Posts

"அரியது கேட்கின்" நாவல் அத்தியாயம் 4"

Image
"அரியது கேட்கின்"  4.  புட்டா   படமரத்தில் பாதி நெய்த புடவையைச் சுற்றி வைத்திருந்த துணியை எடுத்து உதறினார். ஒரு வார தூசியும் ஜரிகைப் பிசிறுகளும் சாரளத்தின் வழியாக தறிக்கூடத்திற்குள் விழுந்த காலைச் சூரிய ஒளியில் பொன்னிற துணுக்குகளாய் மின்னி மறைந்தது. "பூட்டியே வைத்திருந்தாலும் புழங்காத அறைக்குள் இத்தனைதூசி எப்படித்தான் வருகிறதோ?" என்று அலுத்துக் கொண்டு தறிக்கூடத்தை பெருக்கிக் கொண்டிருந்தார் சக்திவேல். தறிக்கூடத்தின் பின் பகுதியில் பழமையான இரு குழித்தறிகள் எதிரெதிரே அமைந்திருந்தன. புதிதாய் நிர்மாணிக்கப்பட்டிருந்த மேடைத்தறி, தறிக்கூடத்தின் முன்பகுதியை முக்கால் பங்கு வியாபித்திருந்தது. எதிர் பலகைக்கு எதிரே இருந்த சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கெங்கையம்மனின் படத்தில் சந்தனமாலை சாத்தப்பட்டிருந்தது. சந்தன மாலையின் மூன்று ஆரங்களும் முடியுமிடத்தில் சிகப்பு நிற பட்டுக் குஞ்சம் ஒட்டடை படிந்து சடைபிடித்த குடுமியைப்போல் சிறுத்திருந்தது. மேடைதறியின் சட்டங்கள் பளபளத்துக் கிடந்தன. உட்க்காரும் இடம் மட்டும் சற்றே மெலிந்து சிறு பள்ளமாய் தேய்ந்திருந்தது. குழித்...

"அரியது கேட்கின்" நாவல் அத்தியாயம் 3

Image
" அரியது கேட்கின் "     3. வீடு திரும்பல்   கண்ணாடி எதையும் மறைத்துவைத்துக் கொள்வதில்லை. கண்ணாடி வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தன்வழியே கடந்து செல்ல அனுமதிக்கிறது. கண்ணாடியின் நிழல் மட்டுந்தான் நிஜமான ஒளியாகவும் இருக்கிறது.  நிழலும் சுடும், நிழலும் நிஜம்; கண்ணாடி ஒரு அறிவியல் முரண்.  சொல்லப்போனால் நிழல் தான் நிகழ்வின் சாட்சியமாக நிற்கிறது. பேரன்பின் சாட்சியமாய், அந்தரங்கங்களின் பார்வையாளனாய், தனிமையின் துணையாய், ஈருடல் பிணைந்திருக்கும் காமத்தில் உடல் மேல் உடலாய், எல்லா பருப்பொருளுக்கும் நிழலுண்டு.  பிணத்திற்கும் கூட நிழலுண்டே, அசைவற்ற நிழல். புதைக்கப்பட்ட நிழல் வளர்ந்து ஒரு மரமாகி நிழல்தருகிறது. பிடிசாம்பலாய் கரைக்கப்பட்ட நிழல்  ஒரு நீர்த்தாவரமாகிறது. நினைவுகளாகி சில நிழல் கள்  நிலைபெற்று நின்று விடுகிறது. அங்கு நினைவுகள் வளர்ந்து மரமாகிறது .  மருத்துவமனை வளாகத்தின் வேப்பமரக்காற்று அறைக்குள் நுழைந்து திரைச் சீலைகளை படபடக்கச் செய்தது. போர்வையை விலக்கி நான்கு விரல்களை நெற்றியில் பதித்து "பிள்ளைக்கு காய்ச்சல...

"அரியது கேட்கின்" நாவல் அத்தியாயம் 2

Image
"அரியது கேட்கின்" 2. வாசனை இருள் கவிழ்ந்திருந்தது. யார் இறந்தாலும் யார் பிறந்தாலும் இரவும் பகலும் வந்துகொண்டுதானிருக்கிறது. எத்தனை கோடி வாழ்வையும், எத்தனை கோடி சாவையும் கண்ணுற்றாலும்,  நித்தியத்துவமாய், வரலாற்றின் ஒரு நிரந்தர சாட்சியாய் காலம் மட்டுமே நிற்கிறது. காலத்திடமிருந்தே சகலமும் தோன்றுகிறது. காலமே சகலத்தையும் தோற்றுவிக்கிறது. கடைசியில் காலத்திடமே சகலமும் வந்து முடிகிறது. காலமே சகலமும், சகலமுமான கடவுளும். கடவுளை நம்புவோர்க்கு காலமே கடவுள். காலத்தை நம்புவோர்க்கு கடவுளே காலம். காலந்தான் கடவுளைக்கூட நிர்ணயிக்கிறது இல்லையா ? கடவுள் வாழ்ந்த காலம் தான் மனுதர்மத்தின் வழிகாட்டுதலாகிறது, அவர்களின் தீர்க தரிசனங்கள்  தர்மங்களாகிறது. அவர்தம் கொள்கைகள் பின்பற்றப்பட்டு சமயமாகிறது. வழிபாட்டு முறைகள் மதங்களாகிறது. காலத்தின் உரைக்கல்லாய் வாழ்ந்துமுடித்த ஒருமனிதன் கடவுளென்றே உறைகிறான். மாலைகள் சூட்டப்பட்ட ஒரு கடவுளைப்போல் உறைந்திருந்தார் சக்திவேல். சக்திவேலின் இரண்டாவதுமகள் சரண்யா கணவர் மணிகண்டன், குழந்தை நந்தினியோடு வந்திறங்கினாள். சற்று நேரத்தில் அவரது அண்ணன் நடராசன் குடு...