வேம்பரசி கண்டித்ததும், அதற்கு என்ன எதிர்வினையாற்றுவது என்று தெரியாமல் நெற்றிச் சுருக்கம்விழ புருவம் விரித்து, கைகொண்டு வயிற்றை தட்டினாள். அது "தொம் தொம்" என்று ஒலி எழுப்பியது.
"என்ன?"
"பசிக்குது"
"இஸ்கூல்ல மதியம் சாப்டியா?"
"உம்ம்.."
"அப்புறம் என்ன ?"
"பசிக்குது"
"ஆரம்பிச்சிட்டா.. ஓட்ட டேப்ரிக்காடர் மாதிரி இனி நிறுத்தமாட்டா"
"உள்ள உங்க அப்பா நெஞ்சிட்டு இருக்காரு, பாத்தா திட்டுவாரு., அடுப்பங்கரையில் சோத்த எடுத்து வைக்கறேன் அந்தாண்ட வா." என்று வேம்பரசி வீட்டிற்குள் நகர்ந்தாள்.
சக்திவேல் குடும்பத்தாருடன் வெகு விரைவில் இணக்கமாகிவிட்டாள் வம்சதாரா. வேம்பரசியோடு கோவிலுக்குப் போகவும், மாளிகைப் பொருட்கள் வாங்கிவரவும் ஒத்தாசைக்கு ஒரு ஆள்வேண்டுமே? கடைத்தெருவுக்கு கூட சென்றால் தலையில் சூட மல்லிப்பூவும், கொறிப்பதற்கு தின்பண்டங்கள் ஏதாவது கிடைக்கும்.
திருமணமாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு வேம்பரசி முழுகாமல் இருந்ததை கொண்டாட "நெய் மைசூர் பா" வாங்கித்தந்தாரே சக்திவேல்.
வம்சதாராவின் சின்ன உள்ளங்கைகளுக்குள் எத்தனை நாட்களுக்கு அந்த நெய்வாசம் இருந்தது தெரியுமா? பள்ளித்தோழிகளிடமும், தன் அக்கா சித்திராவதியிடமும் எத்தனை முறை அந்த வாசம் நுகர நீட்டி இருப்பாள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தான் பிடிக்காது. "ச்சீ போ.. கழுத" என்ற ஏசல் தான் மிஞ்சும். "பாப்பா பொறந்தா என்ன பேர் வைக்கலாம்?" என்று சக்திவேல் கேட்டால் கூட "மைசூர் பா" என்று சிரிக்காமல் சொல்வாள். அவள் சொல்வதைக் கேட்டு குலுங்கிச் சிரிப்பாள் வேம்பரசி..
வம்சதாராவுக்கு நேரெதிர் சித்திராவதி. அவள் வாயாடி என்றால் இவளோ ஊமைப்பூச்சி. வாழ்விடம் மாற்றிவந்த பிறகு அவளுக்கு தோழிகள் யாருமிங்கு வாய்க்கவில்லை. கூச்ச சுபாவமோ, தன்னிரக்கமோ. புதிதாக யாருடனாவது பேச நேர்ந்தால் அவர்களின் பார்வை அவள் உடம்பின் வெண்தேமல்கள் மீது குவியும்போது ஈ மொய்ப்பது போன்று உடல் கூசி குறுகிப் போய்விடுவாள். ஒரு சில முகங்களைக் கொண்டு தனது குட்டியூண்டு உலகத்தை வடிவமைத்திருக்கிறாள். வேலை வேலை விட்டால் வீடு. வீட்டில் அம்மாவுடன் சமையலுக்கு சிறு உதவிகள் செய்வாள். வேலைக்கு வந்தால் சக்திவேலுவுக்கு ஏதாவது உதவிசெய்வாள். பாவடியில் "கோறா"வுக்கு கஞ்சி தோய்க்க, ஈர பாவை உலர்த்த, இராட்டையில் பாவு சுற்றி நாடாவில் ஏற்ற ஒரு பணியாளரின் உதவி எப்போதும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். அதுவும் விழுதுகளின் மெல்லிடுக்கு வழியாக படமரத்தில் பாவு நுழைக்க அவளின் சின்ன விரல்கள் தோதாக இருக்கும். வயசுப் பெண்ணாய் இருந்தாலும் பார்ப்பதற்கு ஒல்லிப்பிச்சான் சிறுமிபோலத்தான் இருப்பாள்.
சிலமாதங்களுக்கு முன்பு தாக்கிய மஞ்சள் காமாலையில் செத்துதான் பிழைத்திருந்தாள். கிராம சுகாதார மைய மருந்துகளும், சக்திவேலின் கூடுதலான கவனிப்பும் பாவாடை தாவணிக்குள் அவளை உலவ விட்டிருக்கிறது. வேறு அவளுக்கு யார்தான் இருக்கிறார்? அம்மாவுக்கோ சட்டிப்பானை, மூட்டைத்துணி, விளக்கமாறு, தயிர் மத்து இதுபோல அவளும் ஒரு உருப்படி. இரண்டு பெண் பிள்ளைகள் வளர்ந்து வருவது அப்பாவுக்கு சிறு உறுத்தல். அவருக்கு நிம்மதி சாராயத்திலிருந்தது. அம்மாவுக்கு நிம்மதி சாமியில் இருக்கின்றது. வாரம் ஒரு கோவிலுக்கு சென்றுவருவாள். காணிக்கை நாணயங்களை துணியில் முடிந்துவைத்திருப்பாள். எல்லா சாமிகளும் அவளுக்குக் கடன்காரர்கள் தான். தலைமுடி தோளுக்கு வளர்ந்தால் போதும் ஏதாவதொரு திருக்கோயில் நாசுவனுக்கு வருமானம் வரும்.
"மசுரு வளருதுன்னு வெட்டுறா.. ஏங்.. தலைய வெட்டி சாமிக்கு போடறதுதான. சாமி கும்புடறா சாமி ஊர் ஒலகத்துல இல்லாத சாமி."
"கட்டுத் தறியில காலாட்டி பொழச்சாதான் நமக்கெல்லாம் சோறு. கால ரெண்டும் வெட்டி சாமிக்கி போடு. கடவுள் வந்து கஞ்சி வூத்துதா பாப்பம்" என்று வசைமாரி பொழிந்து தெருவில் காறி உமிழ்வார் கிருஷ்ணய்யா.
அப்பாவின் ஏசல்களுக்கு அம்மா எதிர்பேச்சு பேசாதது அவ்ளுக்கு எப்போதும் ஆச்சரியம். அப்பா குடித்துவிட்டு வந்தால் அம்மாவின் கோபம் அவள் மீதும் அவள் தங்கை மீதும் திரும்பி இருக்கும். அவர்கள் தானே எளிய இலக்கு. இதே கோபத்தை சபரீஸிடம் காண்பிக்க முடியுமா? சாப்பிடும் பொழுது தண்ணீர் சொம்பை " நங்" என்று வைத்தாலே முறைத்துக் கொண்டு சாப்பிடாமல் போய்விடுவான். இந்த கச்சடா விஷயங்களை காதில் போட்டுக் கொள்வதில்லை. அவனுக்கு விடிந்தால் போனால் அடைந்தால் வருவதற்கு ஒரு வீடு. விடிந்தால் பகலும், அடைந்தால் இரவும் எல்லோருக்கும் தானே வருகிறது. இப்படி ஒரு அண்ணன். ரேஷன் கார்டில் பெயரளவுக்கு மட்டும் ஒரு அண்ணன்.
அவளின் சுக துக்கங்களில் ஏந்தலாய் இருந்தது சக்திவேலும் வேம்பரசியும்தான். இருந்தாலும் அவர்கள் மீது அவளுக்கு பெரிய மரியாதையும் சிறு பயமும் இருந்துவந்தது. அம்மாவும் அப்பாவும் "சாமி" என்று அழைக்கின்ற முதலாளியல்லவா?
~~
காமாலைக்கு பின் இன்னும் மெலிந்து சோர்வுற்றிருக்கிறாள் சித்திராவதி. கிராம சுகாதார நிலைய மாத்திரைகள் அவளுடம்பில் பக்க விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அது "சித்தா"வுக்கும் "அலோபதி"க்கும் இடைப்பட்ட குழப்பத்தினால் வந்தது.
அன்னாசிப்பூக்களை ஒற்றி எடுத்தது போல் அங்கங்கு சில "அக்கிகள்" பூத்திருக்கின்றன. வெயிலோ வியர்வையோ பட்டால் ஊரலெடுக்கும். சொரிந்துகொண்டால் இதமாயிருக்கும். ஆனால் சொரிந்த இடத்தில் துர்நீர் சுரக்கும். இந்த துர்நீர் பட்ட இடங்களில் மேலும் சில அக்கிகள் பூக்கும்.
அம்மா பூசிவிடும் தேன்நிறக் களிம்பும், சைபாலும் தடவிய கொஞ்ச நேரத்துக்கு குளிர்ந்த நீரில் காலை அமிழ்த்தியது போல சில்லிடும். பின் அந்த துர்நீர் சுனைகளில் தானுமோர் அங்கமாகி கருப்பு வெள்ளை சதுரங்கக்கட்டங்களாய் பிரிக்கப்பட்டிருக்கும் சருமத்தில் ஒரு கட்டத்திலிருந்து இன்னொருகட்டத்திற்கு நகரும்.
"தேங்கெண்ணையில கொழச்சி அரிக்கிற எடத்துல போடு" என்று சக்திவேல் தந்த சல்ஃபனால் பொடியும் ஒரு வெள்ளை ஆறாக வழிந்தது. கையிடுக்குகளில் சேற்றுப்புண் போல் பிசுபிசுக்கும் சிறு அக்கிகள் தான் நமைச்சலெடுக்கிறது. கம்மல் சுரைகளையும், கழுத்திலிருந்த சிகப்புக் கயிற்றையும் கழற்றி வைத்துவிட்டாள். மஞ்சள், வேப்பிலை சேர்த்து அரைத்த பத்து கன்னத்திலும் காதிலும் அப்பி பச்சை சாத்தப்பட்ட அம்மன் சிலையென இருந்தாள்
கிராம சுகாதார மையத்தில் மருந்துக் காப்பாளனாக இருந்த மொய்தின் பாய் தான் தூரத்து வெளிச்சம். மிஷ்ன் ஆஸ்பத்திரி மருந்து மாத்திரைகளையும், குப்பியில் அடைக்கப்பட்ட தைலங்களையும் கொண்டுதருவார்.
"நீ கொஸ்ரம் நர்ஸ் அக்காத அடிகி தீஸ்கோணி வச்சா."
(I have asked the nurse to prescribe especially for you.)
"அயிதெ ஈ பத்து வேஸ்த்தே, சுருங்கி இருக்குன்னு சொன்னாங்க"
(But they told, these herpes were shrunk when i apply this cream)
"எவரு செப்பாரு?"
(Who tells)
"அம்மா"
(Maa)
"மீ அம்மா எமி டாக்ட்டர் லேது, கன்னதி பூசி கண்ட மாத்ராலு தின்னே வல்லா வச்சி உண்டொச்சாம் அனி செப்தா."
(Your mom is not a doctor, I'm sure, this one has come due to applying some unwanted cream and taking tablets.)
"விஷப்பல்லுபடிந்தா? ரோகமான்னி எவருகி தெலுசு?"
(May be a some poisonous bite or Leprosy. who knows.?)
"ரோக்க்காரின்னுதான் அப்பாவும் திட்டுறாரு. இப்புடு மீரும்."
(My father also scold me like that, Now you too.)
"அய்யய்ய.. அல எமி லேது, செப்பால அனி செப்பலேது."
(Nothing is like, just i wanted to say)
"பிக்மென்ட்டே., ஓக விட்டமின் உண்டே லோபம் வல்ல வஸ்துதி. மீ நானா தக்கர செப்பு ."
(White spots are due to lack of vitamins. It is due to lack of melanin pigments in the skin tissues, convey this to your father.)
"நே எந்துகு செப்பினானண்டே? தோல் டாக்டரு புத வாரம் தெல்லாரி உண்டாரு. வேசி சூசி வச்சாவண்டே இன்னத்தீனிக்கி இன்ன மந்துனி சரிக்கா ராசிஸ்தாருகதா"
(Why I’m saying this is? Skin doctor will be available on Wednesday morning, better book an appointment. So he will analyse and prescribe the correct medication for this)
"நர்ஸ் அக்காத செப்பி பெடத்தா., நுவ்வு அம்மணி பிலுசுகுனி ஓக தூரி ஆசி ரா."
(I will inform the nurse, take your mom along with you)
"அம்மா ராது"
(Mom won’t come)
"சரி, நானாகி தொடுக்கு போ"
(Or else, ask your father to come)
"அப்பா திட்டும்"
"சரி, ஒக்கடி செய், நேனு பொயப்புடு செப்புதா. நீ அம்மானிந்நோ, நானானிந்நோ பிலுசுகுனி போதாம்".
(Better do one thing, While I’m going, I will take your father or mother along with me.)
என்று ஆறுதல் கூறி வழியனுப்பிவைத்து, மறுநாள் சித்திராவதியை மிஷன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று திரும்ப அவள் குடிசையிலே விட்டுவிட்டுச் சென்றார் மொய்தீன் பாய்.
மருத்துவரின் நம்பிக்கை அளித்த வார்த்தைகளோடு சிறு புன்னகையொன்றை முகத்திலேந்தி குடிசைக்குள் நுழைந்தவளுக்கு குடித்துவிட்டு வன்மத்தோடு காத்திருந்த அப்பாவின் வசைமாரி வரவேற்பு காத்திருந்தது.
"இத்தனைக்கும் காரணம் நீ தான் லெஜ்ஜா முண்ட., சாயபு பிலகாகூட பொண்ண அனுப்பிட்டு லெஜ்ஜ பணி சூஸ்தாவோமோ." நாகவள்ளியை சுவற்றோடு அறைந்தார். சித்திராவதியின் கைகளிலிருந்த மாத்திரை மருந்துகளைப் பிடுங்கி வெளியே வீசினார். அது கழனிப் பானைக்குள் குமிழிகளாய் நுரைத்தது. முதுகில் விழுந்த அடியில் நிலைதடுமாறி சுதாரிப்பதற்குள் இடுப்பில் ஒரு மிதி விழுந்தது. நொறுங்கிய பானைகளோடு நொறுங்கிப் போய் கிடந்தவள், மறுநாள் மதியம் தூக்கிலிட்டுக் கொள்ளும் வரை யாரோடும் பேசவில்லை.
~~
"பேபி பேரு என்ன?"
"துர்கா"
"எத்தன வயசு?"
"ஒன்னரை வயசு டாக்டர்."
"ஐப்பசி மாச பிறவி. வையாசி பொறந்தாச்சில்லா., ஒரு வயசும் எட்டு மாசமும் ஆச்சு டாக்டர்" சக்திவேல் சொன்னதை திருத்திச் சொன்னார் நடராஜன்.
"நீங்க"
"கொழந்தையோட பெரியப்பா. இவனோட அண்ணன். நமக்கும் கவர்மெண்ட் உத்தியோகம்தான். குடியாத்தம் வில்லேஜ் ஆபீசுல வேலை. அங்கயே வீடும் கட்டி செட்டில் ஆயாச்சு. தம்பி பொஞ்சாதி முழுகாம இருக்கா பாத்துக்கோங்க, அதா நா கூட்டியாந்தது."
நடராசன் சொல்லிக்கொண்டிருந்த குலப்பெருமைகளை எதுவும் காதில் வாங்கிக் கொள்ளாது, பேபி டெஸ்கில் கிடத்தப்பட்டிருந்த துர்காவின் கால்களை கவனித்துக் கொண்டிருந்தார் மருத்துவர். தவளையின் பின்னங்கால்களை போல மடிந்து கிடந்தது அது.
"இதுக்கு முன்னாடி எங்க செக்கப் பண்ணீங்க?"
"வீட்டாண்டையே பாத்துக்கிட்டோம் டாக்டர். ஒருமாசம் முன்னமே குழந்தைக்கு நல்ல ஜுரம், தூக்கி நிப்பாட்டினா "பொதக்" "பொதக்" ன்னு விழ ஆரம்பிச்சிட்டா. ரெத்த மாதிரி சோதனை எடுத்து பார்த்தபின்னடிதான் இளம்பிள்ளை வாதமின்னு உறுதியா சொன்னாங்க.. கடைசியா போன வாரம் இங்க வந்து பாத்தேன், இன்னிக்கு வர சொல்லி அனுப்பினாங்க." என்று தான் கையில் வைத்திருந்த X-Ray, ஸ்கேன் மருத்துவ குறிப்பேடுகளை டாக்டரிடம் எடுத்து நீட்டினார் சக்திவேல்.
புருவத்தை குவித்து உச்சுக்கொட்டிய படி "போலியோ ட்ராப்ஸ் .. இதுக்கு முன்ன போலியோ டிராப்ஸ் கொடுத்தேங்களா..?" என்றார் மருத்துவர்.
"ஐஞ்சாவது மாசம் போட்டது டாக்டர்."
"ஒண்ணேகால் வயசுல? "
"அதுக்கு அப்பறம் போடல"
"இல்ல டாக்டர். வீடு அடக்கமா அம்மை போட்டிருந்திச்சு, இவனுக்கு, இவன் பொஞ்சாதிக்கு, குழந்தைக்கு. என்னோட வீட்டுக்காரிதான் கூடமாட இருந்து கவனிச்சுக்கிட்டா. அதனாலதான் தவறிப்போச்சு." சக்திவேலுவுக்கு ஆதரவான குரல் நடராசனிடமிருந்து வந்தது.
"சுலபமா சொல்லிடீங்க., நீங்க ஒரு வாய்ப்பை தவற விட்டதால இந்த குழந்தை ஒவ்வொருவாய்ப்பையும் தவற விடப்போறா. கஷ்ட்டமில்ல?"
"இத சரிப்படுத்த முடியாதா டாக்ட்டர்?"
"வராம தடுக்கத்தான் வேக்சின்."
"இந்த வைரஸ் மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால பக்கவாதத்தை ஏற்படுத்துது. ஒருமுறை இன்பெக்க்ஷ்ன் ஆயிடுச்சின்னா சீராக்குறது கஷ்ட்டம். நிரந்தரமான தசை வாதமோ, இடுப்பு, கணுக்கால், மற்றும் உடலோட இயக்க தசைகளல்ல உண்டாக்கிடுது. தொடர்ந்து கொடுக்கக்கூடிய பிஸியோதெரபியும், அறுவைசிகிச்சைகளும் பலன் தரலாம் ஆனா, பெரிய அளவில இருக்காது. வெளிநாடுகளைப்போல அட்வான்ஸ் சீராய்வுக்கருவிகளும், ஸ்பெஷலிஸ்ட்டுகளும் இங்க இல்லாதது இன்னும் பெரிய வருத்தம்."
"உங்க பேபிய பொறுத்தவரை இடுப்பிலிருந்து பாதம் வரை செயலிழந்துவிட்டது. இரண்டு கால்களும் நிமிர்த்தமுடியாம கொக்கி மாதிரி வளைஞ்சு இருக்கு கவனிசிங்களா?"
"பாராலிடிக் போலியோ, இயக்க செயல்பாடுகளுக்கான மோட்டார் செல்கள் முளை பகுதியில் சிதைவடைந்திருக்கறதால எலும்பு வளர்சிதைவு, தசை அழற்சி போன்ற சிக்கலான பிரச்சினைகள் வளர வளர உண்டாக்குறதுக்கான வாய்ப்புகளே அதிகம்."
"இப்போ, அறுவை சிகிச்சை மூலமா வளைந்த கால்களை நேராக்க முற்சிப்போம். தொடர்ந்து பிஸியோதெரபி மூலமா பலன் தெரியுதான்னு பாக்கலாம். பெங்களூருல இருந்து மருத்துவக் குழு அடுத்தமாசம் இங்க முகாம் இடுவாங்க, கலந்து ஆலோசிச்சு நாலு மாசத்திற்குள்ளே ஆப்பரேசன் பிக்ஸ் பண்ணிடலாம்" என்றார்.
பயமுறுத்தும் எலும்புக்கூடுகளும், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மண்டையோடு, கை கால் மூட்டு சுண்ணாம்பு மாதிரிகளுக்குமிடையே உதிர்ந்த மலரைப் போல் டர்க்கி டவலில் உறங்கிக் கிடந்தாள் துர்கா.
~~
ஆற்றிற்கென பொதுவிதி ஏதுமில்லை. எல்லா ஆறுகளும் மலைதோன்றி கடல் கலக்க அவசியமுமில்லை. எல்லா ஆறுகளும் கடல் காண்பதுவுமில்லை. எல்லா ஆறுகளும் இன்னொரு ஆற்றுடன் இணைந்து கிளைபரப்பி தன்னைத் தானே விஸ்தரித்துக் கொள்வதுமில்லை. சிற்றணைகளில் தேங்கும் ஆறுகள் எந்நாளும் உயிர்ப்போடிருக்கின்றன. விதி வசத்தால் வறழ்நிலம் கடக்கும் ஆறுகள் சுடுமணலால் உறிஞ்சப்பட்டு தற்கொலைக்கு கட்டாயப் படுத்தப்படுகின்றன.
நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகளாய் வெய்யிலில் பளபளக்கும் பாலாறு பேரமைதியுடன் நகர்ந்து கொண்டிருந்தது. பாலாற்றுப் பாலத்திற்கு மேலே இறக்கை விரித்த பறவையைப் போல் சைக்கிள் சக்கரங்களுக்குக் கீழே மூவரின் நிழலும் பறந்துகொண்டே வந்தது.
தூண்டில் முள்ளிள் சிக்கி இருந்த மீனைப் பிடித்து கரையில் தூக்கி எறிந்தான் சட்டையணியாத சிறுவனொருவன். தூண்டில் முள் பாய்ந்த செவ்வுளிலிருந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. நீருக்கும் கரைக்கும் ஒன்றரையடி தூரம்தான். துள்ளினாலோ, உருள முயற்சித்தாலோ மறுமுறை உயிர்தெழ சாத்தியம் அம்மீனுக்கு. திறந்திருந்த ஒரு கண்ணில் மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. தூக்கத்தில் மார்பு சுவைக்கும் குழந்தையின் உதடுகளைப் போல காற்றை உள்ளிழுத்து காற்றை வெளியேற்றியது அம்மீன்.
வால் துடுப்பிற்கு மட்டும் வாழ ஆசை இருந்தது போல் துடித்தது. பெலங்கொண்டமட்டும் துடுப்பை அசைத்து சகதியிலிருந்து வெளியேற முயற்சித்தது. இன்னும் இரு துள்ளல்களில் அதற்கான பெருவழி கலங்கலாக ஓடிக்கொண்டிருந்தது. கடைசி துள்ளல் அதற்குள் சிறுவனின் குதிகால் மீனின் தலையை நசுக்கியது. நெடுந்துயர்ந்த வாமனனாய் மச்சத்தின் தலையில் கால்பதித்தான். கடவுளரே அசுரர்கள். அசுரர்களே கடவுளர். கடைசி பிரயாசையில் வால் மட்டும் துடித்தபடி அடங்கிப் போனது.
~~
அந்த நாளில், வழக்கத்தை விட சீக்கிரமாகவே வழக்கத்தை விட சீக்கிரமாகவே வந்திருந்தாள் சித்திராவதி. கோறாக்களை மடித்து அதனதன் இடத்தில் அடுக்கி, தறிக்கூடத்தைப் பெருக்கி சுத்தம் செய்தாள். காய்ந்த மாலைகளை அப்புறப்படுத்தி புதிய முல்லைச் சரத்தை கெங்கையம்மன் உருவப்படத்திற்கு சாத்தினாள். ஊதுபத்தியின் மணம் கமழ அந்நாளின் பணிகளைச் செய்ய ஆயத்தமானாள். கஞ்சி தோய்த்த பாவை தக்களியில் சுழற்றினாள். துண்டுவிழுந்த நூலை எச்சில் நனைத்து உருட்டி ஒன்றுசேர்த்து தார்குச்சியில் சுற்றினாள். வெள்ளி ஜரிகை நூல்கண்டை மண்ணெண்ணெய் நிரம்பிய பாத்திரத்திற்குள் முழுக்கினாள். மண்ணெண்ணெயின் குளுமை அக்கிகளின் மீது படரும் போது இதமாய் இருந்தது. நீண்ட நேரம் விரல்களை மண்ணெண்ணெய்க்குள் அழுத்தி வைத்திருந்தவள் கைகளை துணியால் அழுந்தத் துடைத்தாள். பெரிய தறியில் கிளிப்பச்சை நிற பட்டு பாதி நெய்தபடி மடித்து வைக்கப்பட்டிருந்தது. சேலையின் ஓரங்களில் அரை முழ நீள பார்டர் கருஞ்சிகப்பு வர்ணத்தில் தங்க ஜரிகைகளால் மினுமினுத்தது. உடல் பகுதியின் மையத்தில் தங்க ஜரிகை நட்சத்திரங்களை சுற்றி, வெள்ளி ஜரிகைப்பூக்கள் சிதறிக்கிடந்தன. பாதி மலர்ந்த மலர்கள் படமரத்தில் சுற்றிவைக்கப்பட்டிருந்தது. வீணையின் ஸ்வரக்கம்பிகளை மீட்டுவதுபோல் படரும் நூலை வருடினாள். புட்டாக்களின் மென்மை குழந்தையின் கன்னத்தைப் போலிருந்தது. தறிப் பலகையில் அமர்ந்துகொண்டு அலகு போடும் கத்தியின் வளைவான சிறுமுனையால் நகங்களுக்கிடையே இருந்த பிசிறுகளைக் கிள்ளி எறிந்தாள்.
"என்ன சீக்கிரமா வந்திருக்க"
"அப்பா வரலையா.?"
அறைக்குள் நுழைந்த சக்திவேலின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மௌனம் மட்டுமே சித்திராவதியிடம் இருந்து பதிலாய் வந்தது.
"என்ன பண்ணிட்டு இருக்க?"
"அலகு போடற கத்தியால சிரங்க நோண்டிட்டு இருக்கியா.?"
"அம்மனுக்கு நேர்த்திக்கடனுக்கு நெய்யிற புடவையாக்கும். துர்நீர் பட்டு அழுக்காக்கிடாத."
"நீ இங்க ஒன்னும் வேல செய்யவேண்டாம். உள்ள வேற வேல ஏதாச்சும் இருந்தா பாரு"
என்று சிடுசிடுப்புடன் கடிந்துகொண்டார். பதிலேதும் பேசாமல் அவ்விடத்தைவிட்டு நகர்ந்து சென்றவள்தான். இனி எப்போதும் பதில் தர முடியாத தொலைவுக்கு, இனி எப்போதும் திரும்பிவர முடியாத தூரத்திற்கு சென்றுவிட்டாள்.
தாய் தகப்பனைப் போல தானும் அவளைத் திட்டியதால் தான் அவள் தன்னை இப்பாரத்திலிருந்து விடுவித்திக் கொண்டாள். அவளின் முடிவுக்குத் தானும் ஒரு காரணியாக இருந்திருக்கக்கூடும் என்ற குற்ற உணர்ச்சி மீனின் தலையில் சிறுவனின் குதிகாலைப்போல் சக்திவேலின் மனதை அழுத்திக் கொண்டிருந்தது.
நெற்றியிலிருந்து மூக்கு நுனியில் வழிந்த வியர்வைத் துளியில் குட்டிச் சூரியன் பிரகாசித்தது. வெய்யிலின் உக்கிரம் தலையை கிறுகிறுக்கச் செய்தது. பாதம் பெலம் இழந்து சைக்கிளின் பெடல் பின்புறம் சுழன்று, சைக்கிள்செயின் கழன்றது.
~~
"இன்னும் கண்ணு முழிக்கல, நல்ல சோர்ந்து போய் இருக்கா."
"நாலுமாசம்ன்னு சொன்னாக்க, பிரசவமும், ஆபரேசனும் ஒரே நேரத்துல வரும் இல்ல?"
"ரெண்டு அலைச்சல், ரெண்டு செலவு."
"சரி, நேரமா கிளம்புறேன். காப்பு கட்டிருக்கு ராத்திரி தங்கக் கூடாது."
"அடுத்த வருச திருவிழாக்குள்ள எம் பொண்ணு எழுந்து நடக்க ஆரம்பிச்சிட்டா, நூத்தியெட்டு தேங்கா உடைக்கிறேன் தாயே" என்று தலைக்குமேல் கரம் உயர்த்தி சூரிய திசை நோக்கி கும்பிட்டார் சக்திவேல். கூப்பிய கரங்களின் நிழல், நீர்த்தாவர மலரென தரையில் மலர்ந்தது.
~~
ரேணுகாதேவியுடன் கமண்டல நதி ஓரம் தனது தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார் ஜமதக்னி முனிவர். இவர்களுக்கு விசு, விசுவாஸ், விஸ்வரூபன், பரஞ்சோதி, மற்றும் விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் என ஐந்து மகன்கள். ரேணுகாதேவி தனது கற்புத்திறத்தால் ஆற்று மணலில் குடம் செய்து கணவனின் பூஜைக்கு தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். அன்றும் வழக்கம்போல் குடம் செய்து தண்ணீர் நிரப்பும் போது, வான்வழியே சென்ற கந்தர்வனின் அழகை பார்த்து வியக்கும்போது குடம் சிதறுகிறது. கணவனிடம், காட்டு விலங்கு துரத்தியதால் குடம் சிதறியதாக பொய் கூறிய ரேணுகாதேவியை முற்றும் உணர்ந்த ஜமதக்னி ஆவேசமடைகிறார். தாயின் சிரத்தை கொய்து வர மகன்களுக்கு ஆணையிடுகிறார்.
அவர்களில் பரசுராமன் மட்டுமே, இரண்டு வரங்கள் கேட்டுப்பெற்று தந்தையின் ஆணையை சிரமேற்கொண்டு புறப்படுகிறார். மற்றவர்கள் தந்தையின் சாபத்துக்கு ஆளாகின்றனர். கையில் கோடாரியுடன் அன்னை ரேணுகாதேவியை துரத்தி சென்ற பரசுராமனிடம் இருந்து ஓரிடத்தில் சண்டாளச்சி என்ற அருந்ததி பெண்ணை கட்டியணைத்து தன்னை காக்குமாறு வேண்டுகிறாள். அப்பெண் பரசுராமனை தடுத்ததால் ஆவேசமடைந்தவர் கோடாரியை வீச, ரேணுகாதேவி, அருந்ததி பெண் இருவரது சிரங்களும் தரையில் விழுகின்றன.
தன்னை அறியாது, தான் செய்தது பிழை என்று அறியாது நிகழ்ந்த சிறு தவறுக்காக பெரு முனிவரின் கோபத்திற்கு ஆளாகி தன்னுயிரை இழந்திருக்கிறாள் அன்னை ரேணுகாதேவி.
தாயின் சிரத்தை தந்தையின் காலடியில் சமர்ப்பித்து கதறி அழுத பரசுராமனை தந்தை ஜமதக்னி, ஆசீர்வதித்து என்ன வரங்கள் வேண்டும் என கேட்க, உடன்பிறந்தோர், தாய் மற்றும் தாய்க்காக சிரம் தந்த அருத்ததி பெண் ஆகியோர் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கேட்ட அவரும் வரம் அருள, உடன்பிறந்தவர்கள் உயிர் பெறுகின்றனர். பின்னர் தந்தை தந்த கமண்டல நீருடன் சிரங்களை வேகமாக எடுத்துச் சென்று உடல்களில் பொருத்தி புனிதநீரை தெளிக்க ரேணுகாவும், அருந்ததி பெண்ணும் உயிர்பெறுகின்றனர். ஆனால், தாயை உயிர்ப்பிக்கும் அவசரத்தில் தலைகளை உடல் மாற்றி பொருத்தி விடுவதால் அன்னை ரேணுகாதேவி கெங்கையம்மனாக மக்களுக்கு காவல் காத்து அருள்புரிகிறாள். ரேணுகா தேவியின் தலை சண்டாளச்சி உடலோடு பொருத்தப்படும் நிகழ்வே "சிரசுத் திருவிழா" வாக கொண்டாடப்படுகிறது.

(புட்டா*)

Comments
Post a Comment